சனி, 31 ஆகஸ்ட், 2019

"உலகளாவிய ஆளுமை" #அம்பேத்கர்_யாருக்குச்_சொந்தம்?


"உலகளாவிய ஆளுமை"
#அம்பேத்கர்_யாருக்குச்_சொந்தம்?

125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள்? நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என அளவிடுவோம். ஆனால், `அம்பேத்கரை மதிப்பிடும்போது மட்டும் இந்த விதியைத் தலைகீழாக மாற்றவேண்டும்' என்கிறார் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா. `நம் காலத்தைக்கொண்டு அம்பேத்கரை மதிப்பிடவேண்டியது இல்லை. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு நாம் வாழும் சமூகத்தை நாம் மதிப்பிடவேண்டும்' என்கிறார் அவர். அவ்வாறு செய்யும்போது அம்பேத்கரின் உருவம் மிகப் பிரமாண்டமாக நம் முன்னர் எழுந்து நிற்கிறது.

`தலித் தலைவர்’ என்று மட்டும் அல்ல, `இந்தியத் தலைவர்’ என்றும்கூட இனி அவரை நாம் குறுக்கிவிட முடியாது. முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபை, அம்பேத்கரை ஓர் உலகளாவிய ஆளுமையாக அங்கீகரித்து, அவருடைய 125-வது பிறந்த தினத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடியிருக்கிறது. `அவர் காலத்தைவிட இன்றுதான் அம்பேத்கர் நமக்குத் தேவைப் படுகிறார்' என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க்.

`ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலைக்காக மார்டின் லூதர் கிங் குரல்கொடுத்தார் என்றால், தலித்துகளின் விடுதலைக்காக அம்பேத்கர் போராடினார்' என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். `ஏப்ரல் 14-ம் தேதியை சர்வதேச சமத்துவ தினமாக அறிவிக்க வேண்டும்’ என்னும் கோரிக்கையும் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஐ.நா-வும் ஹார்வர்டும் கொண்டாடியது இருக்கட்டும், இங்கே நடப்பது என்ன? கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத போர் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் யாருக்கானவர்? `சந்தேகமே இல்லை, அவர் ஒரு காங்கிரஸ்காரர்' என்கிறார் ராகுல் காந்தி. இன்னபிற காங்கிரஸ் தலைவர்களும்கூட இதையே வழிமொழிகிறார்கள். `நேருவின் அமைச்சரவையில் பங்கேற்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை எங்களுடையவர் என்றுதானே அழைக்க முடியும்’ என்னும் தர்க்கத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

`கிடையாது, அம்பேத்கரை உரிமை கொண்டாடும் உரிமை, நியாயப்படி எங்களுக்கு மட்டுமே இருக்கிறது' என்கிறார் பா.ஜ.க-வின் தலைவர் அமித் ஷா. `காங்கிரஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் அம்பேத்கருக்காக எதையுமே செய்யவில்லை’ என்கிறார் அமித் ஷா. `முந்தைய பா.ஜ.க ஆட்சியில்தான் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்தியப்பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த `மாவ்' என்ற இடத்தில் முதன்முறையாக நினைவகம் கட்டப்பட்டது மோடி ஆட்சியில்தான். இங்கே வருகை தந்து, மாலை அணிவித்த முதல் பிரதமர் மோடிதான்’ என்கிறார் அமித் ஷா. `பாபா சாகேபின் கனவை நனவாக்கிக் கொண்டிருப்பவர் மோடி மட்டும்தான்’ என்கிறார் அவர்.

தன் சமீபத்திய உரைகள் அனைத்திலும் அம்பேத்கரின் பெயரை உணர்ச்சிபூர்வமாக உச்சரித்துவருகிறார் நரேந்திர மோடி. `சாலை அமைப்பதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் 80 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது; 2018-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கப்படும்' எனத் தொடங்கி தலித்துகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை முன்வைத்து ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை பிரசாரக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது பா.ஜ.க. `பாபா சாகேபின் காலடியின்கீழ் பணியாற்றுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்' என்றும் அறிவித்திருக்கிறார் மோடி.

காங்கிரஸ் அம்பேத்கருக்காக எதுவும் செய்ய வில்லை என்பது உண்மை. அதேபோல், பா.ஜ.க உருப்படியாக எதுவும் செய்யப்போவது இல்லை என்பதும் உண்மை' என்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ராகுல் காந்தி, அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடுவதை மட்டும் அல்ல, பா.ஜ.க அவ்வாறு செய்வதையும் சேர்த்தே பரிகசிக்கிறார் மாயாவதி.

`அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி அவரைக் கீழ்மைப் படுத்தும் செயலையே இந்த இரு கட்சிகளும் செய்துவருகின்றன. பாபா சாகேப் எங்கள் தலைவர்' என்கிறார் அவர்.

அம்பேத்கர், சட்ட அமைச்சராகப் பணியாற்றியபோதும் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோதும் அவரைக் கடுமையாக விமர்சித்து கிண்டலடித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்'. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை அம்பேத்கர் முன்மொழிந்தபோது, அதை `இந்து மதத்தின் மீதான குரூரமான தாக்குதல்’ எனக் கண்டித்து, நூற்றுக்கணக்கான தர்ணாக்களையும் ஆர்ப்பாட்டங் களையும் முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ். இந்து சட்ட மசோதா வாபஸ் வாங்கப்படும் வரை அவர்கள் ஓயவில்லை. அதே ஆர்கனைசரின் கடந்த இதழின் அட்டையில் அம்பேத்கர் இடம்பெற்றிருந்தார். `மாபெரும் ஒருங்கிணைப்பாளர்' என்றும் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸாலும்கூட அம்பேத்கரை உரிமை கொண்டாட முடியாது என்பதே நிஜம். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்ததைப்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தியபோது, காந்தி அதை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் இருந்ததும், வேறு வழியின்றி 1932-ம் ஆண்டு பு
னே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன் கோரிக்கையை அம்பேத்கர் திரும்பப்பெற்றுக்கொண்டதும் நினைவுகூரத்தக்கது.

1937-ம் ஆண்டில் பாம்பே பிரசிடென்சி தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டபோது, அவருக்கு பாடம்புகட்ட விரும்பிய காங்கிரஸ், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான பால்வான்கர் பாலோவை அம்பேத்கருக்கு எதிராகக் களம் இறக்கியது. அம்பேத்கருக்கு நன்கு பழக்கமான, அவரால் பாராட்டப்பட்ட பாலோவும் தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான். அம்பேத்கரை வீழ்த்த அவரைவிடப் புகழ்பெற்றவரான இன்னொரு தலித்தை நிறுத்தும் இந்தச் சமயோசிதமான யோசனையை முன்வைத்தவர், மோடி வழிபடும் மற்றொரு தலைவரான வல்லபபாய் படேல் எனச் சொல்லப் படுகிறது. `பாலோவுக்கு வாக்களித்தால் புனே ஒப்பந்தத்துக்கு வாக்களிப்பது போல’ எனச் சொல்லியே பிரசாரம் மேற்கொண்டது காங்கிரஸ். பாலோவைத் தோற்கடித்தார் அம்பேத்கர்.

பின்னர் காங்கிரஸ் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இடம்பெற்றார் என்றபோதும், இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற நேரு அரசு முன்வராததைத் தொடர்ந்து, தன் பதவியை அம்பேத்கர் துறந்தார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கரை வீழ்த்த அதே சாதி அரசியலைத்தான் காங்கிரஸ் கையாண்டது. மகர்சாதியினரோடு சமூகரீதியில் போட்டி யிடும் சாமர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அம்பேத்கருக்கு எதிராகக் களம் இறக்கி அவரைத் தோற்கடித்தது.

காங்கிரஸுடன் அம்பேத்கர் கொண்டிருந்த முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள இன்று துடிக்கின்றன பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும். ஆனால், அது அத்தனை சுலபம் அல்ல. காரணம், இந்துத்துவர்களிடம் அம்பேத்கர் கொண்டிருந்த முரண்பாடுகள் மிகக் கூர்மையானவை. `இந்த நாட்டுக்கு நேரக்கூடிய மிகப் பெரிய அபாயம் இந்து ராஜ்ஜியம்தான்' என்பது அம்பேத்கரின் உறுதியான நம்பிக்கை. `இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மனித லட்சியங்களுக்கு எதிரானது' என மீண்டும் மீண்டும் தன் படைப்புகளில் வலியுறுத்தியிருக்கிறார் அம்பேத்கர். இத்தகைய ஒரு மதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்றும் `சாதி ஒழிப்பு’ என்னும் தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர். பாபா சாகேபின் காலடியில் பணியாற்ற விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இந்த ஒன்றை மட்டுமேனும் செய்ய முன்வருவார்களா?

அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது பிரிவினர்... இடதுசாரிகள். சீத்தாராம் யெச்சூரி, பிரகாரஷ் காரத் எனத் தொடங்கி இடதுசாரி கட்சித் தலைவர்கள் பலரும் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசிவருவதைப் பார்க்கிறோம். பா.ஜ.க-வும் காங்கிரஸும் அம்பேத்கரை அபகரித்துக்கொள்ள முடியாது எனத் திட்டவட்டமான ஆதாரங்களுடன் இடதுசாரி சிந்தனையாளர்கள் நிறுவிவருகின்றனர். அது உண்மைதான், அதே சமயம் அம்பேத்கரை ஓர் இடதுசாரி என அவர்களால் இதேபோல் நிறுவிவிட முடியாது. காரணம், அம்பேத்கர் மார்க்சியத் தோடும் முரண்பட்டவர்.

ஆய்வாளரும் எழுத்தாளருமான அனன்யா வாஜ்பேயி சமீபத்தில் எழுப்பியுள்ள கேள்வி முக்கியமானது. `அம்பேத்கருக்காக ஏன் இடதுசாரிகள் இவ்வளவு தாமதமாகக் குரல் கொடுக்கிறார்கள்? அவர் வாழ்ந்த காலத்தில் ஏன் அவர்களால் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட முடியவில்லை? வர்க்கத்துக்கும் வர்க்க வேறுபாட்டுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, ஏன் சாதிக்கும் சாதியப் பாகுபாடுக்கும் இடதுசாரிகள் கொடுக்கவில்லை?'

சாதி அமைப்பு, பிராமணியம், இஸ்லாம், மொழி, பாகிஸ்தான், பொருளாதாரம், மதமாற்றம், வர்க்க அரசியல் எனத் தொடங்கி அம்பேத்கர் கொண்டிருந்த சிந்தனைகளையும் வரித்துக்கொண்டிருந்த கனவுகளையும் கவனமாக ஆராய்ந்தால், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் பா.ஜ.க-வினரும் மட்டும் அல்ல, இடதுசாரிகளாலும்கூட அம்பேத்கரோடு முழுமையாக உடன்பட முடியாது என்பதே யதார்த்தம். இது, இந்த மூன்று தரப்பினருக்கும் அம்பேத்கருடன் ஒன்றிணையும் புள்ளிகள் மட்டும் அல்ல, முரண்படும் புள்ளிகள் என்னென்ன என்பது மிக நன்றாகத் தெரியும். அம்பேத்கரோடு டையாளப்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல்களை அவர்கள் முழுமையாக உணர்ந்திருக் கின்றனர். இருந்தும் அம்பேத்கரோடு அவர்கள் நெருங்கிவருவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.

அவர்கள் அனைவருக்கும் அம்பேத்கர் தேவைப் படுகிறார். உலகளாவிய அளவில் பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் கூர்மை அடைந்திருக்கும் நிலையில், அம்பேத்கரை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் ஐ.நா-வுக்கு மட்டும் அல்ல, காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடதுசாரிகளுக்கும்கூட ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. தன் காலத்தைச் சேர்ந்த காந்தி, நேரு, படேல் போன்ற தலைவர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக உயரத்தை அம்பேத்கர் இன்று அடைந்திருக்கிறார். அவர்கள் யாரும் பெற்றிராத ஓர் அதிசயத்தை அம்பேத்கர் பெற்றிருக்கிறார். அது, வாக்குவங்கி!

ஒவ்வொரு நாளும் அம்பேத்கரின் மதிப்பும் செல்வாக்கும் புகழும் உயர்ந்துகொண்டே இருப்பதற்குக் காரணம் இதுவே. அதனால்தான் அம்பேத்கரை ஏற்காதவர்களும்
அம்பேத்கருடன் நேரடியாக முரண்பட்டவர்களும் அவருக்கு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களும்கூட போட்டி போட்டுக்கொண்டு அவரை அபகரிக்கத் துடிக்கிறார்கள்.

டெல்லியிலும் (சிவில் லைன்ஸ்) லண்டனிலும் (பிரிம்ரோஸ் ஹில்) அம்பேத்கர் வசித்த வீடுகளைப் பெரும் பொருட்செலவில் உருமாற்றி, பளபளப்பூட்டி அம்பேத்கரின் பெயரில் அருங்காட்சியகங்களை அமைத்துவருகிறது மோடி அரசு. அம்பேத்கரின் சிலைகளும் அவர் உருவம் பதித்த அழகுப் பொருட்களும் வீதிகளை நிரப்பிவருகின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியோடு அம்பேத்கர் இறந்து 60 ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன என்பதால், இனிவரும் காலங்களிலும் அம்பேத்கர் புகழ்வெளிச்சத்தில்தான் இருக்கப்போகிறார்.

நிஜத்தில், அம்பேத்கர் யாருக்கானவர் என்பதை மட்டும் அல்ல, யாருக்கானவர் இல்லை என்பதையும் சமீபத்திய சில நிகழ்வுகள் நமக்குத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றன. அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை படோடாபமாகக் கொண்டாடித் தீர்க்கிறது அரசு. ஆனால், அம்பேத்கரை முன்வைத்து பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் இடதுசாரி மாணவர்கள் தங்கள் அரசியலைக் கட்டமைத்துக் கொள்ளும்போது, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிப் போராடும்போது பாய்ந்துவந்து ஒடுக்குகிறது அரசு. சென்னை ஐ.ஐ.டி-யிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் உண்மை இதுதான். அம்பேத்கர் என்பது, ஓர் அடையாளம். அது ஓர் வாக்கு வங்கி. அது ஒரு ஜடப்பொருள். அவ்வாறு இருக்கும் வரை அம்பேத்கர் வழிபடத்தக்கவர். மற்றபடி அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு உயிர்கொடுக்க முயன்றால், அம்பேத்கரின் கனவுகளை மெய்ப்படுத்த முயன்றால், அது தங்களின் அதிகாரத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பது ஆட்சியாளருக்குத் தெரியும்.

அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட முயன்றதால்தான், ரோகித் வெமுலா தன் உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது. `மனிதன் என்பவன், ரத்தமும் சதையுமான ஒரு ஜீவன் அல்ல. இங்கே அவன் சிந்தனைகளுக்கு மதிப்பு இல்லை. அவன் ஓர் எண், ஒரு வாக்கு, வெறுமனே ஒரு சாதி அடையாளம், அவ்வளவுதான்' என்று தன் தற்கொலை கடிதத்தில் எழுதினார் ரோஹித் வெமுலா.

அம்பேத்கருக்காகப் போட்டியிடு பவர்கள்கூட அவரை இப்படித்தான் பார்க்கி றார்களா? ஒரு சாதி அடையாளமாக, வாக்கு வங்கியாக மட்டுமே குறுக்குகிறார்களா? அப்படி யானால், நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். அம்பேத்கருக்காக உரிமை கோரும் கட்சிகளிடம் இருந்து அவரை மீட்டெடுத்து, அவர் யாருக்கு மெய்யாகத் தேவைப்படுகிறாரோ அவர்களிடம் அவரைச் கொண்டுசேர்க்க வேண்டும்.

வகுப்புவாதமும் சாதிய ஏற்றத்தாழ்வும் ஆணவக் கொலைகளும் பெருகிக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலுக்கு, முன்னர் எப்போதையும்விட தீவிரமாக அம்பேத்கர் தேவைப்படுகிறார். அந்த அம்பேத்கர், அனைத்துக் கட்சிகளையும் கடந்து நிற்கிறார். கட்சிகளுக்கு அவர் தேவைப்படலாம்; அவருக்குக் கட்சி தேவைப்படாது. இடது என்றோ வலது என்றோ அவரை முத்திரை குத்தவேண்டிய தேவை இல்லை. எந்த முகாமிலும் அவரைச் சிரமப்பட்டுத் திணிக்கவேண்டிய தேவை நம்மில் யாருக்கும் இல்லை. அவ்வாறு திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, நாம் பொருட்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. ஆடம்பர அருங்காட்சியகங்களும் ஐ.நா விழா கொண்டாட்டங்களும் அவருக்குத் தேவைப்படாது. அவர் அடையாள அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்.

அம்பேத்கரை எல்லோரும் ஏற்க முடியாது போனாலும், அவர் எல்லாருக்குமானவர்தான். அவரை வலுக்கட்டாயமாக மறுதலிப்பவர் களுக்குக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் அவர் தேவைப்படுவார். மிக வாஞ்சையோடு அவரை அரவணைப்பவர்களோடும்கூட அவர் முரண்படவே செய்வார்.

அம்பேத்கர், ஓர் இடத்தில் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்..

`நான் ஒரு கல். என்னை எதைக் கொண்டும் உருக்கிவிட முடியாது. ஆனால், என்னால் ஆறுகளின் திசைவழியைக்கூட மாற்ற முடியும்.'

மீண்டும் பழைய கேள்விக்கு வருவோம். அம்பேத்கர் ஏன் அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போது மிகப் பிரமாண்டமாக வளர்ந்து, மாபெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறார்? அம்பேத்கர் மாறவில்லை. நாம்தான் மேலும் மேலும் குறுகி, சிறுத்து படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறோம். நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும்போது அம்பேத்கரின் ஆளுமை பலமடங்கு உயர்ந்து காட்சியளிக்கிறது!

#ஆனந்தவிகடனில் எழுத்தாளர் மருதன்

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

அம்பேத்கர் எனும் தலித்தை பொது சமூகத்தின் தந்தையாக ,தலைவராக பார்க்க முடியவில்லை


காந்தி என்கிற பனியாவை தேச தந்தையாக ஏற்று கொண்ட உனக்கு

நேரு என்கிற பார்ப்பனரை உறவு முறை சொல்லி கொண்டாடிய உனக்கு

சுபாஷ் சந்திர போஸ் என்கிற பார்பனரை தேச வீரனாக ஏற்றுக்கொண்ட உனக்கு

காமராஜர் என்கிற நாடாரை கல்வி தந்தை ,கர்மவீரர் என்று ஏற்றுக்கொண்ட உனக்கு

வவுசி பிள்ளையை கப்பலோட்டிய தமிழனாக கொண்டாடிய உனக்கு

அண்ணா என்ற முதலியாரை பேரறிஞர் ,திராவிட தந்தை என்று கொண்டாடிய உனக்கு

எம்ஜியார் எனும் மேனனை இதயகனி,இதயதெய்வம், புரட்சிதலைவர் என்று தலைமேல் தூக்கி வைத்த உனக்கு

ஜெயலலிதா எனும் ஐயங்காரை புரட்சித்தலைவி , அம்மா என்று குடும்பமாக கொஞ்சிய உனக்கு

அம்பேத்கர் எனும் தலித்தை பொது சமூகத்தின் தந்தையாக ,தலைவராக பார்க்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அம்பேத்கர் தலித் என்பதுதானே?

ஆக பிரச்சனை உன் சாதிய சிந்தையில் தானே ஒழிய அம்பேத்கரின் அரசியலில் அல்ல.

புதன், 28 ஆகஸ்ட், 2019

புதைந்து_கிடக்கும்_தமிழர்_வரலாறு


(28-8-2019)தினமணியில்  வெளி வந்துள்ள #தமிழகத்தில் #அகழ்வாராய்ச்சி மற்றும்  வரலாற்று தொடர்பாக  எனது விரிவான
பதிவு
#புதைந்து_கிடக்கும்_தமிழர்_வரலாறு !
-------------------------—
வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டிய பகுதிக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதிக்கும் செல்ல நேரிட்டது. கொடுமணல் மற்றும் இங்குள்ள அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை.
இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது.
அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
அதே போலவே, வரலாற்றில் திருவில்லிப்புத்தூருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த பகுதியை இராணி மல்லி என்பவர் ஆண்டார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர். தமிழை ஆண்டாள், கோதை நாச்சியாருடைய திருத்தலம். ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்விச் சாலைகள், நூலகங்கள் சூழ்ந்த ஊர். திருப்பாவை என்ற தமிழ் இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்த ஊர். பெரியாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்கள் இன்றைக்கும் வியக்க வைக்கின்றது. இப்படி பல வரலாற்றுத் தரவுகளை திருவில்லிப்புத்தூருக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.
திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிரம்ப புதைந்துள்ளது. இது குறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமியும், பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியான்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாக தரவுகள் சொல்கின்றன. அதன்மீது கற்பாறைகளால் அடுக்கி மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன.
ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும், பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைபடுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளும் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது. இந்த சிற்றோடையின் வடகரை மிகப் பழமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே அங்கு கட்டுமானப் பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் கீழும் முதுமக்கள் தாழிகள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த பகுதி தொல் மூத்த தமிழ் குடியினர் வாழ்ந்துள்ளனர். இவர்களுடைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் வெளிக் கொணர வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இதே போல, இதன் அருகேயுள்ள மம்சாபுரம், குறவன்கோட்டை ஆகிய இடங்களின் அருகேயும் பழமையின் அடையாளங்கள் பூமியில் புதைந்துள்ளன என்றும் பல கருத்துகளை சொல்கின்றனர். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று குறிப்பிடுகின்றனர்.
சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடிக்கல் நாட்டிய நிலத்திலும் அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழர்களின் தொல் நாகரிகத்தின் அடையாளம் கிடைக்கும் என்று திருவில்லிப்புத்தூரை சேர்ந்த கள ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி, கோபால்சாமி மலை போன்ற சில பகுதிகளும், திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு, கழுகுமலை போன்ற பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மட்டுமல்லாமல், பாறை ஓவியங்களையும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன.
கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை.
தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை. இந்நகரின் தொன்மையை பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள் மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் சொல்லுகிற சான்றுகளாகின்றன. இருந்தாலும் மதுரை மாநகரைப் பற்றிய சொல்லும்படியான அகழ்வாய்வு சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்திற்கு நகர்த்துவதற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதுவும் மதுரை நகர் சார்ந்து இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இருந்து திரும்பவும் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள்.
ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டின் தொன்மையை காட்டுகிறது. 1872, 1876, 1903 1914 என பல கட்டங்களில் இங்கு ஆய்வுப் பணிகள் நடந்தன. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இது குறித்தான சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையும் வெளிவராமல் மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது.
தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்கிறது செய்திகள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும். இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வு மூலம், தமிழ் மண்ணல் ஆதிகாலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் தாவரப் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.
3. தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல தரவுகள் கிடைத்துள்ளது.
ஆனால் தமிழனுடைய வரலாறு சரியாக, சீராக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பை சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற அனைத்து மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

-செய்தித்தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com

மாவீரர் ஐயங்காளி பிறந்த நாள்-ஆகஸ்ட் -28.


மாவீரர் ஐயங்காளி பிறந்த நாள்-ஆகஸ்ட் -28.

வரலாற்றில் இதுவரை நடைப்பெற்ற போரட்டங்கள், புரட்சிகள், மாற்றங்கள் அனைத்தும் எங்கோ ஒரு மூலையில் பட்டியலின தலைவர்களால் முன்னெடுத்ததாக தான் இருக்கின்றது. அவர்களின் ஆளுமையை, வெற்றியை மற்ற சமூகத்தினர் உள்வாங்கிக் கொண்டு அத்தலைவர்களை மறைத்து விட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

பட்டியலின இளைஞர்கள், நமக்கான தலைவர்கள் யார்? நமக்காக உழைத்தவர்கள் யார்? என்று அடையாளங்கண்டு கையிலெடுக்காததின் விளைவு தான் இன்றைக்கு இந்துத்துவம் நம் தலைவர்களை கைலெடுப்பது! இனியேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நமக்கான வரலாறுகளை அழிக்கும் செயலுக்கு நாமே வழி காட்டியது போன்று உருவாகும். ஆகவே அந்த அடிப்படையில் தான் நமக்கான தலைவர் மகாத்மா அய்யங்காளி அவர்களுடைய வரலாறு.

கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் வெங்கனூர் என்னும் சிறுகிராமத்தில் 1863-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அய்யன்-மாலா தம்பதிகளுக்கு காளி பிறந்தார்.  காளி, அப்பாவினுடைய பெயரைச் சேர்த்துக் கொண்டு அய்யங்காளி ஆனார்.

அய்யங்காளி பலம் பொருந்தியவாராவும், உற்சாகம் மிகுந்தவராகவும் இருந்தார். நாட்டுப்புறக் கலைகளிலும், கால்பந்து, மட்டைப்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர் சிறந்த உடற்பயிற்சி வீரராகவும் இருந்தார். அவருடைய அதிகப்படியான உற்சாகம் அவருக்கு பெரும் பிரச்சனைகளைத் தோற்றுவித்திருந்தது.

ஒடுக்கபட்ட மக்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது என தடுக்கபட்டிருந்த காலம் அது. அதே போல் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலாடையோ, தோள் துண்டோ, தலைப்பாகையோ அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் அன்று விதிக்கபட்டிருந்தது. 

அய்யங்காளின் முதல் புரட்சி இந்த மாதிரி ஆடைகளுடன் பொது இடங்களில் செல்வது தான். அக்காலத்தில் வெளுத்த வேட்டி கட்டுவதே சமூக எதிர்பை காட்டுவதின் அடையாளம் தான். வெள்ளை அரைக்கை பணியன் அணிந்து, தோளில் துண்டும், தலையில் வட்டக்கட்டுமாக எப்போதும் தோற்றமளித்தார் அய்யங்காளி அவர்கள்.

சமூகத்தில் நிகழும் தீண்டாமை கண்டு மனம் நொந்து, ஓய்வில்லாமல் உழைத்த அய்யங்காளி அவர்களுக்கு அவருடைய பெற்றோர் 1888ஆம் ஆண்டில் மச்சாங்குழியைச் சேர்ந்த செல்லம்மாவைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும் (பொன்னு, செல்லப்பன், கொச்சுகுஞ்நு, சிவதாணு) ஒரு பெண் குழந்தை தங்கம்மாவும் பிறந்தன. 

1898 இல் அய்யங்காளி அவர்கள் ஒரு வில் வண்டி வாங்கி, காளைகள் பூட்டி, ஆதிக்க சாதியர் தெருக்களில் சுற்றித்திரிய தொடங்கினார். காளைகளின் வெண்கலக் கழுத்து மணிகள் தெருக்களில் அவர் வருகையை கம்பீரமாக அறிவித்தன. இது ஆதிக்க சாதிக்காரர்களுக்கு படுங்கோபத்துக்குள்ளாக்கியது. தீண்டாமைக்கு எதிராக அவருடைய திட்டமிட்ட முதல் நடவடிக்கை இது.

கண்ணுக்கு புலப்படாத தீண்டாமைச் சுவர் அய்யன் காளியின் காளைகளின் வெண்கல மணியோசையால் நடுங்குவதை பொறுக்காத ஆதிக்க சாதிகாரர்கள், அவர் வண்டியைத் தடுத்தார்கள். "தோளில் போட்டிருக்கும் துண்டை எடுடா?" என்று அதட்டினார்கள். தான் மறைத்து வத்திருந்த கத்தியை தூக்கினார் அய்யன்காளி 'இந்த கத்தியும், என் உடம்பில் உயிரும் இருக்கும்வரை  காளியிடம் உங்கள் வேலை எதுவும் எடுபடாது' என்றார்.
காளியின் இந்தப் பதில் கேரளம் முழுவதும் எதிரொலித்தது.

சமுதாய சுதந்திரத்திற்கான போராட்டங்களில் அய்யங்காளி மிகுந்த வீரத்துடன் பங்கு கொண்டார். சுதந்திரம் என்று அவர் சொல்லியிருந்தது சமத்துவமும் மரியாதையுமாகும். சமூகத்தின் தீமைகளுக்கு எதிராக, அதற்கிடையில் சிக்கிநசுங்கிக் கொண்டிருந்த பட்டியலின மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றுதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் புரிந்து கொண்டிருந்தார். அவர்களை ஒரு கொடிக்குக் கீழ் கொண்டு வருவதற்காக 1907-ல் "சாது ஜன பரிபாலன சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார்.  பட்டியலின மக்கள் அனைவரையும் விடுதலைபடுத்தும் சங்கமாகவே அமைந்தது. வெகு விரைவில் திருவிதாங்கூர் முழுவதும் சங்கத்தின் கிளைகள் உருவாகின. தீண்டாமை, சாதி ஒழிப்பு, சமூகத்தில் நிலவிய மற்ற மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக சக்திவாய்ந்த பிரச்சாரம் செய்தார்.

நிலைமை இப்படி இருந்தாலும் புலையர் குழந்தைகள் அரசு பள்ளிகளில் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. அய்யன் காளி அதற்கான முயற்சியில் இறங்கினார். ஆதிக்க சாதிகாரர்கள், குறிப்பாக அன்றைய நாயர்கள் இதற்க்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். தன் சொந்த முயற்ச்சியால் ஒரு திண்ணைப் பள்ளிகூடம் ஆரம்பித்தார் அய்யன்காளி. அதையும் அவர்களால் நடத்த முடியவில்லை. ஆதிக்க சாதி எதிர்ப்பு ஒரு பக்கமென்றால் ஆசிரியர் இல்லாப் பஞ்சம் இன்னொரு பக்கம்.

இந்த சூழ்நிலையில்தான் அய்யன்காளி அன்றைய தலைமைக்கல்வி அதிகாரியைச் சந்தித்து தன் கோரிக்கையை சமர்ப்பித்தார் அதிகாரி ஒரு இஸ்லாமியர். அய்யங்காளின் வேண்டுகோளை ஏற்று, புலையர்களையும் பள்ளிகூடத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பரிந்துரை செய்து, மகாராஜாவுக்கு குறிப்பு அனுப்பினார். அய்யங்காளி அவர்கள் திவானையும், மகாராஜாவையும் பல முறை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

இம்மாதிரியான முயற்ச்சிகளின் பலனாக திருவிதாங்கூர் அரசு, பட்டியல் மக்களை அரசு பள்ளிகூடங்களில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒரு அறிக்கையை 1910-ல் வெளியிட்டது.

பல போராட்டங்களுடைய பலனாய் 1911 டிசம்பர் 5ஆம் நாள் "சாது ஜனபரிபாலன சங்கத்"தினுடைய தலைவர் என்னும் நிலையில் தலித்துகளினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக சிறீமூலம் சட்டசபைக்கு அய்யங்காளி பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அமைப்பினுடைய செயல்பாடுகளுக்காக புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. 1916ஆம் ஆண்டு சாது ஜன பரிபாலினி  என்னும் பெயரில் சங்கனாசேரியிலிருந்து மாத இதழ் தொடங்கப்பட்டது. 

கையெழுத்து மட்டுமே போடதெரிந்த அய்யன்காளி. தன் சமூகத்தில் உள்ள படித்த இளைஞர்களை திரட்டி அவர்களின் உதவியோடு பத்திரி்கையை நடத்தினார். இந்த பத்திரிக்கை மக்களிடையே கல்வி கற்க தூண்டியது. அதைவிட முக்கியமாக பட்டியல் மக்களின் பல்வேறு பிரச்சனைகளை புரிந்துகொள்ள உதவியது.

புலயைர்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மேலாடை அணியும் உரிமை பெறவில்லை. மார்புகளை மறைக்கும் வகையில் பெரிய பெரிய பாசி பவளங்களாலும், துளையிடபட்ட சிறிய கற்களான மாலைகளை மார்பு நிறைய அணிந்து மானம் காத்து வந்தார்கள். இந்தக் கல் மாலை அணியும் வழக்கத்தை நிறுத்தி, புலையர் பெண்களும் மேலாடை அணிய ஏற்பாடு செய்ய விரும்பினார் அய்யன்காளி.  பெண்களை திரட்டி அவர்களை தங்கள் கல் மாலைகளை அறுத்து எரிந்துவிட்டு, மார்பைத் துணியால் மறைக்கச்சொல்லி போராட்டம் தொடங்கினார். 1915-16 ஆகிய இரு ஆண்டுகள் நடந்தது இந்தப்போர், பிறகு "இச்சம்பவம் கல் மாலை போர்" என்று வரலாற்றாளர்களால் புகழபட்டது.

அய்யங்காளி அவர்களாலும், நாராயண குரு அவர்களாலும் தென்கேரளவில் நடந்த நீண்ட போராட்டங்கள் இந்துக்களிடையே சில மாற்றங்களை ஏற்படுத்தியது. தலித்துக்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் அதிக காலம் அடக்கியாள முடியாது என்பதைப் புரிந்து கொண்ட மன்னரும் அவருடைய பணியாளர்களும் அவர்களுடன் ஒத்துப் போகும் எண்ணத்தை வெளிப்படுத்தினர். அதனுடைய பலனாய் 1946 நவம்பர் 12ல் கோவில் நுழைவு விளம்பரம் வெளியிடப்பட்டது. 

ஏழை மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட. சாது ஜன பரிபாலன சங்கம் அய்யங்காளி அவர்களாலும் மற்ற தலைவர்களாலும் தொடர்ச்சியான முயற்சியால் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செயல்ப்பட்டது.

அய்யங்காளியின் சமூக போராட்டத்தை  காந்தி நேரில் வந்து பாராட்டினார். மேலும் ரவிந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இதர தலைவர்களும் கடித தொடர்பில் இருந்தனர்.

மேலும் அய்யங்காளியைப் பொருத்தவரை, மானமும் சுயமரியாதையும் இல்லாத ஒரு மனிதன் உயிருடன் இருக்க வேண்டி வருவதை விட அவமான கரமான ஒன்று வேறில்லை என்பார். 1980ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி  "இந்தியாவினுடைய மகானான புத்திரன்" என்று இந்திராகாந்தி அவருடைய சிலையை திறந்து வைத்து சிறப்பித்து கூறினார்.

தொடர்ந்து போராட்டங்கள், மோதல்கள், எதிர்தாக்குல்கள் இவைகளிலேயே வாழ்வின் பெரும்பகுதியை கழித்த அய்யன்காளியின் உடல் நிலை படிபடியாக மோசமடைந்து 1941 ஜூன் 18 ஆம் நாள் அவர் தன் 77ஆவது வயதில் இறந்தார்…

மறைக்கப்பட்ட வரலாற்றில் இருந்து நமக்கான விடுதலை ஆயுதத்தை கையிலெடுப்போம்...

முகநூல் தோழர் ஸ்டாலின் பதிவு!

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

இன்முகம் காட்டு.......அதுவே போதும்


இன்முகம் காட்டு.......அதுவே போதும்

உடலை மறைக்க ஆடை வேண்டும்
மாண்புடன் மானம் காத்திட வேண்டும்
பகட்டாய் ஆடை எதற்காய் வேண்டும் ?
பாதி உடலை மூட வேண்டும் ?

நாகரீகம் அறிந்த நாமும்
வரைமுறை மீறல் தவறேயாகும்
அரைகுறையாக அணிவதெல்லாம்
ஆபாசம் எனத் தெரிய வேண்டும்.

ஆளும் பாதி ஆடை பாதி
நல்ல பொருளில் சொல்லிச்சென்றார்.
இன்றைய மனிதர் அதனைத் தவறாய்
புரிந்து கொண்டு உலவுகின்றார்

அங்கம் எதற்காய் வெளியே வேண்டும்
அடுத்தவர் கண்ணை உறுத்த வேண்டும்
அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும்
அன்புடன் வணங்கத் தோன்ற வேண்டும்.

நாகரீகம் கூடுந்தோறும்
நல்ல பண்புகள் பெருக வேண்டும்
நல்ல நிலையில் இருக்கும் போது
நலிந்த ஆடைகள் எதற்காய் வேண்டும் ?


இடம் பொருள் ஏவல் அறிய வேண்டும்
இங்கு எதற்காய் கந்தல் வேண்டும்
இது சரிதானா சிந்தை வேண்டும்
இல்லையேல் காட்டில் வசிக்க வேண்டும்.

இலைமறை இருப்பு காய்க்கு அழகு
முழுவதும் மூட மனிதனுக்கு அழகு
காண்பவர் மட்டும் கண்டால் அழகு
கடைவிரிப்பதிலே என்ன அழகு ?

சுதந்திரம் என்பதைப் புரிதல் வேண்டும்
சுயசிந்தனையும் பெறுதல் நன்றே.
சுற்றித் திரியும் விலங்கும் அணியச்
சிதறும் வண்ண உடை தந்தானே.

நாடுகள் தோறும் ஆடைகள் மாறும்
தட்பவெட்ப நிலைகளும் மாறும்
புலியைக் கண்ட பூனையென நீ
பொருந்தாவுடைகள் அணிவது வேடம்.

தாய்த் திருநாட்டின் மானத்தை உந்தன்
நடை உடை செய்கைகள் தீர்மானிககும்.
பொறுப்பை உணர்ந்து புனைவாயானால்
நாடும் வீடும் நற்பெயர் எடுக்கும்.

நன்றிகளும்
பிரியங்களும்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார்.


புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கார்.

இந்தியாவில் நேரு,  காந்தி  மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?*

*பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச்    யுனிவர்சிட்டியில்  ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள  அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில்  உறுப்பினர் ஆக முடியாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக இருக்க முடியும்.*

*officer club,அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து உறுப்பினர் ஆன நபர் ஒரேத் தலைவர் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் மட்டுமே. டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால்.அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.*

*அப்படி இருக்கும்  போது  அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும். இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர்  அவர்கள் நடத்திய கோவில் நுழைவு   போராட்டத்தை பல ஆயிரம் பேரைத்  திரட்டி  ஈடுபடும்  போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.*

*அந்த அதிகாரி.  உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.*

*உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான். அந்த பிடிவாரண்டை  டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ்  அரசாங்கத்திற்கு
அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே  சஸ்பெண்ட்  செய்தது ஏன் என்றால்  டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகலுக்கான" officer club" சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது.   அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே  சஸ்பெண்ட் பன்னியது.*

உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒருத் கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு  அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த  அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.

*இந்தியாவில் இருந்து இது வரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 24 ஆகஸ்ட், 2019

திருமாவளவன் 58



திருமாவளவன் 58: சில குறிப்புகள்

விசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது.

தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக உருவெடுத்திருக்கும் திருமாவளவனுக்கு இன்று 58-வது பிறந்த நாள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். திருமாவளவன் தொடர்பாக ஒரு ஊடகவியலாளராக கவனித்த சில குறிப்புகள் இங்கே:

தமிழக அரசியலில் திருமாவளவனின் தனித்தன்மையாக ஒரு அம்சத்தை குறிப்பிட வேண்டுமென்றால், கட்சி நிர்வாகிகளுடனும் தொண்டர்களுடனும் அவர் கொண்ட பிணைப்பு. ஒரு இயக்கத்தின் தலைவர், அதுவும் கிட்டத்தட்ட அவரே உருவாக்கி வளர்த்த ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற நிலையில் சர்வாதிகாரத்தை ஒருபோதும் தன் இயக்கத்தில் பாய்ச்சாதவர் அவர்.

நிர்வாகிகளுக்கு அவர் அளிக்கும் பேச்சு சுதந்திரம், தமிழக சூழலில் வேறு கட்சிகளில் இல்லை. 2016-ல் விடுதலை சிறுத்தை இயக்கத்தில் ஒரு பிரச்னை. தேசிய அளவில் அப்போது தலித்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ‘தலித்களை தாக்காதீர்கள். என்னைத் தாக்குங்கள்’ என பேசினார் பிரதமர் மோடி. அதே காலகட்டத்தில் அம்பேத்கரை சிலாகித்தும் பேசியிருந்தார் மோடி.

மொத்த எதிர்க்கட்சிகளும் மோடியின் நாடகமாக இதை வர்ணித்த நிலையில், விசிக பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிகுமார் வெளிப்படையாக மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிப்படையாக முகநூலில் பதிவு செய்தனர். ரவிக்குமாரின் கருத்தில் திருமாவளவனுக்கும் உடன்பாடு இல்லை.

ஆனாலும் மிக லாவகமாக அந்தத் தருணத்தில் தன் கட்சியின் அறிவுஜீவியான ரவிக்குமாரையும் விட்டுக் கொடுக்காமல், எதிர்ப்பு கருத்துகளின் நியாயத்தையும் உள்வாங்கி மீடியாவிடம் அந்தப் பிரச்னையை சமாளித்தார் திருமா. அந்தத் தருணத்தில் அவர் சற்று பிசகியிருந்தாலும், சிறுத்தைகளில் சிலரை கட்சி இழந்திருக்கும்.

2018 டிசம்பரில் இன்னொரு நிகழ்வு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிப் பேட்டியில், தலித்களுக்கு திராவிட இயக்கம் ஆற்றிய பணிகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு டென்ஷனான வைகோ, ‘என்னை தலித்களுக்கு எதிராக சித்தரிக்க முயற்சிக்கிறீர்களா? என் வீட்டில் வேலை செய்கிறவர்கள் தலித்கள்தான்’ என்றார்.

இது குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது முகநூல் பதிவில், ‘வைகோவின் பேச்சை ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். வீட்டில் தலித்களை வேலையில் அமர்த்துவதற்கும், அதிகார பகிர்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பினார். இந்த விமர்சனத்தை வைகோ.வால் ஜீரணிக்க முடியவில்லை. ‘வன்னியரசுவை இப்படி எழுதச் சொன்னது யார் என எனக்குத் தெரியும்’ என கொந்தளித்தார் வைகோ.

கிட்டத்தட்ட திருமா சொல்லித்தான் வன்னியரசு எழுதியதாக வைகோவின் பேச்சு தொனி இருந்தது. தவிர, 2006 காலகட்டத்தில் தேர்தல் செலவுக்காக திருமாவளவனுக்கு பணம் கொடுத்தேன் என்றும் வைகோ சொல்ல, திமுக அணியில் இனி அந்த இரு கட்சிகளும் தொடர முடியுமா? என்கிற கேள்வியே எழுந்தது.

இந்த விவகாரத்தை திருமா அணுகிய விதமும் அலாதியானது. முதல் கட்டமாக கட்சித் தேர்தல் பணிகளுக்காக வைகோவிடம் பணம் பெற்றதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் திருமா. வைகோ வெளிப்படையாக இப்படி பேசிவிட்டாரே? என்கிற ஆதங்கமோ, கோபமோ அவரிடம் எழவே இல்லை.

