திங்கள், 18 மார்ச், 2019

கேடுகெட்ட தேர்தல்கமிஷனை என்ன சொல்லி திட்டலாம்?

கேடுகெட்ட தேர்தல்கமிஷனை என்ன சொல்லி திட்டலாம்?

நேத்து செத்த கோவா முதல்வர் தொகுதியில் April - 23ம் தேதி இடைத்தேர்தலாம்! ஏன்னா அங்க மெஜாரிட்டிக்கு சீட் குறையுது.. அனுதாபத்தில் ஜெயிச்சு மெஜாரிட்டி காட்டலாம் பிஜேபி..

8 மாசம் முன்னாடி மறைந்த போஸ்,
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 இடைத்தேர்தல்
நிறுத்திவைப்பு.. ஏன்னா இங்கெல்லாம் தேர்தல் நடத்தி, திமுக ஜெயித்துவிட்டால் பிஜேபி பினாமி அதிமுக அரசுக்கு மெஜாரிட்டி போய்விடும்..

//தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் - தேர்தல் கமிஷன்//

விசிகவுக்கு மோதிரம் சின்னம் கிடைக்கல.. தினகரனுக்கு குக்கர் கிடையாது..
ஆனா, வாசனுக்கு மட்டும் கேட்ட உடனே சைக்கிள் சின்னம் கிடைக்குது..
நம்புங்கள் தேர்தல் ஆணையம் நடுநிலையானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக