ஞாயிறு, 30 ஜூன், 2019

இந்துக்கோவிகளது சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்.

1.பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகள்.

2. திருவள்ளூர் வீரராகவன்,சோளிங்கர்,வேலூர்-ரத்னகிரி,திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகள்

3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகள்

4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகள்

5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில் வருமானம் 100 கோடிகள்

6. சென்னை வடபழனி, பார்த்தசாரதி,கபாலி,அஷ்டலட்சுமி,காளிகாம்பாள், மருந்தீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150கோடிகள்

7. தேனி வீரபாண்டி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன்,சமயபுரம் மாரியம்மன், பண்ணாரி அம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்கள் வருமானம் 200 கோடிகள்

8. கும்பகோண மகாமகக் கோவில்கள், தஞ்சைக் கோவில்கள் வருமானம் 100 கோடிகள்

9. ராமேஸ்வரம், நெல்லையப்பர், சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

10. கோவை ஈச்சனாரி விநாயகர், மருதமலை, பேரூர், ஈரோடு, திருப்பூர்,நீலகிரி,சத்தியமங்கலம் கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

11. திருச்செந்தூர் முருகன், தென்காசி கோமதியம்மன், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,கோவில்பட்டி, குற்றாலீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

12. பிள்ளையார்பட்டி விநாயகர், குன்றக்குடி முருகன், காரைக்குடி, புதுக்கோட்டை கோவில்கள் வருமானம் 100 கோடிகள்

13. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோபி, விழுப்புரம், கோவில்கள் 100 கோடிகள்

14. திண்டுக்கல், காஞ்சி,கரூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர், கோவில்கள் வருமானம் 100கோடிகள்

இதுபோக உண்டியல் வைத்த ஆயிரமாயிரம் கோவில்கள் அதன் சொத்துக்களும் இந்த அரசுத் துறையின் கீழ் வருபவையே

(இந்த கணக்குகள் 2007 ஆண்டு சேர்ந்தவை இபொழுது எவவளவு என்று உங்கள் கற்பனைக்கே)

ஆக இந்துக் கோவில்களில் பக்தர்கள் உண்டியல் மூலம், நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுதல் மூலம், திருக்கல்யாணம், தேர் இழுப்பு, மொட்டையடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், ப் என்பதான சடங்குகள் மூலம், பிரசாத விற்பனை என்பதன் மூலமும்,வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு மன்னர்கள் எழுதிவைத்த பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள், கோவிலைச் சுற்றிய வீதிகளில் இருக்கும் கடைகள் மூலம் மிகமிகக் குறைந்த குத்தகை இவைகளின்று வரும் வருமானத்தின் அளவு என்பது..

150+150+150+150+100+150+200+100+150+150+100+100+100= 1800கோடிகள்

குறைந்தபட்ச வருமானம் என்பது கோவில்கள் வாயிலாக 1800 கோடிகள்.

கோவில்கள் வழியாக வரும் இதுபோக சைவ ஆதீனங்களது சொத்துக்கள் வழியாக வரும் வருமானம் வேறு. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பல்வேறு சைவ ஆதினங்களுக்குச் சொந்தமானவை.

மேல்மருவத்தூர் கோவில் நிறுவனம் இந்தத் துறையின் கீழ்வராததால் விளைந்த நன்மைகள்:
1)பாலி டெக்னிக் கல்லூரி
2)இஞ்சினியரிங் கல்லூரி
3) மருத்துவப் படிப்புக்கல்லூரி + மருத்துவமனை என மக்களுக்கு பக்தர்களின் காணிக்கை, சடங்குகள் வழி வருமானம் செலவிடப்பட்டிருக்கிறது.

காஞ்சி சங்கரமடம் மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமாஷி கோவில் + இதர கோவில்கள் வழி பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, சடங்குகள், ப்ரஸாத விற்பனை வருமானம் சங்கரா பள்ளிகளாக, சங்கரா கல்லூரிகளாக தமிழகமெங்கும் மக்களுக்கு உதவும் வழியில் செலவிடப்பட்டு வருகின்றன.

இந்துமதம் கிறித்துவ மிஷநரி மாதிரி மருத்துவமனை, பள்ளிகள் என்று மக்களுக்குப் பயன்படுமாதிரியான நல்லதைச் செய்வதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு மக்களிடத்தில் இருப்பது.

1800 கோடிகளைச் செலவழித்து 50 கல்லூரிகள் கட்டலாம். படிப்புக்கு இட ஒதுக்கீடு அவசியப்படாமல் கேட்டால் படிப்பு கிடைக்கும் படி இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்கிவிடலாம். மருத்துவமனைகள் பல கட்டி மக்களின் சுகாதார, ஆரோக்கியம் பேணலாம்.

இந்துக்கோவில்கள் வழி வரும் 18000 கோடி வருமானத்தை கடவுளே இல்லை..இல்லை..இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டம் கொள்ளையடிக்கிறது தமிழக அரசு அதிகாரத்தில் 40 ஆண்டுகளாக இருந்தபடியே.

வெட்டியான பிராமண எதிர்ப்பு என்பதில் மக்களை திசைதிருப்பி, காணிக்கையை உண்டியலில் மட்டுமே போடவும் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்து, மிக மலிவாக குத்தகையை கழகக் கண்மணிகளுக்கு விட்டு, என்று எல்லாவகையிலும் மொத்தமாக கோவில் வருமானங்களான நிதியைக் கொள்ளையடிப்பது தமிழக அரசுகள்.

ஆந்திராவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருமானத்தில் ஒரு யூனிவர்சிட்டி, 25 கல்லூரிகள், கல்விநிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என இறைவனால் கிடைக்கும் வருமானம் கல்விக்கு முழுமையாகப் பயன்படுத்துகிறது...

கோவில் சொத்துக்களை வெங்காய அரசியல் தலைவர்களது பரிந்துரையில் ஆக்ரமித்து அபகரிக்கும் வட்ட, மாவட்ட அரசியல் தலைவர்களது கட்டுப்பாட்டில் இருந்து இந்துக்கோவிகளது சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்.

நம் நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் சில...

நம் நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் சில...

 1- ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது.

  2- ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது.

  3- BSNL ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.

  4- HAL நிறுவனத்தில் சம்பளம் கொடுக்க பணம் இல்லை.

  5- தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம்.

  6- வீடியோகான் நிறுவனம் திவால்.

  7- டாடா டொகோமோ அழிந்துபோனது.

  8- ஏர்செல் கதை முடிந்து போனது.

   9- ஜேபி (Jaypee) குழுமம் உயிர் ஊசலாடுகிறது.

   10 - ஓஎன்ஜிசி (ONGC) யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.

  11- வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் (பெரிய கடனாளிகள்) நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர் (தப்பி ஓடவைக்கப் பட்டுள்ளனர்)

  12- பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி

  13 பி.என்.பி தள்ளாடுகிறது.

  14- மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன.

  15- நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள்.

  16- ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது.

  17 - செங்கோட்டை உட்பட அனைத்து தேசிய வளங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன.

  18 - பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

  19 - 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம்.

  20 - முந்தைய அரசாங்கங்களைவிட மூன்று மடங்கு அதிகமான ராணுவத்தினரின் உயிரிழப்பு.

  21- ஐந்து விமான நிலையங்கள் அதானிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல.

   குறிப்பு: இதில் எதுவுமே ஊடகங்களில் காண்பிக்கப்படவில்லை-காண்பிக்கப்படவும் மாட்டாது.

ஞாயிறு, 16 ஜூன், 2019

தேவதாசி ஒழிப்பு தீர்மானம்


தேவதாசி ஒழிப்பு தீர்மானம் 

#தேவதாசி

20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை.

ராஜராஜசோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர மற்ற நேரத்தில் பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும்.

45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.

முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார்.
அப்போது இருந்த இராஜாஜி இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர்,
மு.வ.ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.....இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது"
என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார்
"நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்"
என்று சொல்லி அனுப்பினார்.
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக இருந்தார்.

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.
அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பாப்பானர்களை பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.

♨இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டு போகாது என்றார்♨

இதை கேட்ட பார்ப்பனர்களுக்கு,
ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது. இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியார்_ன்னாலே...ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா...???

சனி, 15 ஜூன், 2019

Cambridge, Harward, Oxford, IIM, IIT, BIT, NIT மற்றும் உலகமே சங்கிகளின் விரிவாக்கத்தை வியந்து பார்க்கிறது

Cambridge, Harward, Oxford, IIM, IIT, BIT, NIT மற்றும் உலகமே சங்கிகளின் விரிவாக்கத்தை வியந்து பார்க்கிறது

குடியரசுத் தலைவர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்

18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள்
1 லட்சம் கிளைகள்
15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்
2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்
5 லட்சம் ஆசிரியர்கள்
1 கோடி மாணவர்கள்
2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)
1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)
15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்
1200 ப்ரகாஷன் சமூகம் (புத்தக வெளியீட்டு அமைப்புகள்)
9000 முழுநேர ஊழியர்கள்
7 லட்சம் மூத்த வீரர்கள் அமைப்புகள்
1 கோடி விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் (உலகம் முழுவதுமாக)
30 லட்சம் பஜ்ரங்தள் இந்துத்துவ தொண்டர்கள்
1.5 லட்சம் அலுவலகங்கள்
18 மாநிலங்களில் ஆட்சி
303 பாராளுமன்ற உறுப்பினர்கள்
64 மாநிலங்களவை உறுப்பினர்கள்
1460க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்

வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்
வன்பந்து பரிஷத்
சம்ஸ்கார் பாரதி ( பண்பாட்டு அமைப்பு )
விஞ்ஞான் பாரதி ( அறிவியல் அமைப்பு )
லகு உத்யோக் பாரதி ( சிறுதொழில் அமைப்பு )
சேவா சஹ்யோக் ( நமக்கு நாமே தொண்டு செய்யும் அமைப்பு )
சேவா இண்டர்நேஷனல் ( உலகளவில் தொண்டுசெய்யும் அமைப்பு )
ராஷ்ட்ரிய சேவா சமிதி ( தேசிய அளவில் தொண்டு செய்யும் அமைப்பு )
ஆரோக்ய பாரதி
துர்கா வாஹினி
சாமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் ( சமுதாய ஒருங்கிணைவு மேடை )
ஆர்கனேஸர்
பாஞ்ச்யஜன்ய
ஷ்ரீராம்ஜன்ம பூமி மந்திர் நிர்மாண் ன்யாஸ் ( ஷ்ரீ ராம் ஜன்ம பூமி கோயில் கட்டும் அமைப்பு )
தீன் தயாள் சோத் சன்ஸ்தான் ( தீன் தயாள் ஆய்வு மையம்)
பாரதீய விச்சார் சாதனா ( இந்திய கருத்தியல் அமைப்பு)
பாரத் விகாஸ் பரிஷத் ( இந்திய வளர்ச்சி அமைப்பு)
ஜம்மூ காஷ்மீர் ஸ்டடி சர்க்கிள்
த்ருஸ்டி சன்ஸ்தான் ( கண்பார்வை நிறுவனம்)
ஹிந்து ஹெல்ப்லைன்
ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்
ஹிந்து முன்னணி
அகில் பாரதிய சாஹித்ய பரிஷத் ( அகில் இந்திய இலக்கிய அமைப்பு )
பாரதிய கிஸான் சங்கம் ( இந்திய விவசாய சங்கம்)
விவேகானந்த கேந்த்ர
தருண் பாரத் ( இளைஞர் அமைப்பு )
அகில் பாரதிய க்ராஹக் பஞ்சாயத் ( அகில இந்திய வாடிக்கையாளர் சேவை மையம் )
ஹிந்துஸ்தான் சமாச்சார் ( ஹிந்துஸ்தான் செய்தித்தாள்)
விஷ்வ சன்வாத் கேந்த்ர ( உலக கலந்துரையாடல் மையம்)
ஜன கல்யாண் ரக்த பேடீ ( இரத்த தான அமைப்பு
இதிகாஸ் ஸங்கலன் சமிதி ( இதிகாஸ ஒருங்கிணைப்பு மையம்)
ஸ்த்ரீ சக்தி ஜாக்ரண் ( பெண் சக்தி விழிப்புணர்வு மையம் )
ஏகல் வித்யாலய் ( பள்ளிகள்)
தர்ம ஜாகரண் ( மத விழிப்புணர்வு மையம்)
பாரத் பாரதி
சாவர்க்கர் அத்யாஸன் ( சாவர்கள் பயிற்சி மையம்)
ஷிவாஜி அத்யாஸன் ( ஷிவாஜி பயிற்சி மையம்)
பதித் பாவன் சங்கடன்
ஹிந்து ஏக்தா ( ஹிந்து ஒற்றுமை அமைப்பு)
இன்னும் இதுபோன்ற பற்பல அமைப்புகள்

இவையெல்லாம் சேர்ந்த்துதான் ஆர் எஸ் எஸ். காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ அவ்வளவு சீக்கிரமாக இதன் வேரை அசைக்கக்கூட முடியாது. 92 ஆண்டுகளாக வளர்ந்திருக்கும் இந்த ஆர் எஸ் எஸ் அடுத்த 1000 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்யும்.

பரமஹ வைபவம் நே தும்ஹே தத்வ ராஷ்ட்ரமஹ
பாரத் மாதா கீ ஜய

எழுத்தாளர். உஷா அதாலே – இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்றுவிடாது..- பி.ஆர்.அம்பேத்கர்

நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்றுவிடாது..- பி.ஆர்.அம்பேத்கர்
**********************************************
நிலம் பற்றிப் பேசியவுடனே எல்லாருக்கும் இவ்வளவு வலிக்கிறது. நிலமில்லாதவர்களின் வலியை எப்போது உணரப்போகிறீர்கள்?
சென்னையின் #பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்தி அவர்களை 40 கி. மீ தூரத்தில் அடைத்துவைத்து அவர்களின் இடத்தில் மால்களும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ஸும் இப்போது வந்துள்ளது தெரியும் தானே உங்களுக்கு?
#மெட்ரோரயில் திட்டத்தில் பணிபுரிந்த வட இந்தியத் தொழிலாளிகள் காயங்களாலும், விபத்தாலும் உள்ளேயே இறந்துவிட்டால் அவர்களை பூமிக்குள்ளேயே புதைத்துவிட்டு காணாமல் போனதாகக் கணக்கெழுதுவது தெரியும்தானே உங்களுக்கு?
இந்த நகரத்தைக் கட்டியமைத்தவர்களுக்கு இந்த நகரத்தில் இடமில்லை என்பது தானே இங்கு நிலை..
அதே போலத்தான்..
பாறைகளே இல்லாத ஆற்றுப்படுகை பூமியான தஞ்சாவூரிலும் ராஜராஜ சோழன் கோவில் கட்டுவதற்காக ஒன்றரை லட்சம் டன் கற்பாரைகளைக் கொண்டு வந்து பிரம்மாண்டமான அக் கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனைத் தொழிலாளிகள் நசுங்கிச் செத்திருப்பார்கள்??
நவீன காலத்து இயந்திரகளில்லை,
பாதுகாப்புக் கருவிகளில்லை, குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லை, ஆதிகாலத்து சாதி எனும் இழிவைத் திணித்து மக்களைப் பிரித்து, அடிமையாப் பிறந்து அடிமையாகவே இறப்பது, சேவகம் செய்வதுதான் உனக்கு விதிக்கப்பட்டது என நம்பவைத்துத்தான் இந்த உழைப்புச் சுரண்டல்கள் நடந்திருக்கும்.
உண்மையைச் சொன்னால், #பா_இரஞ்சித் ஐத் திட்டுவதன் மூலம் நிலம் குறித்த மிகமுக்கிய கேள்வியில் இருந்து நழுவுகிறார்கள், ஏனென்றால் சொல்வதற்குப் பதில் இல்லை!! மாமன்னனின் கொடுமைகள் ஒவ்வொன்றாய் விவாதத்திற்கு வருகின்றன. 40000 ஏக்கர் நிலத்தை பா. இரஞ்சித் என்ற ஜமீன் கொடுத்தாரா என்ற தற்குறிகளின் மீம்ஸ் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியது. இடைநிலை சாதிகளிலுள்ள நிலமற்றவர்களே.. சாதி எனும் மனநோய் உங்களை எதார்த்தத்தைக் காணவிடாமல், கோபத்தோடு மட்டும் அணுகச் சொல்கிறது. இந்தியா முழுக்க சேரிகள் இருக்கின்றன, எல்லாச் சேரிகளும் ஊருக்கு வெளியே இருக்கின்றன, ஊருக்குள் கோவில் இருக்கிறது, கோவிலின் கட்டுப்பாட்டில் ஏராளம் நிலங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களும் இந்துக்கள் என்றால், நிலமற்ற இந்துக்களுக்கு அந்த நிலங்களை பகிர்ந்தளிக்கலாமே? அவர்கள் இடைநிலைச் சாதி நிலமற்றவர்களாக இருந்தாலும் சரி. பகிர்ந்து கொடுங்களேன்.
இந்துக்கள் நலன் காக்கும் நாடு தானே இது??
உங்கள் ஆதிக்க மூளை இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கெட்டவார்த்தையில் தான் பதில் தரும்.
உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்..
அதுதான் சாதிக் கட்டமைப்பின் குரூரம்.
ஒருவன் பிறக்கும் போதே 1000 ஏக்கர் நிலமுள்ளவனாகப் பிறக்கிறான்,ஒருவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு சென்ட் நிலமில்லாமல் உழைத்தே மடிகிறான். இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாயத் தொடர்வது, நாம் 21ம் நூற்றாண்டில் முகநூல் தலைமுறை, திடீரென கண்விழித்து "சாதி ஏற்றத் தாழ்வுதான் பொருளாதார பின்னடைவுக்குக் காரணம் என்பவர்களை, சாதிவெறியன் என்கிறோம்!!,
பா.இரஞ்சித் பேசுவதால் இங்கு சாதி வளரவில்லை, அவர் பேசுவதால் எங்கே சாதி அமைப்பு ஒழிந்துவிடுமோ, கையிலிருக்கிற நிலமும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இப்படி கீழ்த்தரமான எதிர்வினைகளை ஆற்றுகிறது.
மக்களாட்சி காலத்திலேயே கருத்து சுதந்திரத்தின் நிலையைப் பாருங்கள்..
மன்னராட்சியில் எப்படி இருந்திருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
வழக்குகள் இவரை ஒன்றும் செய்யாது.
சமத்துவம் எனும் மனித மாண்பு மீட்கப்படும் காலம் வரும், அப்போது பா.இரஞ்சித் எனும் மகத்தான போராளியைச் சமூகம் உணர்ந்து கொண்டாடும்.
#StandWithPaRanjith
#நிலம்எங்கள்உரிமை.

