வியாழன், 30 மே, 2019

பக்தாள்ஸ் புரிந்து கொண்டால் சரி...


பக்தாள்ஸ் புரிந்து கொண்டால் சரி...

ஆழி.செந்தில்நாதன் பதிவு

           தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக   கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது?

இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று கூட இதை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் போல சித்தரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எம்.பி.கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது என்கிற கருத்தை விதைப்பது ஜனநாயக விரோதமானது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை உடையவர். அவரது முடிவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவரது கோரிக்கைகளை அரசு பரிசீலித்தே ஆகவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆளும் கட்சியின் தவறே ஒழியே கேள்விகேட்கும் உறுப்பினரின் தவறு இல்லை.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் மாநிலத்துக்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதி என்கிற அடிப்படையில் சம உரிமை உடையவர். அவர் இந்தியாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர். அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பலம் மாறுபடலாம். உறுப்பினரின் உரிமை மாறுபடாது. ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருந்தாலும் மாநிலக் கட்சியின் உறுப்பினர் அது குறித்து ஒரு சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யலாம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன் தொகுதி அல்லது மாநிலத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. வெறுமனே குரல் கொடுப்பதற்காகவும் அவர் அங்கே செல்லவில்லை. இந்திய அரசமைப்பின்படி உச்சபட்ச அதிகாரமுள்ள பாராளுமன்றத்தில் இந்தியாவின் அனைத்து அதிகாரங்களுக்கும் சேர்த்தே அவரும் செயல்படுகிறார். தன் தொகுதியில் பாலம் கட்டுவதற்கான நிதியைக் கோருவதற்காக அவர் அங்கே செல்லவில்லை. அவர் ஒரு சட்டமியற்றி  - Law Maker.

சட்டமியற்றும் (legislative) அவையான பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஏற்கப்பட்டால் அதை நிறைவேற்றும் பொறுப்பு  காபினட் தலைமையிலான நிர்வாகத்துறைக்கு (executive) இருக்கிறது. அந்தச் சட்டம் மீறப்படாமல் பாதுகாக்கப்படவே நீதித்துறை (judiciary) இருக்கிறது. ஆனால் மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர்தான் உச்சபட்ச அதிகாரமுள்ளவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தனிக்குரலாக ஒலிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் தமிழக எம்.பிகள். குறிப்பாக  தோழர்கள் தொல். திருமாவளவன், கனிமொழி, ஆ ராசா, ரவிக்குமார், ஏ கணேசமூர்த்தி, சு வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மீது ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பே இருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையிருந்த ஆட்சிகளின்போது மக்களவை அல்லது மாநிலங்களவையில் அண்ணாவும் சம்பத்தும் செழியனும் எப்படியெல்லாம்  செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.  ஆக்கபூர்வமாகவும் எதிர்க்குரலாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் மொழித்திணிப்பு இருக்காது எனறு ஈ வி கே சம்பத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உறுதிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு.

எங்கள் நாட்டுக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் பேசும் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று குரல் கொடுத்த அண்ணா, இந்திய அரசின் நிதிக்கொள்கை, வெளியுறவுக்கொள்கை உள்ள எல்லா மத்திய அரசு அதிகாரங்களையும் கிழித்துத் தொங்கப்போட்டார். போர்க்காலத்தில் அரசோடு சேர்ந்தும் நின்றார்.

எமர்ஜென்சியின் போது இரா செழியன் இந்திரா காந்திக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கியதை நாம் மறக்கமுடியுமா? அவரது அந்தப் புகழ்பெற்றப் பேச்சு எல்லோருக்கும் பாடநூல்.

எத்தனை தடவை வைகோவும் கணேசமூர்த்தியும் திருச்சி சிவாவும் அண்மையில் கனிமொழியும் தமிழ்நாட்டின் குரலை ஒலிக்கச்செய்திருக்கிறார்கள்!

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் எனறு தமிழ்நாட்டுக்காக இங்கே தான் வங்காளத்து கம்யூனிஸ்ட் பூபேஷ் குப்தா குரல்கொடுத்தார். இந்த அரங்கில்தான் இந்தியாவிலுள்ள அனைத்து எஸ்சி, பிஸி மக்களுக்கான சமூக நீதிக்குரல்களை திராவிடக் கட்சிகளின் எம்பிகள் எழுப்பினார்கள். இதே மன்றத்தில்தான் எங்கள் நிதியைத் தின்று தீர்க்கின்றன வட மாநிலங்கள் என்று ஜெயலலிதாவும் குற்றம்சாட்டினார். இப்படி எவ்வளவோ சொல்லமுடியும்.