பெரிதாக எந்த அரசியல் லாபமும் இல்லாத சூழலிலும், அடுத்த ஓரிரு நாட்களில் வைகோவை சமாதானப்படுத்த அவரது அண்ணா நகர் இல்லம் சென்றார். கூடவே, வன்னியரசுவையும் அழைத்துக் கொண்டு! வைகோவே இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. விசிக மீது கடும் கோபம் கொண்டிருந்த வைகோ, பின்னர் கூல் ஆனார். இந்த நிகழ்வில், ‘தனது எதிரி யார்? யாருடன் மோத வேண்டும்?’ என்கிற தெளிவு தெரிந்த தலைவராக வெளிப்பட்டார் திருமா. கூடவே, ‘ஈகோ’ இல்லாத தலைவராகவும்!

அதே வன்னியரசு அண்மையில் வேலூர் தேர்தல் முடிவு தொடர்பாக, ‘திமுக.வுக்கு பின்னடைவு’ என கருத்து கூறி, இன்றளவும் கட்சிக்குள் கருத்து ஜனநாயகம் இருப்பதாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கூட்டங்களில் பெரிய ஒழுங்கை எதிர்பார்க்க முடியாது. செய்தியாளர்களுக்கு உரிய இடங்கள், மேடையின் பெரும்பகுதி என தொண்டர்கள் ஆக்கிரமிப்பார்கள். கூச்சல், குழப்பங்களுக்கும் குறைவிருக்காது. மேடையில் இருக்கும் திருமா, சில நேரங்களில் எழுந்து வந்து பொறுமையாக அவர்களிடம் பேசி உட்கார வைக்க முயற்சிப்பார். சில நேரங்களில் இதை சகஜமாக எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். செய்தியாளர்களுக்கு இது பெரும் சிரமம்.

திருமா இதற்கு கொடுக்கிற விளக்கம், ‘இப்போதுதான் அவர்கள் (ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்) எழுந்து நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் அடக்கச் சொல்கிறீர்களா?’ என்பதுதான். ‘அடக்கி வைக்கப்பட்ட வெள்ளம், திறந்து விடப்படும்போது அங்கும் இங்குமாக சீறற்று பாய்வதை தவிர்க்க இயலாது’ என்கிற பார்வையும் திருமாவுக்கு உண்டு.

கட்சி நிர்வாகிகளை மட்டுமல்ல, தொண்டர்களையும் முகத்திற்கு நேராக கேள்வி கேட்கவும், வாதாடவும் அனுமதிக்கிற தன்மை திருமாவுக்கு உண்டு. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டிக்காக திருமாவிடம் முன் அனுமதி பெற்று சென்றேன். பகல் 1 மணிக்கு சென்னை அசோக் நகரில் கட்சி நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் சந்திப்பதாக ஏற்பாடு.

ஆனால் பிற்பகல் 2.30 மணிக்குத்தான் திருமா வந்தார். மொத்தக் கூட்டமும் அவரை நெருக்கித் தள்ளி, மேடையில் கொண்டு போய் விட்டார்கள். என்னால் நெருங்க முடியவில்லை. விசிக செய்தி தொடர்பாளரான நண்பர் பாவலன் என்னை முன்னால் அழைத்துச் சென்று, ‘இவர் அப்பவே காத்து நிற்கிறார். பேட்டி கொடுத்துட்டு, அப்புறம் கூட்டத்தில் பேசுங்க’ என்கிறார். திருமாவோ, ‘எப்பா, இவ்வளவு கூட்டம் இருக்கு. இப்போ பேட்டி கொடுக்க விடுவாங்களா?’ என்கிறார், பொறுமையாக.

பாவலன் மீண்டும் வற்புறுத்த, நானே குறுக்கிட்டு கூட்டம் முடிந்ததும் பேசலாம் எனக் கூறினேன். திருமா புன்னகைத்தார். பெரிதாக அடையாளம் பெறாத சிறு கட்சிகளின் தலைவர்களிடம் கூட, நிர்வாகிகள் இந்த அளவுக்கு உரிமை எடுத்துப் பேசும் நிலை இல்லை என்பதற்காக இதை குறிப்பிடுகிறேன்.

வேளச்சேரியில் விசிக அலுவலகம் சென்றால், அங்கே திருமாவைப் பார்த்து பதறுவது, பம்முவது போன்ற பாசாங்குகளை தொண்டர்களிடம் பார்க்க முடியாது. ஒருமுறை நான் பேட்டிக்காக முன் அனுமதி பெற்று போய் நிற்க, திருமாவும் வந்துவிட்டார். ஆனால் அலுவலக நிர்வாகி எங்கோ சென்றுவிட்டார். அலுவலகம் பூட்டிக் கிடந்தது. திருமாவுடன் வந்த தொண்டர் ஒருவர் போன் போட்டு, நிர்வாகியை அழைத்தார். சுமார் அரை மணி நேரம் கழித்துதான் அங்கு நிர்வாகி வந்து சேர்ந்தார்.

அதுவரை, மிகப் பொறுமையாக அலுவலக வாசலில் அக்கம்பக்கத்து சிறுவர் சிறுமிகளுடன் வாஞ்சையுடன் பேசியபடி நின்றார் திருமா. முன்பே சொன்னபடி, தாமதமாக அங்கு வந்த நிர்வாகியிடம் பெரிதாக பதற்றம் எதுவும் இல்லை. இவரும் கண்டிக்கவில்லை. ஒழுங்கு என்கிற பெயரில் தொண்டனிடம்கூட அதிகாரமோ ஆதிக்கமோ காட்டுவதில்லை என்கிற இந்த நிலைப்பாடு, மிக அபூர்வமானது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பல இடங்களில் தகறாறுகள் ஏற்படுவது இயல்புதான். இது தொடர்பான பஞ்சாயத்துகள் அவரிடம் வரும். கட்சிக்குள் குழுக்கள் அமைத்து இதை விசாரிக்கிறார்கள். முடிந்த அளவு சமரசம் செய்கிறார்கள். 99 சதவிகிதம் யாரையும் கட்சியை விட்டு நீக்குவதில்லை என்பது திருமாவின் நிலைப்பாடு.

அதேபோல, திமுக, இடதுசாரிகளை தவிர்த்துப் பார்த்தால் இரண்டாம்கட்ட நிர்வாகிகளை பல ஆண்டுகளாக அப்படியே தக்க வைக்கிற கட்சி விசிக.தான். திருமாவின் அணுகுமுறையே இதற்கு காரணம். செல்வப் பெருந்தகை உள்ளிட்ட ஓரிருவர் வெளியே சென்றிருந்தாலும், திருமா மீது அவர்களுக்கு விமர்சனம் கிடையாது.

கலைஞர் மீது நிஜமாகவே அளப்பரிய அன்பு கொண்டவர் திருமா. அரசியல் ரீதியாக 2015-ம் ஆண்டு, ‘ஆட்சியில் பங்கு தருகிறவர்களுடம் மட்டுமே கூட்டணி’ என்கிற கோஷத்தை எழுப்பினார் திருமா. இதற்காக மதிமுக, இடதுசாரிகளை உள்ளடக்கி தி.நகரில் ஒரு கூட்டம் நடத்தினார். அடுத்த ஆண்டு (2016) தேர்தல் வரவிருந்த நிலையில், திமுக.வுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டமாக அது பார்க்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு பிறகு திமுக- திருமா இடையே விரிசல் அதிகமானது. எனினும் வழக்கம்போல அந்த ஆண்டும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்து கூற திருமாவுக்கு விருப்பம். யாருக்கோ தகவல் கொடுத்துவிட்டு, சென்னை வேளச்சேரி அலுவலகத்தில் காத்திருந்தார். அழைப்பே வராதபோது, மிகவும் நொந்தார். சரியாக அந்த நேரம் மற்றொரு பேட்டிக்கு அங்கு சென்றிருந்த நான், காண நேர்ந்த நிகழ்வு இது.

சம காலத்தில் தமிழக தலைவர்கள் பலரிடமும் இணக்கமான உறவு அல்லது நட்பு பாராட்டுகிற ஒருவர் திருமாதான். பாஜக.வில்கூட பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோருடன் இவருக்கு ஆத்மார்த்தமான நட்பு உண்டு. தொண்டர் கூட்டம் ஒருபுறம் இருந்தாலும், அதைத் தாண்டி திருமாவளவன் என்கிற தலைவரின் ஆளுமையும், அரசியல் வியூகங்களும்தான் விடுதலை சிறுத்தைகளை தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியலில் நிறுத்தியிருக்கின்றன.
~ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் - தமிழ்

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?





*நாட்டு ⚖ நடப்பு*

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது.

இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்தக் காட்டுத் தீயின் புகை மண்டலம் அட்லாண்டிக் கடல் பகுதி வரை பரவியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் காபர்னிகஸ் செயற்கை கோள் கண்டுபிடித்துள்ளது.
மேலும் இந்தப் புகையின் மூலம் அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் புகையினால் கார்பன் மோனோ ஆக்சைடு வெளியாகி வருவதும் தெரியவந்துள்ளது. அதாவது தெற்கு அமெரிக்காவின் கடற்பகுதியில் அதிகளவில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இருக்கும் அமேசான் காடுகளின் அளவில் 20-25 சதவிகிதம் அழிக்கப்பட்டால் அது உலகிற்கு மிகப் பெரிய கேட்டை விளைவிக்கும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அமேசான் காடுகள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்வாங்கி கொண்டு வருகிறது. அதாவது ஒரு 'கார்பன் சிங்க்' (Carbon sink) ஆக செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்த அளவிற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு அதிகரிக்கும்.

அத்துடன் அமேசான் காடுகள் பூமியின் ஆக்ஸிஜன் வாயு அளவில் 20 சதவிகிதத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே இது பூமியின் நுரையீரலாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் அங்கு இருந்து வரும் ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறையும் அபாயம் ஏற்படும். இந்த அமேசான் காட்டை அழிப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் "Mass Religious Conversion of Meenakshipuram - A Victimological Perspective" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார்




1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் "Mass Religious Conversion of Meenakshipuram - A Victimological Perspective" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. இந்த ஆய்வை எப்போது துவங்கினீர்கள்?

ப. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வைச் செய்வதற்காக 2002ல் பதிவுசெய்தேன். பல்வேறு பணிச்சுமைகளால் எனது ஆய்வை விரைந்து முடிக்க இயலவில்லை. அவ்வப்போது இந்தப் பதிவை புதுப்பித்துவந்தேன். அண்மையில் கடைசி வாய்ப்பாக 2017 பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டுமென பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் விரைந்து இந்த பணியை முடித்து, அறிக்கை சமர்ப்பித்தேன். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பொது வாய் மொழித் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

கவிதையாய் ஒரு வாழ்க்கை வாழும் இமயமலை மக்கள்
"காவி வண்ணம் தீட்டும் நரேந்திர மோதி அரசுக்கு பாடம் புகட்டுவோம்": மு.க. ஸ்டாலின்
கே. மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தை உங்கள் ஆய்வுக் களமாகத் தேர்வுசெய்தது ஏன்?

ப. மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் தொடர்ச்சியாக இந்திய அளவில் நடந்து வருகின்றன. அம்பேத்கர் அவர்கள் லட்சக் கணக்கானவர்களோடு பௌத்தத்தைத் தழுவினார். சாதி ஒழிப்புக்கான போரட்டங்களில் மதமாற்றத்தையும் ஒன்றாக முன்வைத்தார். இந்த நிலையில், மீனாட்சிபுரத்தில் அம்பேத்கரை பின்பற்றக்கூடிய மக்கள், கலாசார ரீதியாக அவரோடு மாறுபட்ட நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போக்குகளைப் பார்த்தேன். அரசியல் ரீதியாக அவரைத் தலைவராக ஏற்றாலும் கலாசார ரீதியாக சிலர் கிறிஸ்தவத்தை ஏற்பதையும் இஸ்லாத்தை ஏற்பதையும் பார்க்க முடிகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் அம்பேத்கரை அரசியல்ரீதியாக ஏற்றவர்கள்தான். ஆனால், அவர்கள் ஏன் அம்பேத்கரைப் பின்பற்றி பௌத்தத்தை ஏற்கவில்லை; இஸ்லாத்தை ஏற்றார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இரண்டாவதாக, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு, தலித்துகளை ஏமாற்றி வற்புறுத்தி, அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய வைத்தார்கள் என்றும் அதில் அரபு நாட்டுப் பணம் பின்னணியில் உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளும் இன்னும் இருக்கவே செய்கின்றன. ஆகவே சாதிக் கொடுமைகளால் இவர்கள் மதம் மாறினார்களா அல்லது வேறு காரணங்களால் மதம் மாறினார்களா என்று அறியும் வேட்கையும் எனக்குள் உருவானது.

இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களின் சமூக மதிப்பு உயர்ந்திருக்கிறதா, அவர்கள் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கும் விடைதேட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவேதான் இந்த மதமாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் முடிவுக்கு வந்தேன். அதற்கு எனக்கு வழிகாட்டியவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கு. சொக்கலிங்கம் அவர்கள். ஏற்கனவே, நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் முதுகலை படிக்கும்போது அவர் பேராசிரியராக இருந்தவர்.

கே. இந்த ஆய்வில் உங்களுக்கு என்ன முடிவு கிடைத்தது?

ப. அச்சுறுத்தலால் தலித்துகளை மதம் மாற்றினார்கள் என்பது உண்மையல்ல என இந்த ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. காவல்துறையின் வன்முறையும் அரசு அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கைகளும்தான் மதம் மாறக் காரணிகளாக இருந்துள்ளன என்பதை இந்த ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளேன்.

கே. தமிழ்நாடு முழுவதுமே ஜாதிக்கொடுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், மீனாட்சிபுரத்தில் மட்டும் தலித்துகள் மொத்தமாக மதம் மாற எந்தச் சம்பவம் தூண்டுதலாக அமைந்தது?

ப. சாதிக் கொடுமைகள் இந்தியா முழுவதும் இருக்கவே செய்கின்றன. இது அடிப்படையான காரணி. மீனாட்சிபுரத்தில் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறும் எண்ணத்தோடு இருந்த மக்களுக்கு மதம் மாற வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்ட உடனடிக் காரணியாக ஒரு சம்பவம் நடந்தது. 1980 டிசம்பரில் மீனாட்சிபுரம் அருகே மேக்கரை என்னும் மலையடிவாரப் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் மறவர் சமுதாயத்தைச் சார்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அந்த இரட்டைக் கொலையில் மீனாட்சிபுரத்தைச் சார்ந்த தலித்துகள் குறிப்பாக தங்கராஜ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் மீனாட்சிபுரம் குடியிருப்புக்குள் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைதுசெய்து, விசாரணை என்ற பெயரில் மிக மோசமான வன்முறைகளை, கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். மாதக் கணக்கில் இது நடந்திருக்கிறது.