வெள்ளி, 14 ஜூன், 2019

பா. ரஞ்சித்தும் I சோழர்களும் I தமிழ்த்தேசியமும் I பார்ப்பனர்களும் I திராவிட அரசியலும் I வெள்ளாள சாதிகளும் I அரசியல் காரணங்களும்


பா. ரஞ்சித்தும் I சோழர்களும் I தமிழ்த்தேசியமும் I பார்ப்பனர்களும் I திராவிட அரசியலும் I வெள்ளாள சாதிகளும் I அரசியல் காரணங்களும்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை  மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்;

1 . இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம்

2 . சைவ மடங்களிடம் குவிந்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மீட்பு

தமிழ்த்தேசியம், திராவிடம், பார்ப்பனீயம் - என்னும் இந்த மூன்று முனைகள் தத்தம் காரணங்களுக்காக தேர்வின் அடிப்படையில் மௌனம் காத்தாலும், இந்த விவகாரத்தை பொறுத்த மட்டில் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை பரந்துபட்ட தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. இதை நேர்மையோடு அணுகி அறத்தொடு பேச முடியுமேயானால், அது தலித் தரப்பிலிருந்தோ அல்லது பழமைவாத கருத்துகளையும் ஜனநாயகமற்ற போக்கையும் நிராகரிக்கும் முற்போக்கு இடதுசாரி தரப்பிலிருந்தோ மட்டுமே சாத்தியம். சம்மந்தப்பட்டவர்களை குற்றங்சாட்டும் நோக்கமின்றி, இதை தரவுகளின் படி பரிசீலித்து விவாதத்திற்குள்ளாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வழக்கம் போல இக் கருத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தான் வரலாற்றில் முதன்முதலாக சொல்லியிருப்பதை போல கண்டங்களும் எதிர்வினைகளும் வந்த வண்ணமிருக்கின்றன. தலித்துகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வரலாற்றை ஒரு தலித் பேசுவதற்கு ஆயிரமாண்டு கால வரலாறு தேவையில்லை, ஐம்பதாண்டுக் கால தமிழக அரசியலே போதுமானதாக இருந்தாலும், ரஞ்சித் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர் தம் சொந்த அனுமானத்திலிருந்து வெளிப்பட்டவை அல்ல, மாறாக அது ஆய்வுகளின் அடிப்படையிலானது.

பார்ட்டன் ஸ்டெயின், நொபோரு கரோஷிமா, ஒய்.சுப்புராயலு, சுரேஷ் பி. பிள்ளை, நா. வானமாமலை, மே. து. ராசுகுமார் உள்ளிட்டவர்களின் ஆய்வுகளும், "சோழர்கள் ஆட்சியொன்றும் பொற்கால ஆட்சியல்ல" என்பதை ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், து.ரவிக்குமார், போ.வேலுசாமி, ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டவர்கள் பல சந்தர்ப்பங்களில் எழுதி வந்தவை தான்.

என் இந்த பதிவு மேற்சொன்ன அறிஞர்கள் எழுதியவற்றை மேற்கோளிட்டு, "இராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது?" என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நோக்கமல்ல, இணைய வாசிப்பு மட்டுமே அதற்கு உதவாது, இணையத்தில் வரலாற்றை சுருக்கி விடவும் முடியாது, ஆனால் இந்த விவாதங்கள் எந்தெந்த முனைகளில் இருந்து மழுங்கடிக்கப்படுகின்றன, "அதையொட்டிய மௌனங்கள் ஏன்?" என்பது விவாதிக்கப்பட வேண்டியவை.

1. தமிழ்த்தேசியம்

ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு கோட்பாடுகளை தாண்டி சில அடையாள உருவகங்கள் தேவைப்படுகிறது, இங்கே தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் சோழர் காலத்தையும் இராஜராஜனையும் தமிழ் அரசியலின் குறியீடாக்கி, சமகால அரசியல் போக்கை வரலாற்றிலிருந்து வேறுபடுத்தி தமிழர் அரசியலாக முன்னிறுத்த  சோழ வரலாறும் இராஜராஜனும் தேவைப்படுகிறது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு பேசும் சாதிகள் பெற்ற அதிகாரம் தான் தமிழகத்தின் மொத்த சீரழிவுக்கும் காரணமென முன்னிறுத்தவும் இவர்களுக்கு சோழர்கள் ஆட்சி தேவைப்படுகிறது.

