#புனிதத்திமிர்
000 கனல் OOO
உங்கள் வீட்டு பீயை நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்றால் சக்கிலியனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்..!
உங்கள் வீட்டு சாவுக்கு நீங்களே பறையடித்துக் கொள்ளுங்கள் என்றால் பறையனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்…!
ஊருக்கு பொதுவான தேரில் நாங்களும் வடம் பிடிப்போம் என்றால் பள்ளனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்…!
உங்கள் வீட்டு பிணத்துக்கு நாங்கள் சவரம் செய்ய மாட்டோம் என்றால் நாசுவனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்…!
உங்கள் வீட்டு தீட்டுத் துணியை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள் என்றால் வண்ணானுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்….!
திமிர் பிடித்த எங்களை உங்களோடு சேர்த்துக் கொண்டு நாம் இந்துக்கள் என்கிறீர்கள்…!
நாம் இந்தியர் என்கிறீர்கள்
நாம் தமிழர் என்கிறீர்கள் சூத்திரர்களே!
சாதித்திமிர் சுமந்த நீங்கள் தலை தாழ்த்திப் பாருங்கள்
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுவதை!
பொட்டுக்கட்டி தாசியாக்கி
வெள்ளுடை தந்து விதவையாக்கி
உடன்கட்டை கொளுத்தி சதிமாதாவாக்கி
வன்கொடு மதியாளர்களே
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுகின்றன!
மனித உயிரின் உயிர்ப் புக்கான
யோனியின் இரத்தப் பெருக்கைக் கூட
தூய்மை (தூமை) என்றழைத்த தமிழர் நடுவே
தீட்டென ஒதுக்கிய

ஆதிக்கசாதிப் பெண்களின் கருப்பைகள்
ஆதிக்கசாதி விந்துக்களாலேயே
நிரப்பப்பட வேண்டுமென
ஆணவக் கொலைகள் புரியும்

எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் கவ்வி இழுத்த இதழ்
நிதம் பொய்யடா பேசும் மடமாந்தரை விட்டு
உய்யடா உய்யடா உய்
என்று பாடிய பட்டினத்தாரை
செருப்பால் அடிக்காத

ஐவருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம்
என்ற உங்கள் பஜனைப் பாடலுக்கு
உச்சுக் கொட்டவும்
நீங்கள் பணயப் பொருளாய் பந்தயம் வைக்கவும்
இனி ஒரு திரௌபதி கூட இருக்கப் போவதில்லை என்ன செய்யப் போகிறீர்கள் ?
நீங்கள் கரடியாய் கவ்வியிருக்கும்
புனிதத் திமிர்
உங்களை கரை சேர விடப் போவதில்லை
என்ன செய்யப் போகிறீர்கள்
விடை உங்களிடமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக