புதன், 13 ஜூன், 2018

வேங்கையன் மவனை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்...


வேங்கையன் மவனை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்...

வேங்கையன் எனும்பெயர் தலித் சமூகத்தின் குறியீடு.

வேங்கையனை இயக்கியவர் ஒரு தலித்.

நூறுவருட தமிழ் சினிமா வரலாற்றில்..
படம்முழுக்க ஒரு தலித் கதாபாத்திரத்தில் இதுவரை எந்த உச்சநட்சத்திரமும் நடித்ததில்லை.

இந்தியாமுழுக்க தலித் குறித்த தவறான புரிதலும் கீழான பார்வையும் இருக்கிறது.அதை வேங்கையன்மவன்
ஒத்தையிலநின்னு தகர்த்திருக்கிறான்.

அக்ரகாரத்து கதாநாயகியையும்
ஆதிக்கவர்க்கத்தின் அருவாளையும் பார்த்துப்பார்த்து புளகாங்கிதம் அடைந்தவர்களுக்கு
வேங்கையன் எரிச்சலை தருகிறான்.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக சூத்திரர்களின் வாழ்வியல் குறித்த முளுநீள திரைப்படம் இது.
ஆதிக்கவர்க்கத்தின் ஆத்திரத்திற்கு இதுவே காரனம்.

தேவர்மகன்.சின்னக்கவுண்டர்.என்று பகிரங்கமாக சாதிப்பெருமை பேசும் படங்களை கொண்டாடிப்பழகிப்போனதால்..
தலித்களின் வேதனையைச்சொல்லும் வேங்கையனை வெறுக்கிறார்கள்.

பாரதி கண்ணம்மாவில்
ஆண்டாண்டுகாலமாக
தலித்துகள் நம்மளத்தாண்டா நம்பியிருக்காங்க..
அவங்களுக்கு நம்மளவிட்டா யாரு இருக்காங்க என்று பேசுவார்.
தேவர்மகனில் தலித்துகள் சாப்பிடுவதை சிவாஜி கருனையோடு பார்த்து
தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வார்.
இப்படி தலித்மக்களை கேவலப்படுத்தும் படங்கள் ஏராளம்.

தலித்துகள் என்றாலே கோபப்படமாட்டார்கள்.
போராடமாட்டார்கள் அடிமைகள் என்பதுபோலத்தான் பலபடங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வேங்கையன் எல்லா தளத்திலும் போராடுகிறான்.
மற்றசமூகத்தை குறைசொல்லவில்லை.
தன் வலி நிறைந்த வாழ்க்கையைச்சொல்கிறான்.
அது இவர்களுக்கு பொருக்கவில்லை.

இதுவரை நாம்பார்த்த கதாநாயகர்களெல்லாம்.ஆதிக்கசாதி இளைஞனாக அருவாளும் கையுமாகத்தான் அலைந்துகொண்டிருப்பார்கள்.
முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகத்தின் கதாப்பாத்திரத்தை ரஜினி தைரியமாக ஏற்று நடித்திருக்கிறார்.
இந்த தைரியம் இதுவரை எந்த நடிகனுக்கும் வந்ததில்லை.

வைகோவை தெலுங்கனென்றும். பெரியாரை கன்னடனென்றும்.தமிழர்கள் திராவிடர்களல்ல என்றும் இனவெறியைத்தூண்டும் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.
அந்த கூட்டம் படம்பார்க்க போகின்றவர்களையும் தடுக்கிறது.

ரஜினி கன்னடனாம்
அதுவும் ஒரு காரணமாம்.
இவர்கள் உபயோகிக்கிற..
சோப்பு பேஸ்ட் பிரஸ் டிரஸ் பைக் செல்போன்
டிவி லேப்டாப். ஆங்கிலக்கல்வி.இவையெல்லாம் அக்மார்க் தமிழர்களின் தயாரிப்புதானா..

இவைகளை நாம் வாங்குவதால்தான் ..இதை தயாரித்துவிற்பவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேட்கமுடியுமா எங்களுக்கு என்ன செஞ்சன்னு.

தமிழகத்தைச்சேர்ந்த எந்த கிரிக்கெட்வீரராவது தமிழ்நாட்டுப்பிரச்சினைக்காக குரல்கொடுத்திருக்கிறார்களா..ஸ்டேடியத்தில்
இவர்கள் வாங்கும் டிக்கெட்தான் அவர்களுக்கு கோடிகளாக போய்சேருகிறது.
கன்னடத்துக்காரன் சினிமாவ பாக்கமாட்டார்கள்.
சேப்பாக்கம்ஸ்டேடியத்தில் வெளிநாட்டுவீரர்கள் விளையாடுவதை எவ்வளவு விளைகொடுத்தேனும் பார்ப்பார்கள்.

உங்க காசுலதான கிரிக்கெட்வீரர்களும் வாழ்றாங்க..அவங்களை ஏன் தூத்துக்குடிக்கு கூப்பிடல..
கூப்பிட்டா பேட்டால அடிப்பான்.

இதுபோன்ற முட்டாள்களை ஒரு பெரியார் அல்ல ஒன்பது பெரியார் வந்தாலும் திருத்தமுடியாது.

ஒரு தலித் மருத்துவராகிவிடக்கூடாது என்று. மத்திய அரசு நீட்டோடு அலைகிறது. இங்கே ஒரு கும்பல் சாதி எனும் தீட்டோடு அலைகிறது.

ரஞ்ஜித் தலித்தாம் அதனால் வேங்கையன்மவனை பார்க்கமாட்டேன் என்று
சிலர் பகிரங்கமாகவே சொல்கிறார்கள்.
அல்லது நினைக்கிறார்கள்.

பிரியானி என்றவுடன் சிக்கனும் மட்டனும்தான் ஞாபகத்துக்குவரும்.வெஜிடபில் பிரியானியும் உண்டு என்பதை இந்த மூடர்களுக்கு யார் சொல்வது.

ரஜினி அரசியலுக்கு பொருத்தமற்றவர் என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

இவர்களின் பிரச்சினை
ரஜினிமீது அல்ல..
ரஞ்சித்மீதே..
அதை லாவகமாக தூத்துக்குடியோடு ஒப்பிட்டுத்தப்பிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக