வியாழன், 21 பிப்ரவரி, 2019

எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.


எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.

நாமக்கல் கோவில் ஆஞ்சிநேயர் சிலைக்கு பூஜை செய்யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார்.

உடனே  முதல்வர் அவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி கொடுக்கிறார்.

ஊடகங்கள் எல்லாம் அதை மிகப்பெரிய செய்தியாக்கி பரப்பரப்பாக்குகின்றன.

மக்கள் அர்ச்சகருக்கு நிதி கொடுக்கிறார்கள்.

ஒரே நாளில் 15 லட்சம் நிதி குவிந்ததாக விகடன் செய்தி வெளியிடுகிறது.

இன்றைய செய்தியில் அந்த அனுமர் சிலையில் வருங்கால அர்ச்சகர்கள் பாதுகாப்பாய் பூஜை செய்ய ப்ளாட்பார்மும் அதற்கு பாதுகாப்பு கைப்பிடியும் வைக்கப்பட்டதாக படித்தேன்.

ஆஞ்சநேயர் - துளசி மாலை - அர்ச்சகர் - மரணம் என்ற உடன் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் பாருங்கள்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படிகிறது.

2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்கிறது.

3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் நிதி அனுப்புகிறார்கள்.

4. அரசாங்கம் நிதி கொடுக்கிறது.

5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி அதை சரி செய்து கொடுக்கிறது.

ஒரே ஒரு அர்ச்சகரின் உயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கொடுக்கட்டும். அது மனித நேய செயல்தான். உயிரைப் பொறுத்தவரை ஒரு உயிரும் ஒராயிரம் உயிரும் ஒன்றுதான். அவருக்கு செய்தது பற்றி குறை சொல்லவில்லை.

ஆனால் நாட்டில் வருடத்துக்கு சராசரியாக 1300 இந்தியர்கள் மலக்குழியில் இறங்கி பாதாள சாக்கடையில் இறங்கி விஷக்காற்று பட்டு இறந்து போகிறார்கள்.

அவர்களுக்கு உடனே அரசாங்கம் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காது.

மக்களாகிய நாம் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்களின் மரணத்தை கண்டுகொள்ள மாட்டோம்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படியாது

2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்காது.

3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் ஒரு பைசா நிதி அனுப்பமாட்டார்கள்.

4. அரசாங்கம் நிதி கொடுக்காது.

5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருங்காலத்தில் அது நடக்காதது மாதிரி எதுவும் செய்து கொடுக்காது.

இத்தனைக்கும் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பது என்பது சமூகத்துக்கு மிக மிக அவசியமான சேவையாகும். சட்டப்படி அதை செய்ய கூடாது. அதை செய்ய வைக்க கூடாது. ஆனாலும் வேறு வழியில்லை என்று நாம் அனைவரும் அந்த விதியை தளர்த்தி ஊரில் யார் இளிச்சவாய் மனிதனோ அவரை இறக்குகிறோம்.

எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.

ஆனால் அர்ச்சகர் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை போடும் போது கீழே விழுந்து இறந்தால் முதல்வரில் இருந்து மொத்த சமூகமும் இரங்கும், கொதிக்கும், அவருக்கான நட்ட ஈடை நிதியாக வசூலித்துக் கொடுக்கும்.

ஒரு மனிதனுடைய உயிரும் இன்னொரு மனிதனுடைய உயிரும் ஒன்றில்லை என்றாகிவிடுவது பற்றி நமக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.

அன்றாட வாழ்க்கையில் நீங்களும் நானும் எவ்வளவு பெரிய குற்றங்களை சுரணையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் கவனியுங்கள்.

அந்த சுரணையற்றதன்மையின் பின்னால் இருக்கும் உளவியலை தைரியமாக உற்று கவனியுங்கள்...

சமயம் கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள்.

இந்திய சாதி சமூக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ளலாம்....

வியாழன், 7 பிப்ரவரி, 2019

ராமதாஸ் ஓர் அரசியல் பிழை...


ராமதாஸ் ஓர் அரசியல்  பிழை...