2   திராவிடம்

திராவிட அரசியலின் தொடக்க காலந்தொட்டு சைவம்  / தமிழ்  / வெள்ளாள  / தெலுங்கு சாதிகளுக்கு உள்ள வரலாற்றுத் தொடர்பு முக்கியமானது.  திராவிட அரசியலின் பார்ப்பன எதிர்ப்பென்பது ஆதிக்கத்திற்கு எதிரானது என்று மட்டுமே நாம் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை, திராவிட அரசியலை ஆதரிப்பவர்கள் எல்லோருமே அக்கரணம் கொண்டே ஆதரிப்பவர்களும் அல்ல.  அது பார்ப்பனர்களுக்கும் - வெள்ளாள நிலவுடமைச் சாதிக்கு எதிரான அதிகாரப் போட்டியாகவும் வரலாறு இருந்திருக்கிறது. பெரியாருக்கும் சைவ வெள்ளாளர்களுக்கும் நடந்த வாக்குவாதங்கள், முரண்பாடுகள் தனிவொரு நீண்டக் கட்டுரையாக எழுதக்கூடியவை. பார்ப்பனரை எதிர்க்கும் வரை முற்போக்கு வேடமிட்டுச் சிரிக்கும் வெள்ளாள சாதியினர், அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்கத்தனத்தையும், சமூக அதிகாரத்தையும், பிற்போக்குத்தனங்களையும், நிலங்களையும் கேள்விக்குட்படுத்தினால் சீற்றம் கொள்வார்கள், அந்தச் சீற்றத்திற்கு பெரியாரும் தப்பவில்லை என்பது வரலாறு.

3 . பார்ப்பனர்கள்

சோழர் ஆட்சிக்காலத்தில் எல்லா விதமான சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள், தமிழகத்தில் பார்ப்பன வைதீகம் ஆழமாக கோலூன்றிய காலமாக சோழர் காலத்தை குறிப்பிடலாம். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், கொடுக்கப்பட்ட நிலங்கள் என எல்லாமே வைதீகத்திற்குட்பட்டவை. சதுர்வேதி மங்களம் என்றழைக்கப்படும் பகுதி சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊர், "சதுர்"என்றால் நான்கு, நான்கு வேதங்கள் ஓதும் பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலமாதலால் சதுர்வேதி மங்களம் என்று அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் கடந்து பிரிட்டிஷ் வருகையையொட்டி நிலங்களை வைத்து இனி பிழைக்கலாகாது என்றெண்ணிய பார்ப்பனர்கள் நிலங்களை விற்று நகரங்களிலும், கல்வி கற்றும் முன்னேறும் வேலையைத் தொடங்கினார்கள், அதனாலவே பிரிட்டிஷ் சர்காரில் முக்கிய பதவிகளை முன்கூட்டியே பெறும் நிலைக்கு முன்னேறினார்கள்.

இம்மூன்றையும் இணைப்புள்ளியாக கொண்டு இதன் உள்ளீடுகளை இணைத்துப் பார்த்தால்,

தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் நாயக்கர் ஆட்சிக்காலத்தை counter செய்வதற்காகவே, சோழர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களும், அவர்களுக்கிணையாக  அதிகாரத்திலிருந்து வெள்ளாளர் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. தலித் சமூகத்தவர் அடிமைகளாக்கப்பட்டதும், அடிமை முறையினை சட்டமாக்கியதும், கூலிகளாக்கப் பட்டதையும் பேசாமல், அந்த வரலாற்றை மறக்கடித்து நல்லதோர் தமிழ்ச் சமூகத்தை உருவாக்கி விட முடியாது. அப்படி உருவான கூலிச்சமூகங்களை சுரண்டித்தின்னது பார்ப்பனர்கள் மட்டுமல்ல, வெள்ளாள நிலவுடமைச் சமூகத்தாரும் தான்.

அதே போல சோழர்கள் ஆட்சியில் கணிசமாக நிலங்களோடும் அரசு பட்டங்களோடும் அதிகாரமாயிருந்த வெள்ளாளர்கள், சோழர் ஆட்சியின் முடிவில் பெரும் நிலக்கிழார்களானார்கள். நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் அது தொடர்ந்தது, திராவிட அரசியல் சார்புடைய வெள்ளாள சாதியினர் பலர், சோழர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பேசுவார்களேயொழிய, சோழர்கள் காலத்திலும் நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்த வெள்ளாளர்களை பற்றியோ, தெலுங்குச் சாதியினரை பற்றியோ பேச மாட்டார்கள். இது பற்றியான விவாதங்கள் வருகிற போது Diplomatic ஆக நழுவி, மேலோட்டமான கருத்துக்களை முன் வைப்பார்கள். தெலுங்கு சாதிகளின் ஆதிக்கத்தை குறித்து திராவிட அரசியலை கேள்வி கேட்கும் தமிழ் தேசியவாதிகளும், வெள்ளாள சாதி குறித்து கேள்விகேட்பதில்லை. பார்ப்பனர்களை அதிகார போட்டிக்காக மட்டுமே எதிர்க்கும் வெள்ளாளச் சாதிகளும் அரசியல் காரணங்களுக்காக தெலுங்கு சாதிகளை தங்களுடன் இணைத்துக்கொண்டது வரலாறு.

