செவ்வாய், 22 ஜனவரி, 2019

லயோலாவில் வைக்கப்பட்ட ஓவியங்கள்...


லயோலாவில் வைக்கப்பட்ட ஓவியங்கள்...

லயோலாவில் வைக்கப்பட்ட ஓவியங்களை தற்போதுதான் முகநூல் வழியே பார்த்தேன். இவற்றைக் கண்டால் இந்துத்துத்துவ-சாதிய சனாதனிகளுக்கு பதற்றம் வரத்தான் செய்யும்.
ஓவியர் முகிலன் அவர்கள் வரைந்த ஓவியங்கள்.






















வெள்ளி, 18 ஜனவரி, 2019

உயர் சாதி பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது மிகபெரிய ஏமாற்று மோசடி


உயர் சாதி பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது மிகபெரிய ஏமாற்று மோசடி

FC என்றாலே பிராமணர்கள் மட்டும் கிடையாது.உண்மைதான், அதே நேரத்தில், மத்திய அரசின் உயர் பதவிகள் & வேலைகளை 80% ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், அனைத்து மாநில பிராமணர்கள் மட்டும் தான்... பிராமணர் அல்லாத பிற உயர் சாதிகள் கிடையாது.. அங்கு ஆதிக்கம் செலுத்துபவர்களின் பெயர்களை பார்த்தாலே தெரியும்.. ராய், ராவ், பட், ஐயர், ஐயங்கார், மேனன், முகர்ஜி, பேனர்ஜி, சேட்டர்ஜி, திரிபாதி, கோயல், தேஷ்முக், குல்கர்னி, தேஷ்பாண்டே, ஜோஷி, பரத்வாஜ், சின்ஹா, புரோஹித், சர்மா, உபாத்தியாயா, சுக்லா, ஆப்தே, பதக், தீட்சித், ஓஜா, மிஸ்ரா, திவாரி, கவுல், ஆச்சாரியா, பாண்டே, கோஸ்வாமி, சாஸ்திரி, பந்த், சாரி, காமத், மகாபாத்ரா, ஆப்தே, கோக்லே, வைத்யா, தியாகி, அன்கிஹோதரி... இது நீண்டுகொண்டே செல்லும்.. இவையெல்லாம், பல மாநிலங்கள் & மொழிகளை சேர்ந்த பிராமண சாதிகளின் பட்ட பெயர்கள்... இவர்கள் தான் மத்திய அரசின் உயர் பதவிகள் & வேலைகளை 80% ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள்.. அங்கே நாட்டுகோட்டை செட்டியாரோ, சைவ பிள்ளையோ கிடையாது..   

பிற முற்பட்ட சாதிகளான நாட்டுகோட்டை செட்டியார், சைவ வேளாளர், சைவ முதலியார், ரெட்டி, கம்மா, ஜாட், படேல், மராத்தா, குஜ்ஜர் போன்றவர்கள் இருகிறர்கள்.. ஆனால், முற்பட்ட பிரிவிலுள்ள எல்லா வகுப்புகளும் ஒரே சமூக & கல்வி நிலையில் கிடையாது.. உதாரணமாக, உயர் & உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய உயர் பதவிகளில் உயர் சாதியினர் 80% இருகிறார்கள் என்றால், இவற்றில் எத்தனைபேர் பிராமணர் அல்லாத பிற உயர் சாதியினர்??? மிக மிக குறைவு..

எனவே, பிராமணர்களுடன், பிற முற்பட்ட சாதிகளை ஒரே பிரிவாக சேர்த்து எத்தனை ஒதுக்கீடு கொடுத்தாலும், அத்தனையும் பிராமணர்களுக்கே செல்லும்.. முற்பட்ட பிரிவிலுள்ள மற்றவர்கள் நாக்கை தான் வழிக்க வேண்டும்.. ஏற்கனவே, அனைத்து மத்திய அரசு வேலை மற்றும் கல்விகளில் ஏறக்குறைய 65% சதவீதத்தை, மக்கள் தொகையில் வெறும் 5% கொண்டிருக்கும் வெகு சில உயர் சாதிகள் தானே ஆக்கிரமித்து இருக்காங்க.. அவர்களின் எண்ணிக்கையை விட பல பல மடங்கு அதிகமாக எல்லா வேலை & படிப்புகளில் இருந்துகிட்டு, இன்னும் இட ஒதுக்கீடு கேட்பது அநியாயமா இல்லையா??