அத்துடன் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் கொல்லப்பட்டவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மேல் உள்ள மாநில அளவிலான உயர் காவல்துறை அதிகாரிகள் சிலரும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதனால்தான் இந்த ஒடுக்கு முறை கூடுதலாக உள்ளது என தலித் மக்கள் கருதினார்கள். இதனால் அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கையை அவர்கள் இழக்க நேர்ந்தது. இந்த நிலையில்தான் சாதிக் கொடுமைகளுக்கும் அரசு ஒடுக்குமுறைகளுக்கும் ஒரு முடிவுகட்ட மத மாற்றத்தை வழிமுறையாக அவர்கள் தேர்வுசெய்தார்கள். ஆகவே, காவல்துறை மற்றும் அதிகாரிகளின் ஒடுக்குமுறை சாதியின் பெயரால் நிகழ்ந்தது என்பது இந்தப் பகுதிக்கான தனிக் காரணியாக உள்ளது.

கே. மதம் மாறுவதன் மூலம் காவல்துறையின் அத்துமீறல்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என அவர்கள் நம்பக் காரணம் என்ன?

ப. காவல்துறையிடமிருந்து மட்டுமல்ல; சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல கொடுமைகளிலிருந்து தப்ப முடியும் என நினைத்தார்கள். இந்து மதத்தில் பள்ளர் என்ற ஜாதியில் இருப்பதால்தானே இப்படி நடக்கிறது; நாம் மதம் மாறிவிட்டால் பிற்காலத்திலாவது நமது வாரிசுகள் நிம்மதியாக இருப்பார்கள் என எதிர்கால நலனை மனதில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்.

கே. மதம் மாறும்போது பௌத்தத்திற்கு மாறும்படி அம்பேதகர் கூறியிருந்த நிலையில், மீனாட்சிபுரம் மக்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தது ஏன்?

ப. இஸ்லாத்தில் மட்டும்தான் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது. மறுபடியும் ஜாதி தொடர்வதில்லையென நினைக்கிறார்கள். ராமைய்யா என்பவர் இந்தச் சம்பவம் நடப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவத்திற்கு மாறினார். தனக்கு ராசைய்யா எனப் பெயர் சூட்டிக்கொண்டார். அங்கேயும் சாதியின் பெயரால் இழிவும் கொடுமையும் தொடர்ந்ததால் அவர் கிறிஸ்தவத்தைவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தற்போது இப்ராஹிம் எனப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார். ராமைய்யா ராசைய்யாவானார். ராசைய்யா இப்ராஹிமானார். அவர்தான் அங்கு கட்டப்பட்ட மசூதிக்கு முதல் முத்தவல்லி. அதற்குப் பிறகு அவரை முஸ்லிமாகத்தான் சமூகம் பார்க்கிறது. காவல்துறை அவரைச் சீண்டவில்லை.

இந்திய செயற்பாட்டாளர்கள் 5 பேர் திடீர் கைது
கைது செய்யப்பட்ட 5 செயற்பாட்டாளர்களின் பின்னணி என்ன?
கே. பௌத்தத்தை ஏன் அவர்கள் ஏற்கவில்லை. இங்குள்ள பௌத்ததில் ஜாதிப் பாகுபாடு உள்ளதா?

ப. மகாராஷ்டிரத்தில் பௌத்தம் நிறுவப்பட்ட ஒன்றாக உள்ளது. இங்கே அப்படி இல்லை. அம்பேத்கர் அங்கே 10 லட்சம் பேரை மாற்றியதுபோல இங்கே நடக்கவில்லை. தவிர, மீனாட்சிபுரத்தைச் சுற்றிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பக்கத்துக் கிராமங்களில் ஒருவேளை பௌவுத்தர்கள் அதிகம் இருந்திருந்தால் அம்மாதிரி சிந்தனை ஏற்பட்டிருக்கும். ஆனால், மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள கடையநல்லூர், தென்காசி போன்ற பகுதிகளில் வேறு மதத்தினர் என்று பார்க்கும்போது முஸ்லிம்களே அதிகம் இருந்தனர். அவர்களும் முன்பு தலித்துகளாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை இவர்கள் கவனித்தார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலைத் தந்திருக்கலாம்.

இரண்டாவதாக, அம்பேத்கர் மதம் மாறும்போது பௌத்தம் இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய சமூகமாக அங்கீகரிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் அடுக்கில்தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பௌத்தத்திற்கு மாறியவர்கள் 'புதிய பௌத்தர்கள்' என்று அழைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கு மாறினால் அப்படி ஒரு நிலை இல்லை. எனவேதான் இடஒதுக்கீடு உரிமையை இழந்தும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

கே. மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகத்தானே கருதப்படுவார்கள்?

ப. ஆமாம். அவர்கள் கல்வி, அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, அதற்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படவில்லை. மனிதன், மனிதனாக வாழ வேண்டும். சமூக மதிப்புதான் முக்கியம் என நினைத்தார்கள்.

ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும்
தலித் பணியாளர் கடையில் டீ குடித்த மராட்டிய மன்னர் ஷாகு
கே. இந்த மதமாற்றம் நடந்தபோது அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் எப்படி நடந்துகொண்டன?

ப. அரசு எப்போதுமே மதமாற்றத்திற்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். "இது அரபு நாட்டுப் பணம் செய்த வேலை" என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது பேசிய நாவலர் நெடுஞ்செழியன், "அவர்கள் சமூகக் கொடுமைகளால்தான் மாறினார்கள்" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மதம்மாறியவர்களை அதிகாரிகள் மிரட்டினார்கள். சம்பவம் நடந்தவுடனேயே பா.ஜ.க. தலைவரான வாஜ்பேயி அங்கு சென்றார்.

அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் யோகேந்திர மக்வானா அங்கு சென்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அப்போதைய தலைவரான இளைய பெருமாள் சென்றார். பிற கட்சிகள் ஏதும் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மிகப் பெரிய யாகம் நடத்தி, அங்குள்ள மக்களுக்கு பள்ளிக்கூடங்களைக் கட்டித்தருகிறோம், கழிப்பறைகளைக் கட்டித்தருகிறோம் என்றெல்லாம் ஆசைகாட்டினார்கள். அப்போது அவர்கள் கட்டிக்கொடுத்த பள்ளிக் கட்டடம் இப்போதும் இயங்கிவருகிறது.

அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களோடு மதம் மாறியபோது இந்திய அளவில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், இந்து மதத் தலைவர்கள் யாரும் அங்கே போகவில்லை. இங்கே பெரிய, பெரிய தலைவர்கள் வந்து இறங்கினார்கள். பேரணி நடத்தினார்கள். பன்பொலியிலிருந்து மீனாட்சிபுரம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாஜ்பேயி நடந்தே சென்றார். மறு மதமாற்றத்திற்கும் முயற்சித்தார்கள். எல்லா வசதிகளையும் செய்து தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மதம் மாறிய 180 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்து மதத்திற்கு மீண்டும் திரும்பவில்லை. மீண்டும் மதம் மாறிய சம்பவத்தை வைத்து கருப்பாயி என்று புத்தகம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் யாரும் திரும்பவும் இந்து மதத்திற்கு மாறவில்லை.

கே. பிறகு எப்படி மதம் மாறியவர்களில் சிலர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியதாக பேச்சுகள் அடிபடுகின்றன?

ப. என்ன நடந்ததென்றால் முதலில் 200 குடும்பங்கள் மதம் மாற முடிவுசெய்தனர். ஆனால், மதமாற்றம் நிகழ்ந்த தினத்தன்று 180 குடும்பத்தினர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்று மதம் மாறினர். 20 குடும்பங்கள் பின்வாங்கிவிட்டனர். இந்த 180 குடும்பங்களில் இருந்து யாரும் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பவில்லை. ஆனால், திருமண உறவு என்று வரும்போது மதம் பார்க்காமல் சிலர் சம்பந்தம் செய்கிறார்கள். அப்போது தம்பதிகளில் ஒருவர் இந்துவாகவும் ஒருவர் முஸ்லிமாகவும் இருப்பார்கள். மதம் மாறியவரின் உறவினர்கள் இந்துவாக இருப்பார்கள். அவர்கள், மதம் மாறியவரை பழைய இந்துப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். அவ்வளவுதான்.

தவிர, மதம் மாறியவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பிறவி முஸ்லிம்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு பழைய வரலாறு தெரியாது. அது குறித்த நினைவும் கிடையாது.

கே. புதிதாக மதம் மாறியவர்களோடு ஏற்கனவே இஸ்லாமியர்களாக உள்ளவர்கள் திருமண உறவுகளை மேற்கொள்கிறார்களா?

ப. செய்கிறார்கள். ஆனால், அது பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து நடக்கிறது. மிக வசதியான முஸ்லிம்கள் இவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். நடுத்தர வசதியுள்ள முஸ்லிம்கள் செய்துகொள்கிறார்கள்.

மராத்தா போராட்டம்: `செயல்படுத்த முடியாத ஒரு வாக்குறுதி`
28 ஆயிரம் மராட்டியர்களை 800 மஹர் தலித்துகள் தோற்கடித்தது எப்படி?
கே. மதம் மாறிய குடும்பங்களின் பொருளாதாரம், சமூக நிலை மேம்பட்டிருக்கிறதா?

ப. கூரை வீடு போட்டிருந்தவர்கள், ஓட்டுவீட்டில் இருக்கிறார்கள். ஓட்டுவீட்டில் இருந்தவர்கள் காரை வீட்டில் வசிக்கிறார்கள். 50 சதவீதம் பேருக்கு மேல் அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். உமர் ஷரீஃப் என்பவர் பிரதான சாலையில் பெரிய வணிக வளாகத்தைக் கட்டியிருக்கிறார். இன்றும் அவர் பள்ளராக இருந்திருந்தால் இந்த நிலைக்கு அவரால் வந்திருக்க முடியாது.

என்னுடைய அறிக்கையில் இவர்களது பொருளாதார மேம்பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, "There is no significant change in their economic conditions" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதாவது பெரிய அளவில் பொருளாதார மாற்றமில்லை எனச் சொல்லியிருக்கிறேன். யாரும் பெரிய தொழிலதிபராக வரவில்லை. கணிசமான எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். வீடு மாறியிருக்கிறது. உணவு மாறியிருக்கிறது. வெளிநாடுகளுக்கு போகிறார்கள். அவ்வளவுதான்.

அதேவேளையில் அவர்களை அழுத்திக்கொண்டிருந்த சமூக அடக்குமுறையிலிருந்து தற்போது விடுபட்டிருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

கே. அந்தத் தருணத்தில் தமிழகத்தில் இருந்த தலித் அமைப்புகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

ப. இப்போது இருப்பதைப் போன்ற சூழல் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. தலித் இளைஞர்கள், அம்பேத்கர் இயக்கங்களில் செயல்பட்டவர்கள்தான் மத மாற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டவர்கள். திருநெல்வேலியில் இதற்கென ஒரு சபை இருக்கிறது. அது இஷா அத்துல் சபை. முன்பு நான் குறிப்பிட்ட தங்கராஜ் என்பவர் மறவர் இனப் பெண் ஒருவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, மதம் மாறி திருமணம் செய்து திரும்பிவந்தார். அவர்தான் முதன் முதலாக தனிநபராக மதம் மாறியவர். மதம் மாறிய பிறகு யூஃசுப் எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.

இதையெல்லாம் பார்த்த தலித் இளைஞர்கள் தாங்களும் எப்படி மதம் மாறுவது என யோசித்தபோது இஷா அத்துல் சபையை அணுகினார்கள். அவர்கள் முதலில் மறுத்துவிட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்து, மதம் மாற விரும்பும் குடும்பங்களின் பெயர்ப் பட்டியலைத் தந்து சம்மதிக்கச் செய்தார்கள். பிறகு அவர்களும் மீனாட்சிபுரத்திற்கே வந்து, மதம் மாறிவிரும்பும் குடும்பங்களிடம் பேசி, அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொண்டார்கள்.

இதெல்லாம் நடந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர் இளையபெருமாள் அவர்களைத் தவிர வேறு யாரும் தலித் தலைவர்கள் அங்கு சென்றதாகத் தெரியவில்லை.

செயற்பாட்டாளர்கள் அதிரடி கைதும் பின்னணியும்
மணமகளாக நடித்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ஹாங்காங் பெண்
"நீங்கள் ஆணா? பெண்ணா?” - விரும்பிவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி
கே. இந்த மத மாற்றம் அரசியல் ரீதியாக அவர்களை உயர்த்தியதா?

ப. அப்படிச் சொல்ல முடியாது. எந்தக் கட்சியிலும் மாவட்டத் தலைவராகவோ மாநிலப் பொறுப்பாளராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ யாரும் ஆகவில்லை. ஆனால், ஒரு பெரிய சமூகத்தோடு இணைந்ததால் அச்சுறுத்தல் இல்லை.

கே. அவர்கள் வாக்களிக்கும்போது தங்களை என்னவாகக் கருதி வாக்களிக்கிறார்கள்?

ப. அவர்கள் தங்களை இஸ்லாமியராகக் கருதித்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் என்று வரும்போது ஒருவேளை தங்கள் பழைய சமூககூறுகளோடு அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

கே. இந்த மத மாற்ற சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள தலித் மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் பார்வை மாறியிருக்கிறதா?

ப. முன்பைப்போல அரசின், அரசு அதிகாரிகளின் அத்துமீறல்கள் அங்கு நடப்பதில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் இதற்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகும் நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபால் கமிஷன், கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் சட்டத்தை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இது மீனாட்சிபுர சம்பவத்தின் எதிரொலிதான்.

கே. இந்த சம்பவத்திற்குப் பிறகு அரசு அங்கு வசதிகள் எதையும் மேம்படுத்திக்கொடுத்ததா?

ப. அந்த நேரத்தில் பல வாக்குறுதிகள் தரப்பட்டிருக்கின்றன. மீண்டும் இந்துவாக மாறும்படி கோரியிருக்கிறார்கள். சாலை போட்டுத்தருகிறோம், வீடு கட்டித்தருகிறோம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எதையும் செய்யவில்லை. ஒரு சில இந்து அமைப்புகள் சில வீடுகளைக் கட்டித்தந்துள்ளன. அவ்வளவுதான்.