சோழர் ஆட்சிக்கால தொடர்பில் இப்படி நேரடியாகவே ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருப்பதால், அவரவர் தமக்கு வசதிப்பட்ட வரலாற்றை பேசிக்கொள்கிறார்கள், மறைக்கிறார்கள். ஆனால் சோழர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை தலித்துகளை "இழி பிறவிகள்" என்றும் சொல்லும் கல்வெட்டுகளும், அடிமைப்படுத்தப்பட்ட வரலாறும் எங்கும் விரவிக்கிடக்கிறது.

இதையெல்லாம் கடந்து தமிழக அரசியல் சூழலில் இராஜ ராஜ சோழனை "திராவிட ஐகானாக" மாற்ற முனைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி. இராஜராஜன் பெயரில் விருது அறிவித்தார், 1000 வது ஆண்டு விழாவில் அதுவரையில் இல்லாமல் பட்டு வேஷ்டி சட்டையோடு தோன்றினார், மனு நீதியின் படி ஆட்சி நடத்திய சோழனுக்கு சிலை வைத்தார், சோழர் பெருமை பேசினார்.

மு. கருணாநிதி இக்காரியங்களை செய்வதற்கு முன்பே வரலாற்று ஆய்வாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும், Subaltern விளிம்பு நிலை கருத்தியலின் படி புதிய கண்ணோட்டத்தில் மன்னராட்சி கால ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும், அடிமைத்தனத்தையும், ஜனநாயகமாற்றத் தனத்தையும் பேசத் தொடங்கி விட்டனர், அதன் பின்னும் இராஜராஜ சோழன் மோகத்தில் தன்னையே ராஜராஜனாக நினைத்து கருணாநிதி செய்ததெல்லாம் தனியே ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. அதிமுக அரசும் திமுக அரசும் போட்டி போட்டுகொண்டு இக்காரியங்களில் கவனம் செலுத்தியவையானாலும், விளிம்பு நிலை அரசியலை முற்போக்கு கண்ணோட்டத்தோடு அணுகும் அரசியலெல்லாம் அறிந்த கருணாநிதி இதைச் செய்தது விந்தை.

அதனால் தான் கவிஞர் இன்குலாப் "கண்மணி ராஜம்" என்னும் கவிதையில்

"ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன் ஜீவித்திருந்த இம்மன்னண்
என்ன செய்து கிழித்துவிட்டானாம்?"

என தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.

அரசு பாடத்திட்டத்திலிருந்த இந்த இன்குலாபின் கவிதையை மு. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டதென்றும், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் திமுகவின் சம்மதத்தோடு நீக்கப்பட்டதென்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன, எது எப்படியாயினும் அது யாரால் நீக்கப்பட்டது என்பதல்ல விவாதம்.

இராஜ ராஜ சோழன் குறித்த விமர்சனத்தை சமூக தளத்தில் வைக்கவே முடியாதளவு விமர்சனமற்ற மன்னனாக உருவகப்படுத்தியதில் அரசுக்கும் மு. கருணாநிதி போன்ற சமூகத்தளத்தில் முக்கிய பங்காற்றிய ஆளுமைக்கும் இருக்கும் தொடர்பு கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான் ஆதாரபூர்வமாகக் கூட நிலங்களை பற்றியும், ஆயிரமாண்டு முன்னே வாழ்ந்த மன்னராட்சி காலத்தின் கொடுமைகளையும் பேச முடியாத சூழலில் சமூகத்தை நிறுத்தியிருக்கிறோம்.

காலத்தின் அவசியமாக இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தமிழக பகுத்தறிவாளர்களோ, பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக அவ்வப்போது தங்களை சமாதானப்படுத்துக்கொண்டார்கள், ஒரு வகையில் அது அவர்களின் அரசியலுக்கான வசதியும் கூட. ஜனநாயகவாதிகளையும், இதை பேச வேண்டிய கட்டாயத்திலுள்ள தலித்துகளை தவிர இதை வேறாரும் பேசுவதற்கில்லை.

நெடுங்காலமாக இந்த மன்னராட்சிக் காலம் குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் தமிழ்ச்சூழலில் இல்லாதமையாமல், அது பொற்காலமென்னும் கருத்து பள்ளிக்கூடத்திலிருந்து சமூக, அரசியல் தளம் வரை பரந்துகிடந்தமையால், பல்வேறு சாதிகளும் அந்த பொற்காலத்தின் ஆட்சியை தான் சார்ந்த சாதியின் சாதனையாக உருமாற்றிக்கொள்ள தங்களை சோழ வம்சத்தோடு இணைத்துக்கொள்ளும் போக்கு தொடங்கியது. எந்த சமூக மக்கள் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் இந்த கொடுங்கோல் மன்னராட்சி காலத்தை எதிர்க்க வேண்டுமோ, யார் சுரண்டப்பட்டார்களோ, அவர்களே முன்னேறிய சாதிகளின் ஆண்டை பெருமைகளை பார்த்து அந்த மாயையில் விழுந்தது தான் பெருந்துயரம், “இந்நிலைக்கு எந்த வரலாறு துணை போனது?” என்பது தான் என் பதிவின் சாராம்சம்.