எனவே மாநிலக் கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் ஒன்றுதான். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிற திமிர்.

தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது, மோடிக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடும் மோடி அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் வருந்த வேண்டிய நிலைமை வரும் என்கிற நிலை ஏற்படுமானால், ஆள்பவர்கள்தான் தேச விரோதிகளாக ஆவார்கள்.

- ஆழி செந்தில்நாதன் , _ஆழி பதிப்பகம்.

சனி, 25 மே, 2019

மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்.. இனிதான் ஆட்டமே!

மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்.. இனிதான் ஆட்டமே!

சென்னை: இந்த லோக்சபா தேர்தலில் நாம் சாதாரண எம்பிக்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. நாடாளுமன்ற புலிகளை உருவாக்கி அனுப்பியுள்ளோம் என்று சட்டை காலரை தூக்கி விட்டு பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் தமிழர்கள்.

*உண்மைதான்..*

இதுவரை இல்லாத அளவுக்கு சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் ஒருசேர லோக்சபாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் தமிழக வாக்காளப் பெருமக்கள்.

பணப்பட்டுவாடா, கவர்ச்சி அறிவிப்புகள், இப்படி எத்தனை எத்தனையோ இருந்தும் கூட, சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் மதித்து அவர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ள தமிழக மக்களின் அறிவுத் திறமை மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

*வெங்கடேசன்*

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் களமிறங்கிய வெங்கடேசன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். காவல் கோட்டம் என்ற தனது முதலாவது நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர். கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர் தொன்மை நாகரிக வழிபடுவதற்கு எதிராக பெரும் சதி நடப்பதாக பிரச்சாரம் செய்து இதை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். தமிழர் நாகரிகம் தொடர்பாக ஆதாரங்கள் திரட்டி வைத்திருப்பவர். தமிழரின் பெருமையை இந்தியா முழுக்க எதிரொலிக்க இவர் நாடாளுமன்றத்தை சிறந்த மேடையாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை விட 1.39 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார்.

*ரவிக்குமார்*

திமுக கூட்டணியில் அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவிக்குமார். இவரும் பிரபல எழுத்தாளர். மாலை நிலவரப்படி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். மணற்கேணி என்னும் ஆய்வு இதழை நடத்தி வருகிறார். தலித் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக எழுதி வருபவர். எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இவர் குரல், லோக்சபாவில் ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

*ஜோதிமணி*

கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையைவிட, இரண்டரை லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வென்றுள்ளார். இவர் சித்திரக் கூடு உள்ளிட்ட சில நாவல்களை எழுதியவர். மேலும் காவிரி மணல் கொள்ளை விவகாரத்தில் தீவிரமாக பல போராட்டங்களை துணிச்சலாக முன்னெடுத்தவர். இவரது சமூக அக்கறை லோக்சபாவில் பீரங்கி பேச்சாக எதிரொலிக்கும் என்று நம்பலாம்.

*தமிழச்சி*

 தங்கபாண்டியன்
சென்னை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் மற்றும் சிட்டிங் எம்பியான ஜெயவர்த்தனவிடவும் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். வேறு பகுதியிலிருந்து சென்னையில் வந்து போட்டியிடுகிறார் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டவர். அதையெல்லாம் முறியடித்து அமைச்சர் ஜெயக்குமாரின் மகனையே தோற்கடித்துள்ளார். சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்த தமிழச்சி தங்கபாண்டியன், பல்வேறு கவிதை கட்டுரைகளை எழுதியவர். தமிழ் ஆர்வம் மிக்கவர். பெண்ணியம் பேசக்கூடியவர்.

செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

*கனிமொழி*

இந்த வரிசையில் முக்கியமான மற்றொரு எழுத்தாளர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி. தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக கவிஞர் என்ற அடைமொழியுடன் வலம் வந்தவர். சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி கருணாநிதியையே மகிழ்வித்தவர். தமிழரின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

*ராஜ்யசபாவில் ஆவேசம்*

ராஜ்யசபாவில், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து கடுமையாக உரையாற்றியவர். அதை தடுத்து விட, மிகவும் முயற்சி செய்தவர். இருமுறை, ராஜ்யசபா எம்பியாக இருந்த அவர், தற்போது முதல் முறையாக லோக்சபாவில் காலடி எடுத்து வைக்க உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியது போல, நாடாளுமன்ற புலியாக இப்போது லோக்சபாவில் அவர் உறுமல் சத்தம் எதிரொலிக்கும் என்று திமுகவினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

*திருமாவளவன்*

இதேபோல ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய திருமாவளவனும் சிதம்பரம் தொகுதியில் வெற்றிப் பெற்று உள்ளார். ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், மாலை நேர நிலவரப்படி அவர் கணிசமான வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வென்று உள்ளார் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான திருமாவளவன், தமிழக பிரச்சனைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், பிரச்சினைகள் குறித்து பேசி, லோக்சபாவில் கவனத்தை ஈர்ப்பார். இத்தனை அறிவார்ந்த பிரதிநிதிகளை ஆளும் கட்சி எவ்வாறு சமாளிக்கப் போகிறது? இவர்களின் கேள்விக்கணைகளை பாஜக கூட்டணி அமைச்சர்கள் எதிர்கொள்ள முடியாமல் எப்படி திணறப்போகிறார்கள்? என்பதைப் பார்ப்பதற்கு தமிழகம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது;  இந்தியத் திருநாடும்கூட...

திங்கள், 20 மே, 2019

விசிக குரூப்பில் வைரலாகும் டாக்டர் ராமதாஸ் ஹிஸ்டரி... பாமகவினருக்கே தெரியாத அறிய தகவல்கள்!!


விசிக குரூப்பில் வைரலாகும் டாக்டர் ராமதாஸ் ஹிஸ்டரி... பாமகவினருக்கே தெரியாத அறிய தகவல்கள்!!...

1939 ஆம் ஆண்டு பிறந்த அவரே இவ்வளவு கவனமாக இருந்து டாக்டர் ஆகி இருக்கும் போது. 2000 ஆம் வருடம் பிறந்த பா.ம.கவை சேர்ந்த வன்னிய இளைஞர்களே நீங்கள் மட்டும் ஏன் சாதி சாதி . என்று உங்கள் படிப்பையும், பண்பாட்டையும் இழந்து விட்டு வாழ்க்கையில் தறிகெட்டு இயங்குகிறீர்கள் என ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் விசிகவினரால் வைரலாக்கப்படுகிறது.

அதில், அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்" என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன்.

அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.


அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.


சரி பா.ம.க வை சேர்ந்த சகோதரர்கள் அல்லது வன்னியர் சாதி அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சகோதரர்கள் டாக்டர் ராமதாஸ் கல்வி கற்று டாக்டர் ஆனார் என்ற Timeline ஐ தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

இது டாக்டர் ராமதாஸ் 1991 யில் கொடுத்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.

1. டாக்டர் ராமதாஸ் ஜூலை 25, 1939 மிக எளிய குடும்பத்தில் பிறந்தார்.

2.முதலில் மொளவு கவுண்டர் என்பவர் நடத்திய திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்றார். அங்கே மணலில்தான் எழுதவும் எளிய கணக்கு போடவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

3.அவர் ஊரில் வேறு பள்ளிகளே இல்லாத காலம் அது. அங்கே பட்டியலின சமூகத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் தன் மனைவியுடன் சேர்ந்து ஒரு பள்ளி ஆரம்பித்தார். அவ்வூரில் அனைவரும் அவரை பெரிய அண்ணா என்று அன்புடன் அழைப்பார்கள். ராமதாஸ் பெரிய அண்ணா என்று அழைக்கும் பாலசுந்தரம் நடத்திய பள்ளியில்தான் ஒருவருடத்துக்கும் மேலாக படித்திருகிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் நடத்தும் பள்ளி என்பதால் ராமதாஸ் அங்கே சென்று படிக்க எதிர்ப்பு இருந்திருக்கிறது. இருப்பினும் கல்வி கற்கும் ஆசையினால் ராமதாஸ் அங்கே சென்று கற்றிருக்கிறார். அவர் பள்ளி சென்று வீடு திரும்பியதும் அம்மா தலையில் நீரை ஊற்றி தீட்டுக் கழித்தே வீட்டுக்குள் விடுவாராம்.