புதன், 14 ஆகஸ்ட், 2019

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு


இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு...

மறைக்கப்பட்ட வரலாறு....
-----------------------------------
1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்.
மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க,

நேருவுக்கு குழப்பமாக இருந்தது.
எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது.....
(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி,
"எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்"
என்று கூற,

உடனே ராஜாஜி  "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர்.
நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார்.

நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு  விஷயத்தைச் சொல்ல,
அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி,
இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்--இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள்  பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன்  டில்லி போய் சேர்ந்தனர்.

அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.

அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,
"அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"-- 
இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை..

இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.

நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும்,
நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும்  காணுங்கள்....

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

நான் பெண் 🔥


நான் பெண் 🔥

மூச்சடக்கி
முத்தமிட்டு

மார்பை கசக்கி
எச்சில் பட்டு

ஊடல் பிடியில்
தொப்புள் தொட்டு

உசுப்பும் கடியில்
முனகல் இட்டு

யோனி நுழைத்து
இன்பம் கொண்டு

கசியும் திரவம்
பிசிறியடித்து

நீட்டி நிமிர்ந்து
அயர்ந்து உறங்கினால்

முடிந்து போகும்
ஆணின் மோகம் ஆனால்..

உன் உணர்வு கடியில்
உதடு வலித்து

முரட்டு பிடியில்
மார்பு வலித்து

உருட்டும் அசைவில்
வயிறு வலித்து

சொருகும் அதிர்வில்
கருப்பை வலித்து

சுமக்கும் கனத்தில்
உடல் வலித்து

உணரும் வலியை
வெளியே சொல்லாமல்

வேண்டும் நேரமெல்லாம்
உடல்பசிக்கு விருந்தாகி

புணரும் சலுகையாக
பிள்ளை வலியும் பெறுக்கிறாளே

அவளுக்காக என்ன
செய்ய இயலும் உன்னால்..

வேறொன்றும் செய்யாதே
பெண்ணும் உயிரென்று மதி..

உயிர் கொண்டு நேசி......
உள்ளார்ந்து யாசி...

பெண்மையை கையாளும்
மென்மை உனக்கே புரிந்துவிடும்

பெண் என்பவள் பூவானவள்
அதை கசக்கி எறிந்து விடாதே

அதை நுகர்ந்துவிட்டு
அரவணைத்துக்கொள்

தேவதையாக
இருப்பாள் அவள்
உன் மனதில்!!!

கவிதையும்...ஓவியமும் வடித்தவர்களுக்கு நன்றி.
#நான்பெண்
#naanpen 

சனி, 10 ஆகஸ்ட், 2019

காஷ்மீரில் என்ன நடக்கிறது?

காஷ்மீரில் என்ன நடக்கிறது?*

'காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?’ என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அவர்கள் மிக எளிமையான சில பதில்களை வைத்திருப்பார்கள்.

1. காஷ்மீரில் நடப்பது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் சண்டையிடுகிறது. இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா சண்டையிடுகிறது.

2. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்பதற்காக இந்திய ராணுவம் சண்டை நடத்திக்கொண்டிருக்கிறது.

3. முஸ்லிம் தீவிரவாதிகள் காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பதற்காக பயங்கரவாதம் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது... இப்படி வகை, வகையான கதைகள் காஷ்மீர் பற்றி பொதுப்புத்தியில் உலவுகின்றன.

(இக்கட்டுரை காஷ்மீர் வரலாற்றையும், அரசியல் பின்னணியையும் விளக்கும் ஒரு நெடுங்கட்டுரை)

எதுதான் உண்மை?

ஊடகங்களும், அரசும் சேர்ந்து காஷ்மீர் பற்றிய உண்மைகளை மறைப்பதோடு தங்களின் மேலாதிக்கத்துக்குத் தோதான பொய்களையும் கட்டி எழுப்புகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்லுபடியாகவில்லை. அங்கு மிகப்பெரிய மக்கள் யுத்தம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. தங்களின் சுய நிர்ணய உரிமையை முடிவு செய்துகொள்ளும் பொருட்டு மக்கள் தன்னெழுச்சித் திரளாக போராடுகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களில் 70-க்கும் அதிகமானோர் துணை ராணுவப் படைகளின் துப்பாக்கி ரவைகளுக்கு பலியானபோதிலும் காஷ்மீரிகள் சோர்ந்துவிடவில்லை. முன்னெப்போதையும்விட வேகத்துடன் வீதிகளில் திரண்டுவந்து போராடுகின்றனர்.

அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை. வெடிகுண்டுகள் இல்லை. கண்ணிவெடிகள் இல்லை. ஆனால் அவர்கள் கைகளில் ஏந்தி நிற்கும் கற்கள், இவை அனைத்தையும் விட மிக வீரியமான விளைவுகளை உலக அரங்கில் ஏற்படுத்தியுள்ளன.

காஷ்மீரிகளின் கைகளில் இருக்கும் கற்கள், அணு ஆயுதத்தை விட அதிகமாக இந்தியாவை அச்சுறுத்துகின்றன. அதன் விளைவுதான், கடந்த இருபது ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வை நம்பியிருந்த இந்தியா முதன்முறையாக அரசியல் தீர்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆசிய பிராந்தியத்தின் நீண்டகால பதற்றப் பகுதியான காஷ்மீரில் தற்பொழுது நடைபெறும் போராட்டங்கள் எதனுடனும் ஒப்பிடக்கூடியதாக இல்லை. இந்திய அடக்குமுறை அரசின் கைகூலியாய் மாறிப்போயிருக்கும் காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா, ‘‘காஷ்மீர் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை வன்முறையில் ஈடுபடாதவாறு பத்திரமாக பாதுக்காக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிலைமை வேறானது.

அவர் யாரை நோக்கி அந்த கோரிக்கையை வைத்தாரோ அந்தப் பெண்கள்தான் இப்போது போராட்டக் களத்தில் முன்னுக்கு நிற்கின்றனர். அவர்களுக்கு எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லை. ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான். ஒரு முஸ்லிம் பெண் கையில் கற்களை பொறுக்கி இளைஞர்களுக்குத் தருகிறார்.

ராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் வழங்குவதற்காக மக்களே ரத்ததான முகாம்கள் நடத்துகின்றனர். மக்களே உணவுக்கூடங்களை திறந்திருக்கின்றனர். காஷ்மீரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை.

‘‘துப்பாக்கி வேண்டாம். சுதந்திரம் வேண்டும்’’

மக்களின் தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை உலகமே வியப்புடன் பார்க்கிறது. ஒருபோதும் போராட்டங்களில் கலந்துகொள்ளாத மைசூன் என்ற பெண், தன் அன்பு மகன் உமர் ஃபாரூக்கை ராணுவம் கொலை செய்ததும் இன்று வீதிக்கு வந்திருக்கிறார். ‘‘காஷ்மீரிகள் எதற்கு சுதந்திரம் கேட்கிறார்கள் என்று எனக்கு ஒரு போதும் புரிந்தது இல்லை. ஆனால் இன்று எல்லாம் தெளிவாக புரிகிறது. எங்களுக்கு துப்பாக்கிகள் வேண்டாம், ராணுவம் வேண்டாம். சுதந்திரம்தான் வேண்டும்’’ என்கிறார் தெளிவாக.

ஆனாலும் இந்திய அரசு தனது அடக்குமுறைகளை நிறுத்தியபாடில்லை. ஐந்து லட்சம் ராணுவத் துருப்புகள், பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படைகள், உள்ளூர் போலீஸ் என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு, கண்டதும் சுட உத்தரவு என அரசு முழுவீச்சுடன் இறங்கி இருக்கிறது. ஆனால் இத்தனை காலமும் தீவிரவாத இயக்கங்களைக் காரணம் காட்டி தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்த இந்தியாவால் இப்போதைய மக்கள் போராட்டங்களை எந்த வகையிலும் திசைதிருப்ப முடியவில்லை. ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்கியதாக சொல்லலாம். (அதில் பகுதி அளவுக்கு உண்மையும் இருக்கிறது).

ஆனால் கற்களை பாகிஸ்தான் தருவதாக சொல்ல முடியாதே?! உடனே, ‘அந்த மக்கள் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திடமும், எதிர்கட்சியான, Jammu & Kashmir Peoples Demoratic Party -யிடமும் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக’ சொன்னது. துப்பாக்கிக்கு நெஞ்சுக் காட்டி நிற்கும் பத்து வயது சிறுவனின் வீரத்தின் முன்னால் அந்த பொய் அடிபட்டுப் போனது.

இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் 'Go India Go', 'Quit India' என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ரூபாய் நோட்டுகளில் இளைஞர்களால் இந்த வாசகங்கள் எழுதப்படுகின்றன. சமீபத்தில் இந்திய அரசு அனுப்பிய மத்திய அமைச்சர்கள் குழு காஷ்மீருக்கு சென்றபோது அவர்களின் பயணப்பாதையில் இருந்த இத்தகைய வாசகங்களை கவனமாக அழித்திருந்தது உள்ளூர் நிர்வாகம்.

சுவர்களில் இருந்து வாசகங்களை அழிப்பதில் என்ன இருக்கிறது? காஷ்மீரிகளின் மனங்களில் அல்லவா விடுதலை உணர்வு அரும்பி இருக்கிறது. அதை எதைக்கொண்டு அழிப்பது? காஷ்மீரிகளின் விடுதலை உணர்வுகளை கொஞ்சமேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அந்த அழகிய பள்ளத்தாக்கின் வரலாறை சிறிது தெரிந்துகொள்ள வேண்டும்.

காஷ்மீரின் கதை.. நேருவின் துரோகம்!

காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்னையோ, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல. அதற்கு 400 ஆண்டுகால வரலாறு உண்டு. 1586-ல் காஷ்மீரை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தார் அக்பர். அதைத் தொடர்ந்து முகலாய, ஆப்கானிய, சீக்கிய மன்னர்களின் ஆளுகைக்குள்தான் காஷ்மீர் தொடர்ந்து இருந்து வந்தது. சீக்கிய மன்னர்களுக்கு விசுவாசமாக இருந்த, டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் (இந்து மதத்தை சேர்ந்தவர்), தனது விசுவாசத்தின் பரிசாக காஷ்மீரை பெற்றார்.

அதன்பிறகு ஆங்கிலேயர்களுக்கும், அவர்களுக்கு அடங்க மறுத்த சீக்கியர்களுக்கும் இடையே போர் வந்தபோது, முதல் ஆளாக சீக்கியர்களை காட்டிக்கொடுத்து துரோகம் செய்தான் குலாப்சிங் மன்னன். இந்த துரோகத்தின் பரிசாக ஆங்கிலேயர்கள் 75 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு காஷ்மீரை குலாப்சிங்குக்கே கொடுத்தார்கள். அந்த தொகையோடு ஓராண்டு குத்தகையாக 20 பாஸ்மினா ஆடுகள், மூன்று காஷ்மீர் சால்வைகள், ஒரு குதிரை ஆகியனவும் பிரிட்டீஷாருக்கு அளிக்கப்பட்டன. இப்படியாக காஷ்மீர் டோக்ரா மன்னர்களின் பிடிக்குள் வந்தது.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது டோக்ரா வம்சத்தை சேர்ந்த ஹரி சிங் என்ற மன்னரின் ஆட்சிக்கு கீழ் காஷ்மீர் இருந்தது. அவர் இந்தியாவுடன் செல்வதா, பாகிஸ்தானுடன் செல்வதா என்ற குழப்பத்தில் இரு தரப்புடனும் சேர மறுத்தார். காஷ்மீரைப் போன்றே ஹைதராபாத் (ஆந்திரா), ஜூனாகத் (குஜராத்) ஆகிய பகுதிகளும் இந்தியாவுடன் சேர மறுத்தன. ஹைதராபாத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்குள் ஒரு தனித்தீவு போல அது இயங்க முடியாது என்பதாலும், அதன் பெரும்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் கொண்டிருந்ததாலும் ராணுவத்தின் மூலம் அதைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது இந்தியா.

குஜராத்தின் ஓரப்பகுதியில்… பாகிஸ்தான் நிலப்பரப்புக்கு அருகில் இருக்கும் ஜூனாகத் நகரில் பெரும்பகுதி இந்து மக்கள் வசித்தாலும் அதை ஒரு முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். அவர் பிரிவினையின்போது ஜூனாகத்தை பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்வதாக அந்நாட்டுடன் ஒப்பந்தம் போட்டார். ஆனால் ஜூனாகத்தில் வசித்த பெரும்பகுதி மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைவதாக இருந்தது. உடனே இந்தியா தானாகவே முன்வந்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. முடிவு சாதகமாக வந்தவுடன் ஜூனாகத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

காஷ்மீரின் நிலைமை வேறு. அங்கு வசித்தது பெரும்பகுதி முஸ்லிம் மக்கள். ஆனால் ஆண்டுவந்த ஹரிசிங்கோ ஓர் இந்து. அவர் இரு நாடுகளுடனும் இணைய மறுத்தார். அந்த நிலையில் மன்னராட்சிக்கு எதிராக பூஞ்ச் பகுதியை சேர்ந்த சிலர் ஆயுத கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். பிரிவினையினால் நிகழ்ந்த கலவரங்களின் ஒரு பகுதியாக அது நடந்தது.

அதே சமயத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது போர் தொடுத்து வந்தனர். கொலை, கொள்ளை, தீயிட்டு கொளுத்துதல், பாலியல் வல்லுறவு... என அவர்கள் எதிர்பட்ட அனைத்து மதத்தினரையும் (முஸ்லிம்கள் உள்பட) தாக்கினார்கள்.

இதை எதிர்கொள்ள முடியாத மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் ஓடோடி வந்தார். அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நேரு அரசு ‘காஷ்மீர் இணைப்பு’ என்பதை நிபந்தணையாகக் கொண்டு ராணுவத்தை அனுப்பி பஸ்தூன் பழங்குடிகளை விரட்டி அடித்தது. ஆனாலும் கூட குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது.

இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது. (அதுவரைக்கும், அதற்குப் பின்னர் சில வருடங்கள் வரையிலும் கூட, காஷ்மீருக்கு முதல்வரோ, ஆளுனரோ கிடையாது. பிரதமரும், ஜனாதிபதியும்தான் இருந்தார்கள்.)

அந்த ஒப்பந்தம் கூட காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கவில்லை. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இந்திய அரசிடம் அளிக்கப்பட்டன.

அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பது ‘காஷ்மீர மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்பதுதான். பிரதமராக இருந்த நேரு ‘காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்டப் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று அப்போது வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிற்பாடு இந்தியா, தானாகவே முன்வந்து இந்தப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் சென்றபோது ஐ.நா. மன்றமும் வாக்கெடுப்பையே வலியுறுத்தியது.

இந்தியாவும் அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் நேரு காலம் தொடங்கி இன்றுவரை அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஏன்? இதைப்பற்றி தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் 13 பேர் இணைந்து நடத்திய முக்கியத்துவம் வாய்ந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

‘‘அப்போது பிரதமராக இருந்த நேரு இந்த வாக்கெடுப்பை வெளிப்படையாக ஆதரித்தார். ஆனால் உண்மையில் அவர் அப்படி ஓர் வாக்கெடுப்பு நடத்துவதை விரும்பவில்லை. நேரு, எழுதிய கடிதங்களில் ‘இந்தியாவின் நலனில் இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுத்தர முடியாது. ஆனால் இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம்தான் முக்கியமானது. அவர்கள் இந்தியாவில் இருந்து பிரிவது என முடிவு எடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதை வாக்கெடுப்பின் மூலம் தீர்மாணிக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை.

காஷ்மீரத்தின் இன்றைய தலைமையைதான் நாம் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறார். ஆக வாக்கெடுப்பு என்ற ஜனநாயக முழக்கத்தை சும்மாவேனும் சொல்லிக்கொண்டே, காஷ்மீரில் தன் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை அரசை ஏற்படுத்துவதும், பிறகு அந்த தலைமையின் கருத்தையே காஷ்மீர மக்களின் கருத்தாக முன்வைத்து தொடர்ந்து இந்திய நலன்களை சாதித்துக்கொள்வதும்தான் நேருவின் நோக்கம்.’’ என்கிறது அந்த குழுவின் அறிக்கை.

இப்படி, நேரு பொதுவில் தனது ஜனநாயக முகத்தைக் காப்பாற்றிக்கொண்டு அடிமனதில் தேசியவெறியுடன் காஷ்மீரத்தை கையாண்டார். அதன் பின்வந்த யாருமே வாக்கெடுப்பு நடத்தவே இல்லை. காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி ‘சுதந்திர காஷ்மீர்’ கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள்.

50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்தது. இந்த இடத்தில்தான் பாகிஸ்தானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் தொடங்குகிறது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான். அதன்பிறகு போராட்டமானது தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது.

காஷ்மீரில் விதம்விதமான பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. தாலிபான் வரைக்கும் ஆதிக்கம் செய்யத் தொடங்கியது. அந்த அழகியப் பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இதுதான். காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த பாகிஸ்தான் மெல்ல, மெல்ல அந்த போராட்டத்தின் முகத்தையே சிதைத்துவிட்டது.

காஷ்மீரில் வசிப்பது யார்?

புவியியல் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரை குறைந்தப்பட்சம் மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.

1. காஷ்மீர் பள்ளத்தாக்கு, 2. ஜம்மு, 3. லடாக் மலையகம்.

இவைத்தவிர ‘சுதந்திர காஷ்மீர் அல்லது ஆஸாதி காஷ்மீர்’ (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) மற்றும் பாகிஸ்தான் வசம் உள்ள கில்ஜித், பல்திஸ்தான் ஆகிய பகுதிகள். மத அடிப்படையில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் என நான்கு மதத்தினர் உள்ளனர் என்றபோதிலும் இஸ்லாமியரும், இந்துக்களுமே அதிகம். இவர்களுக்குள் எந்த காலத்திலும் மத ரீதியிலான பிளவுகள் வந்தது இல்லை. குறிப்பாக முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ‘‘காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முஸ்லிமுக்கும் என்னால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அவர்களின் கலாசாரம் கூட ஒன்றுபோலவே உள்ளது’’ என்று காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

அடிப்படையிலேயே காஷ்மீர் முஸ்லிம்கள் மென்மையான சூஃபி பிரிவை சேர்ந்தவர்கள். இப்போது இந்துக்கள் கொண்டாடிவரும் அமர்நாத் உருகும் பனி லிங்கத்தை கண்டுபிடித்தவரே ஒரு முஸ்லிம்தான். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ‘மாலிக்’ பிரிவை சேர்ந்த ஓர் இஸ்லாமியர் கண்டறிந்த அமர்நாத் பனிலிங்கம்தான் இப்போது இந்து வெறியின் அடையாளமாக நிறுவப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே காஷ்மீரிகள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள். நேரு வாக்களித்தபடி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதைக் கூட அவர்கள் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. ஆனால் ‘சுயாட்சி’ வாக்குறுதி ஏமாற்றப்பட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூன்றே மூன்று துறைகளில் மட்டும்தான் காஷ்மீர் மீது இந்தியா மேலாதிக்கம் செய்ய முடியும் என்று தொடங்கிய சுயாட்சி உரிமையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மீதமுள்ள 135 சட்டப் பிரிவுகளை விட்டு வைத்ததற்கும் காரணம் இருக்கிறது. அவற்றை ஒத்த சட்டப் பிரிவுகள் ஏற்கெனவே மாநில அரசியல் சட்டத்திலும் உள்ளன என்பதால் அதை விட்டுவிட்டார்கள்.

அந்த அளவுக்கு சுயாட்சி கோரிக்கை என்பது அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. 1992-ல் சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீரின் ஜமாத் தடை செய்யப்பட்டபோது சொல்லப்பட்ட காரணம், ‘இவர்கள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லிக் கேட்கிறார்கள்’ என்பது. நேரு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லிக் கேட்பதே சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகிறது.

சிதைந்துபோன சிவில் வாழ்க்கை!

ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா அங்கு 1.65 லட்சம் படைகளை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 67 ஆயிரம் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் காஷ்மீரை தனது சொந்த நாடு என சொல்லும் இந்தியா காஷ்மீரில் நிறுத்தி வைத்திருக்கும் படையினரின் எண்ணிக்கை 6.67 லட்சம் பேர். இதில் மாநில காவல்துறை வராது. உலகிலேயே மிகக் குறுகிய நிலப்பரப்பில் இத்தனை அடர்த்தியான ராணுவ வீரர்கள் நிற்பது காஷ்மீரில்தான்.

இத்தனை லட்சம் பேர் எத்தனை தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காஷ்மீரில் இருக்கிறார்கள் தெரியுமா? சமீபத்திய இந்திய ராணுவத்தின் அறிவிப்புப்படி காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெறும் 660 பேர். இவர்களை பிடிப்பதன் பெயரால்தான் காஷ்மீரிகளின் உயிர் தினம், தினம் பலியிடப்படுகிறது. சமூகவியலாளர் பஷீர் அஹமது தப்லா 2008-ம் ஆண்டு காஷ்மீரில் மேற்கொண்ட ஆய்வின் படி, காஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் இருக்கிறார்கள்.

அங்கு தினசரி சிவில் வாழ்க்கை என்பது மிக கொடுமையானதாக இருக்கிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, பதற்றப் பகுதிச் சட்டம் 1976, ஜம்மு காஷ்மீர் பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் 1978, தீவிரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைச் சட்டம் 1985, பொடா 2002 என காஷ்மீரில் ஏராளமான ஆள்பிடி சட்டங்கள் அமுலில் இருக்கின்றன. இவற்றில் மிக மோசமானது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம். இதன்படி எந்த ஒரு வீட்டுக்குள்ளும் ராணுவம் நுழையலாம். யாரையும் கைது செய்யலாம்.

விசாரணை என்ற பெயரில் கொலை செய்யலாம். அதை எதிர்த்து வழக்குப் போடும் உரிமைக் கூட மக்களுக்கு கிடையாது. மாதத்தின் பாதி நாட்கள் ஊரடங்கு உத்தரவில்தான் காஷ்மீரிகள் வாழ்கின்றனர். இரவு ஏழு மணிக்குப் பிறகான காஷ்மீர் வீதி எப்படி இருக்கும் என அவர்களுக்குத் தெரியாது. பத்து அடிக்கு ஒரு ராணுவ வீரர் துப்பாக்கியுடன் நிற்கிறார். காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல.... அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கும் விடுதலை என்பது தேவையான ஒன்று.

சதாசர்வ காலமும் பதற்றம் மிகுந்த கொடுமையான பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் அவர்களின் மனங்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இது பொதுமக்கள் மீதான வன்முறையாகவும் வடிவம் கொள்கிறது. 2002 முதல் 2009-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலங்களில் மட்டும் 169 ராணுவத்தினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மரணப் பள்ளத்தாக்கு!

உலகின் அழகியப் பள்ளத்தாக்கான காஷ்மீர்தான் இன்று உலகின் மரணப் பள்ளத்தாக்காக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ‘காணாமல் போனவர்களின் பெற்றோர்கள்’ என்ற தனியொரு அமைப்பே செயல்படுகிறது.

2008-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி இந்த அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘உரி மாவட்டத்தின் 18 கிராமங்களில் இருந்து 940 சடலங்கள் புதைகுழிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக’ பட்டியல் இட்டது. காஷ்மீரில் காணாமல் போவதன் அர்த்தம் கொலை செய்யப்படுவதுதான். கேட்டு கேள்வியற்ற வகையில் ‘தீவிரவாதி’ சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் சத்தமில்லாமல் கொலை செய்யப்படுகின்றனர்.

‘உலக மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான தீர்ப்பாயம்’ அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் மரணப் படுகுழிகளைப் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் மிகக் கோரமானவை. பாரமுல்லா மாவட்டத்தில் 1,122 புதைகுழிகளும், குப்வாரா மாவட்டத்தில் 1,453 புதைகுழிகளும், பாந்திபோரா மாவட்டத்தில் 125 புதைகுழிகளும் இருக்கின்றன.

இந்த மூன்று மாவட்டங்களின் கொத்துக் கொலைக்குழிகளில் இருந்து மட்டுமே 2,943 சடலங்கள் மீட்கப்பட்டன. இவை ஏதோ இறந்துபோய் புதைக்கப்பட்டவர்களின் சமாதிகளை தவறுதலாக கணக்கெடுத்து சொல்லப்பட்ட புள்ளிவிவரம் அல்ல. அனைத்தும் உண்மை. அந்த அளவுக்கு அங்கு கொலைகள் மலிந்து கிடக்கின்றன. பல புதைகுழிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிச்சாமா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் தாங்கள் இதுவரை 230 சடலங்களை புதைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சிறு கிராமத்தில் மட்டும் மொத்தம் 165 மரணக் குழிகள் கண்டறியப்பட்டன.

இந்த சடலங்கள் திடீர், திடீரென ராணுவத்தால் கொண்டுவரப்பட்டு புதைக்கப்படும். பிணம் வருவதற்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு புதைகுழி தோண்டச்சொல்லி தகவல் வரும். ஏன், எதற்கு என கேட்காமல் தங்களின் சகோதரர்களை புதைப்பதற்கான புதைகுழிகளை அவர்களே தோண்ட வேண்டும். கேள்வி கேட்டால் நாளை வேறு எங்கேனும் தோண்டப்படும் குழிகளில் அவர்களும் சேர்த்து புதைக்கப்படுவார்கள்.

இந்த சடலங்களுக்கு ராணுவம் சொல்லும் ஒரே விளக்கம், ‘இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்பது மட்டும்தான். பிணங்கள் எழுந்து பேசவாப் போகின்றன? இப்படி புதைக்கப்படும் சடலங்களின் அடையாளங்களைக் கேள்விப்பட்டு தொலைதூரங்களில் இருந்து வரும் உறவினர்கள் பிறகு தோண்டி சடலங்களை மீட்டு எடுத்துச் சென்ற சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.

பண்டிட்டுகளுக்கு நடந்தது என்ன?

காஷ்மீர் பிரச்னைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்துத்துவ சக்திகள் ‘பண்டிட்டுகள் வெளியேற்றம்’ என்பதை மட்டுமே எதிர்வாதமாக முன்வைத்து வருகின்றன. உண்மை என்ன என்பதைப்பற்றி அறிய வேண்டுமானால் காஷ்மீரில் இரண்டு முறை ஆளுநராக இருந்த ஜக்மோகனைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும். 1990-ம் ஆண்டு காஷ்மீரில் இரண்டாவது முறையாக ஆளுநர் பொறுப்பேற்றுக்கொண்ட ஜக்மோகன், அந்த அழகிய பள்ளத்தாக்கில் வகுப்புவாத எண்ணங்களை கட்டற்று பரப்பினார்.

உலகம் காஷ்மீரத்தை ‘பூலோகத்து சொர்க்கம்’ என்று வர்ணித்து வந்த நிலையில், ஜக்மோகன் அதை ‘தேள்களின் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிட்டார். அவர் ஆளுநராக இருந்தபோதுதான் ஆயுதப் படைகளின் துப்பாக்கிகள் தங்கு தடையின்றி இயங்கின. தொடர்ச்சியான இந்திய மேலாதிக்கம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, கொலைகள், நிம்மதியற்ற வாழ்க்கை, கண்காணிப்பு எல்லாம் சேர்ந்து காஷ்மீரிகளை சோர்வுற செய்திருந்த வேலையில் அவர்களை மத ரீதியாக பிரிக்கும் வேலையை ஜக்மோகன் திட்டமிட்டே செய்தார்.