எனவே மத்திய அரசு அறிவித்துள்ள, இதுவரை எந்த இடஒதுக்கீட்டு பட்டியலிலும் (SC/ST/MBC/BC/OBC) இடம் பெறாத உயர் சாதி பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது மிகபெரிய ஏமாற்று மோசடியாகும்.. அதேபோல, ஏழைன்னா எப்படி? மாச வருமானம் 66 ஆயிரதுக்குள்ள இருந்தா ஏழை.. இந்த கணக்குப்படி பாத்தா இந்தியாவில் இருக்கிற மக்கள் மக்கள் தொகையில் 90% சதவிகிதம் ஏழைகள் தான்.. அப்போ எப்படி 10% சதவீதத்தை எல்லோருக்கும் கொடுக்க முடியும்? அரசுகள் கையிலயும் வெறும் 5% சதவீத மக்களின் வருமான விவரங்கள்தான் அதிகாரபூர்வமாக இருக்கு.. நிலவரம் இப்படி இருக்கிறப்போ யாரை ஏமாற்ற இந்த நாடகம்.

வியாழன், 17 ஜனவரி, 2019

எம்.ஜி.ஆரின் தேசப்பற்று


எம்.ஜி.ஆரின் தேசப்பற்று

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.

1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?

‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.

‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!

அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.

ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.

வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.

‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.

இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்

சனி, 5 ஜனவரி, 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு போராளி


பிளாஸ்டிக் ஒழிப்பு போராளி...

காலையில் எழுந்து plastic lamitube ல் packing செய்யப்பட்ட tooth paste கொண்டு plastic toothbrush ல் பல் தேய்த்து, plastic water tank இருந்து plastic pipe  வரும் தண்ணீரில் plastic bucket mug கொண்டு முகம் கழுவி, காலை கடன் முடித்து, plastic pouch  வரும் பாலில் plastic pouchpack செய்யப்பட்ட காஃபி powder, சர்க்கரை சேர்த்து காபி குடித்து, Polyester stretch fibre track suit அணிந்து  polyurethane sole and polyester fibre கொண்டு செய்யப்பட்ட walking shoe வில் வாக்கிங் சென்று, plastic ன்னால் செய்யப்பட்ட tv ல் news பார்த்து, plastic bottle ல்  உள்ள ஷாம்பூ போட்டு குளித்து,, plastic bottle ல்  உள்ள எண்ணெய் தேய்த்து, plastic சீப்பினால் தலை சீவி, plastic container ல் உள்ள ‌powder போட்டு non stick tawa வில் plastic pouch வரும் தோசை மாவில் plastic pouch  வரும் எண்ணை ஊற்றி தோசை சாப்பிட்டு, விவசாயிகளிடம் இருந்தே Plastic Leno Bags மூட்டையில் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறியில் சமைத்த உணவை plastic Tupperware container ல் எடுத்து கொண்டு.
 Polyester blended shirt, trouser அணிந்து, polyurethane sole உள்ள ஷூ அணிந்து, கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட plastic parts and components கொண்டு தயாரிக்கப்பட்ட   காரில் அலுவலகம் சென்று, plastic ID CARD காண்பித்து, Polypropylene pile carpetting செய்யப்பட்ட office ல் பிளாஸ்டிக்  சேரில் அமர்ந்து பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்ட பல கம்ப்யூட்டரில் வேலை பார்த்து, plastic cup ல் Coffee குடித்து, Tetra Pak ல் pack செய்த Fruit juice குடித்து, பிளாஸ்டிக் பேனாவால் கையெழுத்து போட்டு, காலில் பட்ட சிறிய காயத்துக்கு டாக்டரிடம் சென்று plastic disposable syringe கொண்டு ஊசி‌ போட்டு விட்டு, plastic net mosquito screen ன்னால் cover செய்யப்பட்ட வீட்டில், Polyurethane surface coating செய்யப்பட்ட dinining டேபிள் ல் டின்னர் சாப்பிட்டு, POLYFOAM sofa வில் சாய்ந்து கொண்டு plastic remote கொண்டு டிவி பார்த்து, தலைவலிக்கு plastic  டப்பியில் உள்ள Amrutanjan எடுத்து தடவிக்கொண்டு, plastic  blister packaging உள்ள Crocin மாத்திரை போட்டு கொண்டு, Polyurethane spring bed மீது polyester blended bedsheet விரித்து polyester fibre pillow வைத்து  படுக்க போகும் முன், plastic கொண்டு செய்யப்பட்ட mobile phone ல் தனது  Facebook page ல் *SAY YES TO A PLASTIC FREE WORLD, பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம்* என்று status போட்டு விட்டு தூங்க சென்றான் பிளாஸ்டிக் ஒழிப்பு போராளி