4. ஒருவருடத்துக்கும் மேலாக பாலசுந்தரம் என்ற பெரிய அண்ணா பள்ளியில் படித்து அவரிடம் பணிவுடன் நடந்து கொண்ட மாணவராக டாக்டர் ராமதாஸ் இருந்தார். இதனால் பாலசுந்தரத்துக்கு அப்பையனை ( ராமதாஸை) பிடித்து விட்டது. இதை வாய்ப்பாக வைத்து பெரிய வகுப்பு படிக்க சென்னை அனுப்பி வைக்கும்படி பாலசுந்தரத்தை ராமதாஸ் வேண்டுகிறார்.

5.சரி என்று பாலசுந்தரம் ஒரு கடிதம் கொடுத்து சென்னை ராயபுரத்தில் இருக்கும் பெரிசாமி வாத்தியாரிடம் கொடுக்குமாறு சொல்கிறார்.

6.பாலசுந்தரம் கொடுத்த சிபாரிசு கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பட்டியலனத்தவரான பெரியசாமி வாத்தியாரிடம் சிறுவனாக வருகிறார் ராமதாஸ்.

7. பெரியசாமி வாத்தியார் ராயபுரத்தில் கண்ணப்ப நாயனார் கழகம் என்றொரு இயக்கம் நடத்தி வந்ததோடு ஒரு பள்ளியும் நடத்தி வந்தார். அங்கே ராமதாஸை ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். அப்பள்ளியில் பலரும் தாழ்த்தபட்ட மாணவர்களாக இருந்தார்கள். அவர்களோடுதான் ராமதாஸ் ஒன்றாகவும் விரும்பியும் கல்வி கற்றார். ( 1952 - 1955 )

8. எட்டாம் வகுப்பு வரை அங்கே படித்த ராமதாஸ் ஒன்பதாம் வகுப்புக்காக சென்னை மண்ணடி தம்புச்செட்டித் தெருவில் உள்ள முத்தியாலுப்பேட்டை உயர்நிலை பள்ளியில் சேர்கிறார். படிப்பில் ஆர்வம் உள்ள ராமதாஸ் கடுமையாக உழைத்துப் படித்தார். +1 யில் நல்ல மதிப்பெண் பெற்றார். ( 1955 - 1958 )


9. அதை வைத்து அவருக்கு லயோலா கல்லூரியில் பி.யூ.சி சீட் கிடைக்கிறது. அவர் தங்கி இருந்தது சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி. ராஜா இலவச ஹாஸ்டலில். கையில் பெரிய அளவு பணம் எதுவும் இல்லாத ஏழை மாணவர் வேறு. சேப்பாக்த்தில் இருந்து லயோலாவுக்கு உள்ள மூன்று கிலோமிட்டர் தூரத்தை படிப்பு முடியும்வரை நடந்தேதான் கல்வி கற்றிருக்கிறார். பேருந்துக்கோ ரயிலுக்கோ பணம் கொடுக்க காசில்லை என்று பேட்டியில் சொல்லி இருக்கிறார். ( 1958 - 1959 )

10. அதன் பிறகு அவர் நண்பர் சென்னை மருத்துவக்கல்லூரியில் அப்ளை பண்ண வற்புறுத்த ராமதாஸ் அப்ளை செய்ய மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மருத்துவக் கல்வியை செவ்வனே கற்று முடித்திருக்கிறார். ( 1959 - 1967)

இப்படித்தான் ராமதாஸ் டாக்டர் ராம்தாஸ் ஆகி இருக்கிறார்.

திண்ணை பள்ளிக்கூடம் - பாலசுந்தரம் என்ற பெரிய அண்ணா பள்ளிக்கூடம் - பெரியசாமி அவர்கள் நடத்திய பள்ளிக்கூடம் - முத்தியாலுப்பேட்டை பள்ளி - லயோலா - சென்னை மருத்துவக் கல்லூரி.

இதில் கவனியுங்கள் திண்ணைப் பள்ளியில் இருந்து பாலசுந்தரம் ஐயாதான் ராமதாஸுக்கு உருப்படியாக கல்வி நிலைக்கு கொண்டு செல்கிறார்.

பாலசுந்தரம் ஐயா ஒரு தலித்.
அடுத்து சென்னையில் ராமதாஸை அணைத்துக் கொண்டது பெரிய சாமி ஐயா. அவரும் ஒரு தலித். ராமதாஸ் தலித் மாணவர்களுடன் ராயபுரத்தில் கல்வி கற்றிருக்கிறார்.