இன்றைக்கு சமூகவலைதளங்களில் அதிகம் பேசபட்டிருக்கிறார் முன்பு பேசியவைகளை எல்லாம் மீண்டும் மீண்டும் எடுத்து பதிவிடுகிறார்கள் ..
கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் ..
கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும்... என்று பேசிய வசனங்கள் மீண்டும் ஒளியிழையை எடுத்து போட்டு பாவம் பாமககாரர்களை நெளிய செய்கிறார்கள் .. திமுக அதிமுகவோடு கூட்டணி இல்லையென எழுதி கையெழுத்து போட்டுதரவா என்றெல்லாம் கேட்கிறார் .. நாமெல்லாம் மறந்து போனதை சமூகவலைத்தளங்களில் இட்டு ராமதாஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக எண்ணினால் அது தவறு அவர் எப்போது அரசியலில் நேர்மையோடு நடந்திருக்கிறார் ..
ஜெயலலிதாவோடு பிணங்கி வெளியே வந்த போது அவர் சொன்ன வார்த்தை சுய தெளிவுள்ள எந்த மனிதனும் சொல்ல முடியாத வார்த்தை .. வன்னியர் சங்கமாக இருந்த போது தன் சமூக மக்களிடத்தில் நன்மதிப்பை நம்பிக்கையை பெற சத்தியம் செய்தார் .. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்ல மாட்டோம் என்ற உறுதிமொழியை தந்தார் .. தன்னை நம்புகிற வன்னிய சொந்தகளிடமே பொய் பேசி தன் நலன் தன் குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாய் செயல்படுபவர் .. பாமக என்பது வன்னியருக்கான கட்சி என்பது கூட தவறு .. அது ராமதாஸ் குடும்ப நலனுக்கான கட்சி அவ்வளவுதான் ..
..
திராவிட கட்சிகளோடு 102% விழுக்காடு கூட்டணி இல்லையென்றவர் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன என்று மாற்றம் முன்னேற்றம் என்று வகுப்பதெடுத்தவர் ..தன்னை மட்டுமே அறிவாளியாக எண்ணிக்கொண்டு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்றவர் .. தனித்துவிடப்பட்ட நிலையில் யாருமே கண்டுக்கொள்ளாமல் போக வேறுவழியின்றி தனக்கு எம்பி பதவியாவது கிடைக்காதா என்ற நப்பாசையில் எதையும் இழக்க தயார் என கேவலபட்டுநிற்கிறார் .. ஆரம்பகாலங்களில் 6% விழுக்காடு வாக்குவங்கி குறைந்து குறைந்து வடமாவட்டங்களில் செல்வாக்கை இழந்து கட்டிவச்சகாசை (டெபாசிட்) கூட இழந்த நிலையில் கட்சியின் அங்கீகாரம் பறிக்கபடுகிற நிலைக்கு ஆளாகி நிற்கிறார் .. பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர்களிடையே சாதிவெறியை தூண்டி .. தாழ்த்தபட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் அவர்களின் குடிசைகளை கொளுத்துதல் என இளைஞர்களை வழிகெடுத்து கட்டமைக்கபட்டது .. சாதிவெறி நீண்டநாள் கைகொடுக்காது என்பதை உணரவே இல்லை .. எப்போதெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சாதிவன்மத்தை தூண்டி குளிர்காய்ந்ததின் விளைவு சொந்த சமூகமக்களாலேயே புறக்கணிக்கபடுகிற சூழல் வந்தது .. சாதியோ மதமோ அரசியல் சிலகாலம் நிற்க உதவுமே தவிர நீண்டநாள் பயனிக்க முடியாது
..
இன்றைய  ட்விடில் ராமதாஸ்

https://twitter.com/drramadoss/status/1092679587027251201?s=19

நாடாளுமன்ற கூட்டணி குறித்து தவறான
தகவல்களை ஊடகங்கள் தருவதாக சொல்கிறார் யாரை திருப்திபடுத்த இதை செய்கின்றன என்கிறவர் ஊடகங்கள் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் தரகுவேலை பார்க்க கூடாதென்று ட்விட் செய்திருக்கிறார் ..
அறமென்றால் என்னவென்று தெரியுமா .. இவர் இதுவரை அரசியலில் எடுத்த நிலைபாடுகளும் அதற்காக அவர் சொன்ன காரணங்களும் அறம் சார்ந்துதான் இருந்ததா ..? அரசியலில் நெறிகெட்ட ஈன செயலை கூட கொஞ்சமும் கூச்சமின்றி செய்தது யார் அரசியலில் குறைந்தபட்ச நம்பிக்கையையாவது இனி கடைபிடித்திருக்கிறாரா
அடுத்தவர்களை பிற கட்சிகளை கொள்கை ரீதியாக எதிர்ப்பதென்பதில் தவறில்லை மாறி மாறி கூட்டணி வைப்பது கூட சரியான காரணவிடயங்காக இருக்கவேண்டும் சமூகசார்ந்த அக்கறையும் .. நாட்டின் நலனும் மக்கள் விரோத ஆட்சியை எதிர்க்க இருக்கவேண்டுமே தவிர .. சுயநலனுக்கானதாக மாறி மாறி சவாரி செய்தல் எப்படி அரசியல் நெறியாகும்
மொத்தத்தில் ராமதாஸ் நெறிகெட்ட அரசியல்வியாபாரி அவ்வளவுதான்..
..
#ராமதாஸ்_ஓர்_அரசியல்பிழை ..

ஆலஞ்சியார்