ஆய்வுகளாகவும், தரவுகளாகவும் பல புத்தகங்களில் இருக்கும் வரலாற்றுத் தரவுகளை பேச முடியாத சூழலில் தான் நாம் சமூகநீதி சமூகத்தை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், மீண்டும் முதல் பத்திக்கு போகிறேன், பா. ரஞ்சித் வெளிப்படுத்திய கருத்துக்கள் ரஞ்சித்தின் கருத்துக்கள் அல்ல, ஆனால் அதை ஒவ்வொரு காலத்திலும் யாரவது ஒருவர் பேசியே தீர வேண்டும், இதையெல்லாம் பேசுபொருளாக்க முடிகிற இடத்திலிருந்து இவ்விவாதத்தை பா.ரஞ்சித் தொடக்கி வைத்திருக்கிறார், இது வரலாற்றை கிளறும், மீள வைக்கும், பேசுபொருளாக்கும், அது தான் முக்கியம், பேச முடியாத நிர்பந்தத்திலிருப்பவர்கள் குறைந்தபட்சம் பேசுகிறவர் பேசட்டும் என்றாவது இதை கடக்க வேண்டும்.

காலத்தை கடத்தி விட்டால் வரலாறு மறையுமென்பவன் மூடன், காலம் கூடக்கூட வரலாறு புதிய வேகத்தோடு மீளும், துரோகத்தையும் இழந்ததையும் பேசினால் தான் எதை பெற வேண்டுமென்பது விளங்கும், பேசுவோம், நாம் பேசுவோம்.
- வாசுகி பாஸ்கர்

#RanjithIsRight

ஞாயிறு, 9 ஜூன், 2019

குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..! ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா?


குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..!

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா?

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர்.

ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
ஆனால் பயணம்..?

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
———————————————
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் …
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ..

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ….

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் …

“மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்” …

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்…!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!


உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. …

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. …

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா….

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ….

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா….

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா…

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்…

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்குமமேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே…

ஹெல்மெட்_அணிவதால். …
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது…

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே…

மீத்தேன் ஹை கார்பன் நீயூட்ரினோ இவையெல்லாம் எதற்காக .?

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். …

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்….

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

சனி, 8 ஜூன், 2019

#அதிமுக #ஆட்சியின் #அவல #நிலை இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின் EB Department AE,


#அதிமுக #ஆட்சியின் #அவல #நிலை
இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின் 
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala

நம்மையெல்லாம் எதிரியாக பாவித்த, நாம் நம்முடைய எதிரியாக வரித்துக்கொண்ட ஜெயலலிதா செய்யத்துணியாத தமிழ் துரோகத்தை, நாமெல்லாம் துச்சமாக எண்ணும், கோமாளிகள் என கேலி பேசும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் செய்திருக்கிறார்கள்.

சில தவறுகளை நம்மால் திருத்தவே முடியாது. அப்படியான தவறு தமிழகம் 2016 தேர்தலில் செய்தது. அந்த தவறு கூட இந்த கேட்டை தந்திருக்காது ஜெயா உயிரோடு இருந்திருந்தால்.

அந்த தவறை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பை 2019ல் பயன்படுத்தி இருந்தால் கூட இந்த துரோகத்தில் இருந்து தப்பியிருக்கலாம். அதையும் மானாமதுரை, பரமக்குடி, அரூர் உள்ளிட்ட 9 தொகுதி மக்கள் கெடுத்தனர்.

விளைவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது இறங்கியிருக்கிறது.
இன்று 29.05.2019  தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர்  பதவிக்கு  தமிழக முதல்வரால்  பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது இதில்  ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்  இடம் பெற்றுள்ளனர்

*தமிழ்நாடு அரசு  2016இல் செய்த திருத்தம் என்பது*

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான்.

மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது தமிழ்நாடு அரசு.

அதன் அடிப்படையில் தான் தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேலையில் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கிய தமிழக அரசே  *தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும்* என்ற கோரிக்கை நியாயமானது.

ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது நாம் கேட்பதில் தவறில்லை.

கேட்டால் கிடைக்காது அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த நிலையை மாற்றிட முடியும்.

இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்.

இப்போது TNEB -ல்

நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் .

#தமிழகஅரசுவேலை #தமிழருக்கே

 மாணவ, மாணவிகளே இனியும் நீங்கள் விழிக்கவில்லை என்றால் உங்களின் உரிமை பறிபோகும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.