லயோலா ஒரு சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி. அப்போது ராமதாஸுக்கு அடைக்கலம் கொடுத்த எம்.சி ராஜா ஹாஸ்டலும் ஒரு தலித் மாணவர்கள் அதிகம் புழங்கும் ஹாஸ்டல்தான்.

ஆக ராமதாஸ் என்னும் கிராமத்து சிறுவன் டாக்டர் ராம்தாஸ் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்தாம் இருந்திருக்கிறார்கள்

டாக்டர் ராமதாஸ் கல்வி கற்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அப்போது சாதி எல்லாம் பார்க்கவில்லை. கற்பதிலேயே குறியாய் இருந்து கற்றிருக்கிறார்.

1939 ஆம் ஆண்டு பிறந்த அவரே இவ்வளவு கவனமாக இருந்து டாக்டர் ஆகி இருக்கும் போது.

2000 ஆம் வருடம் பிறந்த பா.ம.கவை சேர்ந்த வன்னிய இளைஞர்களே நீங்கள் மட்டும் ஏன் சாதி சாதி . என்று உங்கள் படிப்பையும், பண்பாட்டையும் இழந்து விட்டு வாழ்க்கையில் தறிகெட்டு இயங்குகிறீர்கள்.

உங்கள் தலைவர் ராமதாஸ்தான் உங்களுக்கான எடுத்துக்காட்டு.

சாதி வெறியை விட்டு அவரைப் போல கல்வியறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பா.ம.கவின் உசுப்பேற்றலை நம்பி உங்கள் வாழ்க்கையை விட்டு விடாதீர்கள்இவ்வாறு அதில் கூறப்பட்ட்டுள்ளது.
 Thanks Dailyhunt.

ஞாயிறு, 19 மே, 2019

ஜனநாயக விரோதப் பேச்சுகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.


ஜனநாயக விரோதப் பேச்சுகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.

*#ராமகோபாலன்*
இந்துக்களின் விந்தை முஸ்லீம் கருவுக்குள் செலுத்துங்கள்

*#பிரவீன்தொக்காடியா*
சூலாயுதத்தில் மூன்றை கொண்டு,
நடுநிலை இந்துக்களை, முஸ்லிம்களை,
கிருத்தவா்களை கொல்லவேண்டும்.

*#சாத்வி_பிராச்சி*
முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

*#விகேசிங்*
‘நாய் மீது யாராவது கல் எறிந்தால், அரசு என்ன செய்ய முடியும்? அதற்கு அரசு பொறுப்பல்ல’ (அரியானா மாநிலத்தில் 2 தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பற்றி)

*#நரேந்திரமோடி*
ஒரு நாய்க்குட்டி காரின்சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு வேதனை ஏற்படுமா? (குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை குறித்து)

*#சுப்பிரமணியசுவாமி*
மசூதி என்பது வழிபாட்டு தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே எனவே அதனை எந்நேரத்திலும் இடிக்கலாம்

*#வேதாந்திரி_சாமியார்*
கருணாநிதியின் தலையை வெட்டுவேன் (ராமர் பாலம் விவகாரத்தின்போது)

*#உமாஷங்கா்சர்மா*
யாரெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அவர்களெல்லாம் கழுதைக்கு சமம்.

*#கிரிராஜ்சிங்கிஷோா்*
இரண்டு  குழந்தைகளுக்கு மேல்
பெற்றால் இஸ்லாமியர்களுக்கு
வாக்குரிமையை ரத்து
செய்யவண்டும்

*#சாக்சிமகராஜ்*
இந்துக்கள் 10குழந்தைகளை பெற
வேண்டும். முஸ்லீம்களுக்கு கட்டாயக்
குடும்பக்கட்டுப்பாடு
செய்யவேண்டும்
ஓட்டுரிமையை ரத்துசெய்ய
வேண்டும்.

*#நிரஞ்சன்ஜோதி*
ராமருக்கு பிறந்தவர்கள் உங்களை ஆள வேண்டுமா அல்லது அப்பன் பெயர் தெரியாமல் கள்ளத்தனமாக பிறந்தவர்கள் ஆள வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்'

*#சாத்விதேவிதாக்கூா்*
கங்கை நதி ஓரம் உள்ள முஸ்லிம்களை
வெளியேற்றுங்கள், அவர்களின் ஊர்களை
காலி செய்யுங்கள், ஹரித்துவார்,
காசி, அலகபாத்தில் முஸ்லிம்கள்
நுழைய தடைவிதியுங்கள்

*#ஆசிர்வாத்ஆச்சாரி*
இந்தியாவில் இருக்கும்
இஸ்லாமியர்களின்
உடல் மட்டுமே இங்குள்ளது, அவர்களின்
ஆன்மா பாகிஸ்தானில் உள்ளது.

*#அனந்தகுமார்ஹெக்டே*
இஸ்லாத்தை
அடியோடு ஒழித்துக்
கட்ட வேண்டும்

*#ரவிஷங்கர்*
துப்பாக்கியை எடுங்கள்
இசுலாமியர்கள் இல்லாத மாநிலமாக
மாற்றுவோம்.

*#பாபா_ராம்தேவ்*
பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாதவர்கள் தலையை வெட்டுவேன்.

*#யோகி_ஆதித்யாநாத்*
முஸ்லீம் பெண்கள் பிணத்தையும்
விட்டு வைக்காதீர்கள் தோண்டி
எடுத்து கற்பழியுங்கள்

*#ராம்சங்கர்கட்டாரியா*
முஸ்லிம்கள் இராட்சத வம்சத்தினர்

*#தேவாதாக்கூா்*
முஸ்லீம் மற்றும் கிருஸ்தவ மக்களுக்கு
கட்டாய கரு்தடை செய்யவேண்டும் சர்ச்
மற்றும் மசூதிகளிள் இந்து கடவுள்கள்
படங்களை வைக்கவேண்டும்.

*#கிரிராஜ்சிங்*
மாட்டிறச்சி உண்பது
சகோதரியுடன் உறவு கொள்வது
போன்றது.

*#சிவசேனாவின்_சாம்னா_பத்திரிக்கை_தலையங்கம்*
இந்திய முஸ்லீம்கள் சலுகை எதிர்பார்த்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.

*#தாதாகதா_ராய்*
யாகூப் மேமன் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்

*#மகேஷ்சா்மா*
தாத்ரி முதியவா் அக்லாக் படுகொலை
இது ஒரு சிரிய விபத்து அதை
பெரிது படுத்தாதீர்கள்.

*#பாஜக_நாராயணன்* :
மேக் அப் போடும் பெண்கள் எல்லாம்
விபசாரிகள்
.
*#மனோஜ்பாரிக்கர்* :
தலைவிதி சரியில்லாத சில
ராணுவத்தினர்
தான் பதான்கோட் தாக்குதலில்
உயிரிழந்தனர்.

*#பிரமோத்முத்தாலிக்*
இந்துக்கள் அனைவரும் கத்தி
வைத்துக்கொள்வது அவசியம்.

*#முக்தார்_அப்பாஸ்_நக்வி*
மாட்டு கறி சாப்பிட முடியாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஓடுங்கள்

*#கேஜே_ஜார்ஜ்* :
இரண்டு பேரால் பாலியல்
பலாத்காரம் செய்யப்படுவது கூட்டு
பலாத்காரம் கிடையாது, நாலைந்து
பேராவது சேர்ந்தாதான் அது கூட்டு
பாலியல் பலாத்காரம் ஆகும்.

*#குர்தீப்வர்சினி*
கண்ஹயா குமாரின் தலையை
வெட்டினால் 11 லட்சம்
நாக்கை வெட்டினால் 4 லட்சம்.

*#திலீப்கோஷ்*
பாஜகவினர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால்
பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். வெறும்
கைகளால் தோள்களை துண்டாக்கும்
பயிற்சி பெற்றவர்கள்

*#நிதின்கட்கரி*
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத
அனைவரும் திருடர்கள் அல்ல

*#அமித்ஷா*
பிகாரில் பாஜக தோற்றால் பட்டாசு
வெடிப்போர் பாகிஸ்தானியர்கள்.
அஸ்ஸாமில் பாஜக தோற்றால் பட்டாசு
வெடிப்போர் பங்ளாதேஷிகள்.

*#யோகிஆதித்யநாத்*
ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் 100 முஸ்லிம் பெண்களை இந்துவாக மதம் மாற்ற வேண்டும். அவர்கள் ஒரு இந்துவை கொலை செய்தால். நாம் 100 பேரை..,,,

*#சாக்ஷிமஹராஜ்*
மதரஸாக்கள் என்பது தீவிரவாதத்தை கற்பிக்கும் ஒரு கூடம்.