90-களில் பள்ளத்தாக்கில் தலையெடுத்த சில ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் பண்டிட்டுகள் சிலரை கொலை செய்தது. ‘அவர்கள் அரசாங்கத்தின் கைகூலிகளாக இருந்தார்கள்’ என காரணம் சொல்லப்பட்டாலும் இதை ஏனைய ஜனநாயக சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பள்ளத்தாக்கில் சிறுபான்மையாக இருந்த பண்டிட்டுகளை இத்தகைய கொலைகள் அச்சுறுத்தின. சூழலை சரிசெய்து இயல்பு வாழ்க்கையை உறுதிபடுத்த வேண்டிய கடமை காஷ்மீரத்து அரசுக்கு இருந்தது. ஆனால் ஆளுநராக இருந்த ஜக்மோகனோ, ‘பண்டிட்டுகள் அனைவருக்கும் அரசால் பாதுகாப்புத் தர முடியாது. அவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறலாம்’ என்று அறிவுரை கூறினார். அரசே இப்படிப் பேசினால் பண்டிட்டுகள் என்ன செய்வார்கள்? பல்லாயிரக்கணக்கானோர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு புலம் பெயர்வதை அரசு விரும்பியது, ஊக்குவித்தது. அப்படி வெளியேறியவர்களுக்கு தலைநகர் டெல்லியில் முக்கிய வணிகப் பகுதிகளில் கடைகளும், வீடுகளும் ஒதுக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு வேலையேப் பார்க்காத நிலையிலும் முழு ஊதியம் வழங்கப்பட்டது. வேறு எந்த உள்நாட்டு அகதிகளுக்கு வழங்கப்படுவதைக் காட்டிலும் மிக அதிகமான சலுகைகள் பண்டிட்டுகளுக்கு வழங்கப்பட்டன, வழங்கப்படுகின்றன. அகதி வாழ்க்கையின் துயரத்தை அளவிட பொருளாதாரம் மட்டுமே அளவுகோல் இல்லை. உறவுகளையும், மண்ணையும் விட்டு புலம்பெயர்ந்த அகதியின் துயரங்கள் பண்டிட்டுகளுக்கும் உண்டு. ஆனால் அவர்களின் நிலைமைக்கு இந்த அரசும் ஒரு வகையில் முக்கியக் காரணம். ஏனெனில் இந்திய அரசு அரசு முன்னெடுக்க விரும்பிய மதவாத அரசியலுக்கு பண்டிட்டுகளின் இடப்பெயர்வு பெரும் அளவுக்கு உதவியது. இந்தப் பின்னணியிலேயே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் முஸ்லிம்களை பிரித்தது யார்?

இந்த கேள்விக்கு மிக நேரடியான பதில் ‘இந்துத்துவ சக்திகள்’ என்பதுதான். இதன் வேர் 1952-லேயே தொடங்கிவிட்டது. டோக்ரா மன்னரின் உதவியுடன் காஷ்மீரத்துக்குள் நுழைந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், ‘ஜம்மு பிரஜா பரிசத்’ என்ற மதவாத அமைப்பை உருவாக்கினார்கள். காஷ்மீரத்துக்கான 370-வது பிரிவு சிறப்புரிமைகள் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். வாக்கெடுப்பு நடத்துவதையும் கடுமையாக எதிர்த்தனர். இவர்களின் இத்தகைய திட்டமிட்டப் போராட்டம் பள்ளத்தாக்கின் முஸ்லிம் மக்களை அந்நியப்படுத்தியது. இதை அப்போது பிரதமராக இருந்த நேருவும் உணர்ந்திருந்தார். 1953 ஜூன் 29-ம் தேதியன்று மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய்க்கு நேரு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ‘‘காஷ்மீர் பிரச்னை முன் எப்போதையும் விட சிக்கலானதாக மாறியுள்ளது. ஜம்மு பிரஜா பரிசத் இயக்கம் தொடங்கப்பட்டப் பின்பு பள்ளத்தாக்கின் நிலை மோசமாகிவிட்டது. அங்கு பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் மக்கள் இந்த இயக்கத்தைக் கண்டு அரண்டு போயிருக்கிறார்கள். இந்தியாவுடன் இணைதல் என்ற அவர்களின் முந்தைய விருப்பம் இப்போது நசிந்து போயுள்ளது. பாகிஸ்தான் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனைகிறது. இந்து வகுப்புவாதிகள் ஜம்முவில் ஓர் இயக்கத்தைக் கட்ட முடியும் என்றால் இஸ்லாமிய வகுப்புவாதிகள் ஏன் காஷ்மீரில் இயங்கக்கூடாது? பிரஜா பரிசத் இயக்கத்தின் விளைவாக நாம் இன்று காஷ்மீரப் பள்ளத்தாக்கை இழக்கும் நிலையில் உள்ளோம். மக்கள் விரும்பாத நிலையில் நாம் கத்தி முனையில் காஷ்மீரை பிடித்து வைத்திருக்க முடியாது. இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்ற குரல்கள் முதன்முதலாக காஷ்மீரத்துக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன’’ என்று நேரு குறிப்பிடுகிறார். இதுதான் யதார்த்தம்.

நேரு காலத்திலேயே உள்ளே நுழைந்துவிட்ட இந்துத்துவ சக்திகள் இப்போது வரை காஷ்மீரத்து முஸ்லிம்களை தொடர்ந்து அந்நிய சக்திகள் போலவே சித்தரித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் அறிவுஜீவி மணிரத்னம், ‘இந்தியா பிடிக்கலேன்னா பாகிஸ்தானுக்குப் போக வேண்டியதானே?’ என்று ‘ரோஜா’வில் கேட்பது தனிப்பட்ட அவரது கேள்வி அல்ல. இந்திய இந்துத்துவ மனநிலையின் வெளிப்பாடு.

கார்கிலுக்கு மிக அருகில் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி உண்டர்மான் என்ற குடியிருப்பு உள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் அந்த இடம் பாகிஸ்தானுக்குப் போனது. இதனால் அவர்கள் பாகிஸ்தானியர்களாய் ஆனார்கள். 1971-ல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது இந்த குடியிருப்பை இந்தியப்படை கைப்பற்றியது. ஒரே இரவில் உண்டர்மான் கிராம மக்கள் இந்தியர்களாக மாறிப்போனார்கள். தேசம், தேசபக்தி என்பவை எல்லாம் எந்த அளவுக்கு கேலிக்கூத்தானவை என்பதற்கு இந்த எல்லையோரத்து கிராமம் ஓர் உதாரணம்.

இதற்கான விலை என்ன?

கார்கில் போருக்கு இந்தியா செலவிட்டத் தொகை 3,200 கோடி ரூபாய். போர்க்காலம் தவிர்த்த இதரக் காலங்களில் பனிமலை சிகரமான சியாச்சின் பகுதியில் சும்மா ராணுவத்தை நிறுத்தி வைப்பதற்கு தினந்தோறும் செலவிடப்படும் தொகை 6 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டுக்கும் சியாச்சினுக்கு மட்டும் 2,190 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கார்கிலில் தொடர்ந்து படையை நிறுத்தி வைக்க தினமும் 10 கோடி ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் தொகை 3,650 கோடி ரூபாய். ஆக மொத்தம் கட்டுப்பாட்டுக்கோட்டின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது இந்திய அரசு. இதுபோக படைவீரர்களின் சம்பளம், ஓய்வூதியம் தனி. இவ்வளவு பணத்தைக் கொட்டி இந்தியா பற்ற வைக்கும் தேசிய வெறியில்தான் அதன் இருப்பு அடங்கியிருக்கிறது.

உண்மையில் காஷ்மீரைப் பொருத்தவரை கட்டுப்பாட்டுக்கோடு என்று ஒன்று இல்லவே இல்லை. போர் நிறுத்தக்கோட்டையே இரு நாடுகளும் கட்டுப்பாட்டுக் கோடாக கருதி வருகின்றன. ‘‘காஷ்மீர் பற்றிய பேச்சு வரும்போது எல்லாம் இந்தியர்கள் அனைவரும் தேசபக்தர்களாக இருக்க வேண்டும் எனக் கோரப்படுகிறது. தேசபக்தி என்ற சொல்லுக்கு ஒரு ஜனநாயக உள்ளடக்கம் இருக்கும் என்றால் அதற்கு நாம் செய்ய வேண்டியப் பணி, இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்னையை முன் வைக்கும் விதத்தையும், அதை கையாளும் முறையையும் மிக கடுமையாக எதிர்ப்பதாகவே இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிடுகிறது நாம் தொடக்கத்தில் பார்த்த 13 பேர் கொண்ட மனித உரிமையாளர்களின் ஆய்வறிக்கை. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கௌரவத்துடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த், அர்ஜுன் மாதிரியான மொக்கைகள் கூட ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று சொல்லிச் சொல்லி இந்திய தேசிய வெறிக்கு தூபம் போட்டு வந்துள்ளனர். தேசபக்தி தப்பில்லை. ஆனால் ‘இது எங்கள் தேசமே இல்லை. எங்களுக்கு சுதந்திர காஷ்மீர் வேண்டும்’ என அவர்கள் கேட்டுக்கொண்டிருக்க, அதன் பெயரால்தான் இந்திய தேசபக்தி வரும் என்றால் அது எத்தனை வஞ்சகமும், சூழ்ச்சியுமானது?

காஷ்மீர் மக்களின் விருப்பம் என்ன?

இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்’ என்று இந்தியா சொல்கிறது. கீழ் பகுதியில் இருக்கும் காஷ்மீரை ‘இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்’ என பாகிஸ்தான் சொல்கிறது. ‘ஆனால் உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்திருக்கின்றன’ என்பதே பூர்வீக காஷ்மீரிகளின் முழக்கம்.

பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைவதையும் விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் ‘சூஃபி’ வகையைச் சேர்ந்தவர்கள். தர்காவை வழிபடும் தனிவகையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். தங்களை தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகளின் பெரும்பான்மைப் பகுதியினர் ‘சுதந்திர காஷ்மீர்’ கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரிகளை பிரதிநிதிகளாகக் கூட அழைப்பது இல்லை.

2000-ல் ‘அவுட்லுக்’ இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு காஷ்மீரிகளின் மனநிலையை துல்லியமாக சொல்லியது. அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 74% மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர். 16% பேர் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்கின்றனர். 2% மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். காஷ்மீரிகளின் உண்மை மனநிலையை மிகத் துல்லியமாக வெளிக்கொணர்ந்த கருத்துக் கணிப்பு இது. ஆனால் 2% மனநிலையைதான் ஒட்டுமொத்த காஷ்மீரிகளின் மனநிலையாக தொடர்ந்து சித்தரிக்கிறது இந்தியா.

இது எங்குபோய் முடியும்?

தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்களானது எங்கு, எப்போது முடியும் என எவராலும் கணித்து சொல்ல முடியவில்லை. ஏனெனில் இந்தப் போராட்டங்கள் எந்த இயக்கத்தாலும் அறிவித்து நடத்தப்படுபவை அல்ல. இவை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள். இந்த அம்சம்தான் இந்திய அரசை அசைத்துப் பார்க்கிறது. ஆனாலும் தனது நயவஞ்சக நாடகத்தை வெவ்வேறு வடிவங்களில் அரங்கேற்றுவதை காங்கிரஸ் நிறுத்தவில்லை. சமீபத்தில் காஷ்மீருக்கு மீண்டும் சுயாட்சி அந்தஸ்து வழங்குவதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சொன்னார். உடனே பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. அப்படியான ஓர் எதிர்ப்பை எதிர்பார்த்திருந்ததுபோலவே சுயாட்சி அறிவிப்பை கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்வது என்ற மையமான கோரிக்கைப்பற்றி இதுவரை இந்த அரசு பரிசீலிக்கவில்லை.

‘’எங்கள் பிள்ளைகள் சிறு வயதில் இருந்து வன்முறைகளையும், கொலைகளையும், துப்பாக்கிகளையும் பார்த்து பார்த்து வளருகின்றனர். இதனால் அவர்களின் மனங்களில் கொலை இயல்பானது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. வளர்ந்ததும் கொலையும், எதிர்கொலையும் சராசரி நடவடிக்கைகளில் ஒன்றென நினைக்கின்றனர். இந்த உளவியல் சீர்கேட்டை எதைக்கொண்டு சீர்செய்ய இயலும்?’ என கேட்கும் பாரமுல்லா மாவட்டப் பெரியவரின் கேள்விக்கு இந்த அரசாங்கம் என்ன பதில் வைத்திருக்கிறது?

இன்னொரு முக்கியமான விஷயம், காஷ்மீரில் வரலாற்றிலேயே லட்சக்கணக்கானவர்கள் போராட்டக் களத்தில் நிற்பது இதுவே முதல்முறை. அவர்களின் கைகளில் எல்லா காலத்திலும் கற்கள் மட்டுமே இருக்கும் என சொல்ல முடியாது. நாளை ஆயுதங்களும் வரலாம். இத்தனை லட்சம் பேரின் கைகளில் ஆயுதங்கள் வந்தால் அந்தப் பள்ளத்தாக்கு தாங்காது.

என்னதான் தீர்வு?

யாசின் மாலிக், சையது அலிஷா கிலானி, மிர்வேஸ் உமர் ஃபாருக் ஆகிய முக்கியமான மூன்று பிரிவினைவாத தலைவர்களும் ஆயுதம் தாங்கிய பாதையில் இருந்து அமைதிவழிப் போராட்டத்துக்கு வந்துள்ளனர். இது ஒரு நல்ல அம்சமாகவே தெரிகிறது. அரசு இத்தகைய ஆரோக்கியமான போக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு தீர்வுத் திட்டத்தை நோக்கி நகர வேண்டும். காஷ்மீரைப் பொருத்தவரை வாக்கெடுப்பு ஒன்றுதான் என்றென்றைக்குமான தீர்வின் திறவுகோலாக இருக்க முடியும்.

ஆனால் பல பத்தாண்டுகளாக நிலங்களிலும், மனங்களிலும் வன்முறை அழுந்த விதைக்கப்பட்டிருக்கும் சூழலில் உடனடி வாக்கெடுப்பு என்பது வன்முறைக்கே வழிவகுக்கும். ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறுவது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ராணுவத்தினரை சில மாத சீரான இடைவெளியில் திரும்பப் பெற்றுக்கொள்வது, சுயாட்சி அந்தஸ்தை மறுபடியும் வழங்குவது, இதுவரை காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி வெளிப்படையான வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்பது, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது, பண்டிட்டுகள் உள்ளிட்ட துரத்தி அடிக்கப்பட்ட அனைவரையும் அவரவர் பிரதேசங்களில் மீள குடியமர்த்துவது, தவறிழைத்த ராணுவத்தினருக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தருவது…. என அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதற்கு செய்ய வேண்டியப் பணிகளே ஏராளம் இருக்கின்றன.

இவற்றை செய்து முடித்தால்தான் காஷ்மீரில் வாக்கெடுப்புக்கு ஏதுவான சூழலே உருவாகும். அதற்கு முதலில் காஷ்மீர் பிரச்னை என்பது ஒரு அரசியல் பிரச்னை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். துப்பாக்கி முனையில் அமைதியை கொண்டு வர நினைத்தால் காஷ்மீரிகள் கைகளில் ஏந்தி நிற்கும் கற்களுக்கு முன்னால் துப்பாக்கிகள் மண்டியிடத்தான் வேண்டும்!

-பாரதி தம்பி (2013)

உதவிய நூல்கள்:
1.காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம்.
2. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
3. காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு-

அ.முத்துகிருஷ்ணன். கீற்று.காம்