*#எச்ராஜா*
பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும். பெரியாரை செருப்பால் அடிப்பேன்.

*#உத்தவ்தாக்கரே*
உவைசியின் கன்னத்தில் அறைந்தாள் ஒரு லட்சம் பரிசு .
இப்படி பயங்கர வாதிகள் பட்டியலில் பிஜேபி யில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் வந்து விடுவார்களே யார் யார் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?

*#சாத்விபிராச்சி*
சவூதி சென்று ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டி கொண்டுவருவோருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு

மேலே... நாட்டின் அமைதிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும்  சாந்தமான(?) முறையில் அமைதிக் கருத்துகள் கூறியவர்கள் யாரென்றால்...

BJP அமைச்சர்கள், எம்பிகள், மற்றும்  RSS, VHP, ஹிந்துமகாசபா, இந்துமுன்னணி, ராமசேனா, சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் / பொறுப்பாளர்கள்.

அனைத்து மக்களுக்குமான ஜனநாயக நாட்டில் மேற்கண்ட பேச்சுகள் அனைத்தும்
#அவமான_ஆவணம்.

வெள்ளி, 17 மே, 2019

#புனிதத்திமிர்

#புனிதத்திமிர்
000 கனல் OOO

உங்கள் வீட்டு பீயை நீங்களே சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்றால் சக்கிலியனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்..!

உங்கள் வீட்டு சாவுக்கு நீங்களே பறையடித்துக் கொள்ளுங்கள் என்றால் பறையனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்…!

ஊருக்கு பொதுவான தேரில் நாங்களும் வடம் பிடிப்போம் என்றால் பள்ளனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்…!

உங்கள் வீட்டு பிணத்துக்கு நாங்கள் சவரம் செய்ய மாட்டோம் என்றால் நாசுவனுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்…!

உங்கள் வீட்டு தீட்டுத் துணியை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள் என்றால் வண்ணானுக்கு இவ்வளவு திமிரா என்கிறீர்கள்….!

திமிர் பிடித்த எங்களை உங்களோடு சேர்த்துக் கொண்டு நாம் இந்துக்கள் என்கிறீர்கள்…!

நாம் இந்தியர் என்கிறீர்கள்
நாம் தமிழர் என்கிறீர்கள் சூத்திரர்களே!

சாதித்திமிர் சுமந்த நீங்கள்  தலை தாழ்த்திப் பாருங்கள்
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுவதை!

பொட்டுக்கட்டி தாசியாக்கி
வெள்ளுடை தந்து விதவையாக்கி
உடன்கட்டை கொளுத்தி சதிமாதாவாக்கி
வன்கொடு மதியாளர்களே
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுகின்றன!

மனித உயிரின் உயிர்ப் புக்கான
யோனியின் இரத்தப் பெருக்கைக் கூட
தூய்மை (தூமை) என்றழைத்த தமிழர் நடுவே
தீட்டென ஒதுக்கிய
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுகின்றன!

ஆதிக்கசாதிப் பெண்களின் கருப்பைகள்
ஆதிக்கசாதி விந்துக்களாலேயே
நிரப்பப்பட வேண்டுமென
ஆணவக் கொலைகள் புரியும்
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுகின்றன!

எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் கவ்வி இழுத்த இதழ்
நிதம் பொய்யடா பேசும் மடமாந்தரை விட்டு
உய்யடா உய்யடா உய்
என்று பாடிய பட்டினத்தாரை
செருப்பால் அடிக்காத
உங்கள் புனிதங்கள் சீழ் பிடித்து நாறுகின்றன!

ஐவருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம்
என்ற உங்கள் பஜனைப் பாடலுக்கு
உச்சுக் கொட்டவும்
நீங்கள் பணயப் பொருளாய் பந்தயம் வைக்கவும்
இனி ஒரு திரௌபதி கூட இருக்கப் போவதில்லை                                                   என்ன செய்யப் போகிறீர்கள் ?

நீங்கள் கரடியாய் கவ்வியிருக்கும்
புனிதத் திமிர்
உங்களை கரை சேர விடப் போவதில்லை
என்ன செய்யப் போகிறீர்கள்
விடை உங்களிடமே.